என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • லோக் அதாலத் எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது.
    • மாவட்டம் முழுவதும் மொத்தம் 11 அமர்வுகள் அமைக்கப்பட்டு 4,869 வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 1,396 வழக்குகளில் ரூ.6 கோடியே 92 லட்சத்து 55 ஆயிரத்து 657 மதிப்பில் தீர்வு காணப்பட்டது.

    சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, நீதிமன்றங்க ளில் தேங்கி கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக நேஷனல் லோக் அதாலத் எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது.

    கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்க ளிலும், ஓசூர், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, தேன்கனிக்கோட்டை நீதிமன்ற வளாகங்களில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் மக்கள் நீதிமன்றம் நடந்தது.

    கிருஷ்ணகிரியில் நடந்த மக்கள் நீதிமன்றத்திற்கு மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரு மான சக்திவேல் தலைமை வகித்தார்.

    கூடுதல் மாவட்ட நீதிபதி மோனிகா, நிரந்தர மக்கள் நீதி மன்ற தலைவர் வேல்முருகன், தலைமை குற்றவியல் நடுவர் ராஜசிம்மவர்மன், முதன்மை சார்பு நீதிபதி செந்தில்குமார் ராஜவேல், சிறப்பு சார்பு நீதிபதி இந்துலதா மற்றும் வழக்குகளை நடத்துபவர்கள், வக்கீல்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இந்த மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகள், காசோலை வழக்குகள், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோரும் வழக்குகள், வங்கிகள் மற்றும் தொழிலாளர் நல வழக்குகள், நிலுவையில் உள்ள பரஸ்பரம் பேசி தீர்த்து கொள்ள கூடிய குற்றவியல் வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. மாவட்டம் முழுவதும் மொத்தம் 11 அமர்வுகள் அமைக்கப்பட்டு 4,869 வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதில் 1,396 வழக்குகளில், ரூ.6 கோடியே 92 லட்சத்து 55 ஆயிரத்து 657 மதிப்பில் சமரசமாக தீர்வு காணப்பட்டது.

    • மாணவ மாணவிகள் சுமார் 72 பேருக்கு மேல் கலந்துகொண்டு தங்களது திறமைகளை சிலம்பொலி ஆசிரியர் முன்பு செய்து காட்டினர்.
    • சேலம் சிலம்ப ஆசிரியர் ரத்தினகுமார் தலைமை தாங்கி மாணவர்களுக்கு சான்றிதழுடன் மஞ்சள் நிற பெல்ட் வழங்கினார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தனியார் திருமண மண்டபத்தில் சிலம்பொலி வகராவின் சிலம்பொலி பயிற்சி முகாம் நடைபெற்றது.

    இவ்விழாவில் ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதியில் உள்ள மாணவ மாணவிகள் சுமார் 72 பேருக்கு மேல் கலந்துகொண்டு தங்களது திறமைகளை சிலம்பொலி ஆசிரியர் முன்பு செய்து காட்டினர். அவர்களுக்கு தகுதிச்சான்று, சிலம்பம், மஞ்சள் கலர் பெல்ட் வழங்கப்பட்டது.

    சேலம் சிலம்ப ஆசிரியர் ரத்தினகுமார் தலைமை தாங்கி மாணவர்களுக்கு சான்றிதழுடன் மஞ்சள் நிற பெல்ட் வழங்கினார்.

    விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக சிலம்ப ஆசிரியர்கள் சீனிவாசன், சிவா, சூர்யா, சிலம்பமுதன் கலந்து கொண்டு சிறப்பு சேர்த்தனர்.

    விழாவில் கணேசன் ஆசிரியர் எம்.எஸ். அகாடமி சுரேஷ், தீயணைப்புத்துறை முனுசாமி, எஸ்.பி.ஜ. வங்கி மேலாளர் ராஜகுமாரன், ஒய்.எஸ். ஏ. நண்பர்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். சிலம்பக்கலை ஆசிரியர் சதாசிவம் நன்றி கூறினார்.

    விழா ஒருங்கிணைப்பாளர் வீரமணி, ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    • கோ- கோ சாம்பியன்ஷிப் போட்டிகள், கடந்த 3 நாட்களாக நடைபெற்றது.
    • வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ஒசூர் மாவட்டக் கல்வி அலுவலர் முனிராஜ், புனித ஜான் போஸ்கோ பள்ளிகளின் தாளாளர் சகோதரி ஏஞ்சலா ஆகியோர் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கி கவுரவித்தனர்.

    ஓசூர், 

    ஓசூர் ஜான் போஸ்கோ மகளிர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், 40-வது மாநில அளவிலான, 18வயதுக்குட்பட்ட இளையோர் பிரிவு மாணவிகளுக்கான கோ- கோ சாம்பியன்ஷிப் போட்டிகள், கடந்த 3 நாட்களாக நடைபெற்றது.

    நேற்று நடந்த இறுதிப் போட்டியில், சிவகங்கை மாவட்டமும் கிருஷ்ணகிரி வடக்கு மாவட்டமும் கலந்து கொண்டன. சிவகங்கை மாவட்டம் முதலிடத்தையும், கிருஷ்ணகிரி வடக்கு மாவட்டம் இரண்டாமிடத்தையும், கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்கள் மூன்றாமிடத்தையும் வென்றன. கிருஷ்ணகிரி வடக்கு மாவட்ட அணியைச் சேர்ந்த மாலா, சேசர் பட்டத்தையும், இன்பதமிழரசி ஆல்ரவுண்டர் பட்டத்தையும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஜாய்ஸ் டிபென்டர் பட்டத்தையும் வென்றனர்.

    பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில், வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ஒசூர் மாவட்டக் கல்வி அலுவலர் முனிராஜ், புனித ஜான் போஸ்கோ பள்ளிகளின் தாளாளர் சகோதரி ஏஞ்சலா ஆகியோர் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கி கவுரவித்தனர்.

    மேலும் இதில், ஓசூர் சிப்காட் பிரைடு அரிமா சங்க தலைவர் மல்லேஷ், மேற்கு மாவட்ட பா.ஜ.க.தலைவர் நாகராஜ், மாநில கோகோ கழக பொதுச்செயலாளர் நெல்சன் சாமுவேல், ஓசூர் போக்குவரத்த புலனாய்வு பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் சக்திவேல், மாநகராட்சி கவுன்சிலர்கள் பார்வதி, இந்திராணி, பாக்யலட்சுமி, காங்கிரஸ் நிர்வாகி சத்யமூர்த்தி மற்றும் ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

    • ராயக்கோட்டையில் பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • அப்போது போலீசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை பாஞ்சாலி நகரை சேர்ந்தவர் குமார். இவருடைய மகன் பாலாஜி வயது 15. அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

    கடந்த 15-ம் தேதி வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்ற மாணவன் மாயமானார். இது தொடர்பாக மாணவனின் தாய் கவிதா கொடுத்த புகாரின்பேரில் ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்நிலையில் மாணவனை மீட்க போலீசார் அலட்சியம் காட்டுவதை கண்டித்து ராயக்கோட்டையில் உள்ள 4 ரோடு அண்ணா சிலை அருகே பாரதிய ஜனதா கட்சி மற்றும் மாணவனின் உறவினர்கள், பா.ஜக. மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ், மாவட்ட பொதுச்செயலாளர் அன்பரசு, பொருளாளர் சீனிவாசலு ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களிடம் பேசிய போலீசார் இரு நாட்களில் மாணவனை மீட்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

    இதனால் ஆர்ப்பாட்ட த்தை கைவிட்டனர். மாவட்ட மகளிரணி தலைவி மஞ்சுளா, நெசவாளர் அணி மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன், கிழக்கு ஒன்றிய தலைவர் நவநீதகிருஷ்ணன், மேற்கு ஒன்றிய தலைவர் சந்துரு, முன்னாள் ஒன்றிய செயலாளர் பிரவீன் தர்ஷன்குமார், தமிழ் வளர்ச்சி ஒன்றிய தலைவர் கோவிந்தராஜ் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • கிருஷ்ணகிரி அருகே பெண்ணிடம் நகை பறி த்துள்ளனர்.
    • அப்போது திருடர்கள் அவரை தாக்கினர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் போலீஸ் சரகம் சிவசக்தி நகரை சேர்ந்தவர் ராஜு. இவரது மனைவி யசோதா(43). இவர் கடைக்கு பொருட்கள் வாங்க சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு நடந்து வந்துக்கர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 23 வயதுடைய 2 மர்ம ஆசாமிகள் யசோதாவின் அருகில் வந்ததும் அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிவிட்டனர்.

    நகையை காப்பாற்ற அவர்களுடன் போராடிய போது திருடர்களால் தாக்கப்பட்டு தடுமாறி கீழே விழுந்த யசோதா காயமடைந்தார்.

    ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட யசோதா தந்த புகாரின் பேரில் ஓசூர் டவுன் போலீசார் வழக்கு பதிந்து மர்ம திருடர்களை தேடி வருகின்றனர்.

    • மத்திகிரி அருகே வீடு புகுந்து திருடியவன் சிக்கினான்.
    • 5 செல்போன்கள் அவனிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி போலீஸ் சரகம் பொம்மண்ட ஹள்ளி சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன்.

    இவரது மகன் கோகுலக்கண்ணன். இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி போலீஸ் சரகம் பொம்மண்ட ஹள்ளி பகுத்தியில் வாடகைக்கு அறை எடுத்தது தங்கி ஓசூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர் அறையில் படுத்து தூங்கி கொண்டிருந்த போது ஒரு மர்ம ஆசாமி நைசாக உள்ளே புகுந்து அறையில் வைக்கப்பட்டிருந்த கொடுக்கண்ணன் மற்றும் அவரது நண்பர்களின் 5 விலை உயர்ந்த செல்போன்களை திருடியுள்ளான்.

    சத்தம் கேட்டு எழுந்த கோகுலக்கண்ணன் அந்த ஆசாமியை மடக்கிப்பிடித்து மத்திகிரி போலீசில் ஒப்படைத்தார்.

    போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட ஆசாமி திருப்பத்தூர் மாவட்டம் அழுந்தூரை சேர்ந்த பிலிப்(20) என்பது தெரியவந்தது.

    அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

    • கிருஷ்ணகிரியில் பழமை வாய்ந்த சிவன் கோவிலில் வழிபாடு நடந்தது.
    • பக்தர்கள் திருவாசகம் பாடினர்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியான சூளகிரி-பேரிகை சாலையில்வாணியர் தெருவில் பல நூற்றாண்டு பழைமை வாய்ந்த சிவன் கோயில் உள்ளது.

    ஆண்டு தோறும் கார்த்திகை பூஜை செய்து பொது மக்களிடம் காணிக்கைகள் வாங்கி நடைபயணமாக சென்று சூளகிரியில் உள்ள பெரியமலை மீது கார்த்திகை தீபம் ஏற்றி வழிபடுவர்.பின்னர் சிறப்பு பூஜைகளும் நடைபெறும். இன்று திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடக்கிறது. திரளான சிவபக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். 

    • ஓசூர் மாநகராட்சியில் தூய்மை பணிகள் இயக்கம் தொடங்கியது.
    • துணை மேயர் அதை தொடங்கி வைத்தார்.

    ஓசூர்,

    ஓசூர் வார்டு பகுதிகளில் "எனது குப்பை எனது பொறுப்பு" என்ற மாநகரத்தின் தூய்மைக்கான மக்கள் இயக்க திட்டத்தின் கீழ் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    ஓசூர் மாநகராட்சி 7-வது வார்டுக்குட்பட்ட ஆவலப்பள்ளி ஹட்கோ, 23-வது வார்டை சேர்ந்த பழைய ஏ.எஸ்.டி.சி.ஹட்கோ உள்ளிட்ட இடங்களில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஒசூர் மாநகர துணை மேயர் ஆனந்தய்யா தலைமை தாங்கி, தூய்மைப்பணிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பொதுமக்க ளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் அவர் விநியோகித்தார்.

    மேலும் நிகழ்ச்சி யின்போது, பொதுமக்க ளுக்கு, மக்கும் குப்பை, மக்காத குப்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில், மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் கவுன்சிலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் கிரி, அன்பழகன் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • கிருஷ்ணகிரி அருகே புதிய தார் சாலை அமைக்கும் பனி தொடங்கியது.
    • ஒசூர் எம்.எல்.ஏ . இந்த பணியை தொடங்கி வைத்தார்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி ஒன்றியம் எ.செட்டிப்பள்ளி ஊராட்சி கொரகுறுக்கி கிராமத்தில் 82.75 லட்சம் மதிப்பில் புதிய தார்சாலை அமைக்க பூமி ஜை நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் கிரிஜா நாகராஜ் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஒசூர் சட்டமன்ற உறுப்பினர்பிரகாஷ் ,வடக்கு சூளகிரி வடக்குஒன்றிய செயலாளர் நாகேஷ், பி. டி.ஒ. சிவக்குமார், முன்னாள் வேப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் முருகன் மற்றும் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சீனிவாசன் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர் புஷ்பா சீனிவாசன், ஊர்பிர முகர்கள்,சீதாராமைய்யா, லகுமநாயுடு ஜெகதீஸ் மற்றும் ஊர்கவுண்டர்கள் கலந்துக் கொண்டனர்.

    • ஓசூரில் மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகி பேட்டியளித்தார்.
    • அக்னிபாத் திட்டத்துக்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில், நபிகள் நாயகத்தை அவதூறாக பேசிய நுபுர் சர்மா, ஜிண்டால் ஆகியோரை கண்டித்தும், அவர்களை கைது செய்ய வலியுறுத்தியும், உ.பி-யில் இவர்களுக்கு எதிராக ஜனநாயக வழியில் போராடிய மக்களின் வீடுகளை இடித்து தரைமட்டமாக்கியதாக பா.ஜ.க. அரசை கண்டித்தும் கிருஷ்ணகிரி மாவட்ட மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் ஓசூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் முகமது ஆரிப் தலைமை தாங்கினார்.

    மாவட்ட பொருளாளர் சையத் நவாஸ், மாநில செயற்குழு உறுப்பினர் அமீன் சிக்கந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில்,கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தமிமுன் அன்சாரி, கண்டன உரையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தில், கட்சி நிர்வாகிகள், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் இக்ரம் அகமது மற்றும் சையத் நிசார் உள்ளிட்டோர் திரளாக கலந்துகொண்டனர்.ஆர்ப்பாட்டத்தின்போது, பா.ஜ.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. முடிவில், மாநகர செயலாளர் முகமது உமர் நன்றி கூறினார்.

    பின்னர், தமிமுன் அன்சாரி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: -மத வெறியை தூண்டுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அக்னி பாத் என்பது இந்திய ராணுவத்தின் கவுரவத்தை சீர்குலைக்கும் செயலாகும். இதனை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.

    • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா பரவுகிறது.
    • ஒரே நாளில் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா முதல் அலையிலும், 2-வது அலையிலும், 3-வது அலையிலும் ஏராளமான வர்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் தற்போது கொரோனா மீண்டும் பல்வேறு இடங்களில் பரவி வருகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதுவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 59 ஆயிரத்து 683 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 59 ஆயிரத்து 290 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். தற்போது 23 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதுவரை சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 370 ஆக உள்ளது.

    • ஓசூர் சிப்காட் பூங்காவில் தொழில் புத்தாக்க மையம் திறக்கப்பட்டது.
    • கலெக்டர் நேரில் பார்வையிட்டார்.

    ஓசூர்,

    ஓசூர் சிப்காட் தொழிற்பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள சிப்காட் தொழில் புத்தாக்க மையத்தில் மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி குத்துவிளக்கேற்றி வளாகத்தை பார்வையிட்டார்.

    நிகழ்ச்சிக்கு, ஓசூர் எம்.எல்.ஏ.ஒய்.பிரகாஷ் முன்னிலை வகித்தார். ஒசூர் சிப்காட் தொழிற்பூங்காவில் மொத்தம் 363 தொழிற்சாலைகள் உள்ளன.

    மேலும் அந்த தொழிற்சாலைகள் ரூ. 12,655 கோடி முதலீடு செய்து அதில் 33,000 தொழிலாளர்கள் வேலைவாய்ப்பில் உள்ளனர். இந்த மையத்தின் நோக்கமானது தொழிற்சாலைகளுக்கு தேவையான தொழிலை மேம்படுத்துவதற்காக கோவையை சேர்ந்த "போர்ட்ஜ்" என்ற நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து தொழில்நுட்ப உதவிகளை வழங்கவுள்ளதா, கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில், சிப்காட் திட்ட அலுவலர் வெங்கடேசன், உதவி பொறியாளர் ரேணுகா உள்ளிட்ட அதிகாரிகளும், தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

    ×