என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊத்தங்கரையில்   சிலம்பு பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்
    X

     ஊத்தங்கரையில் நடைபெற்ற சிலம்பொலி பயிற்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு தகுதிச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    ஊத்தங்கரையில் சிலம்பு பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்

    • மாணவ மாணவிகள் சுமார் 72 பேருக்கு மேல் கலந்துகொண்டு தங்களது திறமைகளை சிலம்பொலி ஆசிரியர் முன்பு செய்து காட்டினர்.
    • சேலம் சிலம்ப ஆசிரியர் ரத்தினகுமார் தலைமை தாங்கி மாணவர்களுக்கு சான்றிதழுடன் மஞ்சள் நிற பெல்ட் வழங்கினார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தனியார் திருமண மண்டபத்தில் சிலம்பொலி வகராவின் சிலம்பொலி பயிற்சி முகாம் நடைபெற்றது.

    இவ்விழாவில் ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதியில் உள்ள மாணவ மாணவிகள் சுமார் 72 பேருக்கு மேல் கலந்துகொண்டு தங்களது திறமைகளை சிலம்பொலி ஆசிரியர் முன்பு செய்து காட்டினர். அவர்களுக்கு தகுதிச்சான்று, சிலம்பம், மஞ்சள் கலர் பெல்ட் வழங்கப்பட்டது.

    சேலம் சிலம்ப ஆசிரியர் ரத்தினகுமார் தலைமை தாங்கி மாணவர்களுக்கு சான்றிதழுடன் மஞ்சள் நிற பெல்ட் வழங்கினார்.

    விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக சிலம்ப ஆசிரியர்கள் சீனிவாசன், சிவா, சூர்யா, சிலம்பமுதன் கலந்து கொண்டு சிறப்பு சேர்த்தனர்.

    விழாவில் கணேசன் ஆசிரியர் எம்.எஸ். அகாடமி சுரேஷ், தீயணைப்புத்துறை முனுசாமி, எஸ்.பி.ஜ. வங்கி மேலாளர் ராஜகுமாரன், ஒய்.எஸ். ஏ. நண்பர்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். சிலம்பக்கலை ஆசிரியர் சதாசிவம் நன்றி கூறினார்.

    விழா ஒருங்கிணைப்பாளர் வீரமணி, ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×