என் மலர்
உள்ளூர் செய்திகள்

குமரி அனந்தனுக்கு 'தகைசால் விருது' - தமிழக அரசுக்கு விஜய் வசந்த் எம்.பி. நன்றி
- குமரி அனந்தன், இந்த ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- விருதுடன் ரூ,10 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், இந்த ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். சுதந்திர தின விழாவின்போது அவருக்கு இந்த விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுடன் ரூ,10 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.
இதுதொடர்பாக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் தமிழ் இலக்கியவாதியுமான எனது பெரியப்பா குமரி அனந்தன் அவர்களுக்கு அவர் சேவையை பாராட்டி தகைசால் விருதினை வழங்க முடிவு செய்த தமிழக அரசுக்கும் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்
Next Story






