என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவி உஷாபுண்ணியமூர்த்தி பேசினார்.
விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி ஏற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு பாராட்டு
- ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக பதவி ஏற்றுள்ள ஐ.பெரியசாமிக்கு வாழ்த்து தெரிவிப்பது ஆகிய 2 தீர்மானங்களை கொண்டு வந்து நிறைவேற்றினார்.
- மாவட்ட கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் உள்ள பிரச்சினைகளை எடுத்துரைத்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் பனகல் கட்டிடத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவி உஷாபுண்ணியமூர்த்தி தலைமை தாங்கினார்.
துணைத்தலைவர் முத்துச்செல்வம், ஊராட்சி செயலர் ராதாகிருஷணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அனைத்துக்கட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவி உஷா புண்ணியமூர்த்தி, தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி ஏற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு பாராட்டு மற்றும் வாழ்த்து தெரிவிப்பது, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக பதவி ஏற்றுள்ள ஐ.பெரியசாமிக்கு வாழ்த்து தெரிவிப்பது ஆகிய 2 தீர்மானங்களை கொண்டு வந்து நிறைவேற்றினார். அதைத்தொடர்ந்து மாவட்ட கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் உள்ள பிரச்சினைகளை எடுத்துரைத்தனர்.






