என் மலர்
கிருஷ்ணகிரி
- குழந்தைக்கு பாட்டில் மூலம் பால் கொடுக்கும் போது மூச்சுதிணறல் ஏற்பட்டது.
- போகும் வழியிலேயே அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூர் அருகே முதுகனப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவருக்கு 2 வயதில் மனோஜ்குமார் என்ற மகன் உள்ளார்.
இந்த நிலையில் நேற்று குழந்தைக்கு பாட்டில் மூலம் பால் கொடுக்கும் போது மூச்சுதிணறல் ஏற்பட்டது. இதனால் அந்த குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து பாகலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாநகராட்சி பூங்கா பகுதியில் 1,000 எலுமிச்சை மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.
- நிகழ்ச்சிக்கு, டைட்டான் நிறுவனத்தின் மூத்த துணைத்தலைவர் ஆர்.ராஜகோபாலன் தலைமை தாங்கி எலுமிச்சை மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
ஓசூர்,
ஓசூர் மாநகராட்சியுடன், டைட்டான் கைகடிகார நிறுவனம் இணைந்து எலுமிச்சை மர பூங்கா - 1000 (நீம் டிரி பார்க்-1000) என்ற திட்டத்தை செயல்படுத்துகிறது.
இந்த திட்டத்தின் கீழ், ஓசூர் ராமநாயக்கன் ஏரி பின்புறம், மாநகராட்சி பூங்கா பகுதியில் 1,000 எலுமிச்சை மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, டைட்டான் நிறுவனத்தின் மூத்த துணைத்தலைவர் ஆர்.ராஜகோபாலன் தலைமை தாங்கி எலுமிச்சை மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
மேலும் இதனை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். இதில் சிறப்பு விருந்தினராக, ஓசூர் அரிமா சங்க மூத்த தலைவர் ஒய்.வி.எஸ்.ரெட்டி கலந்து கொண்டு பேசினார். மேலும் நிகழ்ச்சியில், டைட்டான் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் நிறுவன ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- மாணவர்கள் விடுதி, தெருக்கள் உள்ளிட்ட வைகளை தூய்மை படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
- இந்த முகாமில் தலைமை ஆசிரியர் முருகன் தலைமை வகித்தார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவாட்டம் போச்சம்பள்ளி அருகேயு ள்ள நாகரசம்பட்டியில் இயங்கி வரும் பெரியார் ராமசாமி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடந்தது.
இந்த முகாமில் மாணவர்கள் நாட்டு நலப்பணி திட்டத்தில் உள்ள 25 -க்கும் மேற்ப்ப ட்ட மாணவர்கள் பொது சேவையில் ஈடுபட்டு பள்ளி வளாகம் மற்றும் மாணவர்கள் விடுதி, தெருக்கள் உள்ளிட்ட வைகளை தூய்மை படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் முன்னதாக பள்ளியில் அறிமுக விழா நடைபெற்றது. இதில் இப்பகுதியில் உள்ள கால்நடைகளுக்கு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.
இதில் கால்நடை மருத்துவர் மணிமேகலை கலந்து கொண்டு 100-க்கும் மேற்ப்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தினார்.
தொடர்ந்து கால்நடைகளை எவ்வாறு பராமரிப்பு செய்வது மற்றும் தற்போதைய சிதோசன நிலைக்கு கால்நடைகளை எவ்வாறு காப்பது என்று பொதுமக்களிடையே தெளிவாக எடுத்துரைத்தார்.
இந்த முகாமில் தலைமை ஆசிரியர் முருகன் தலைமை வகித்தார். திட்ட அலுவலர் பெரமன் முன்னிலை வகித்து முகாமிற்கான ஏற்பாடுகளை செய்து மாணவர்களை வழிநடத்தினார்.
உதவி திட்ட அலுவலர் சங்கர் வரவேற்றார், இதில் பேரூராட்சி கவுன்சிலர் ரமேஷ், பட்டதாரி ஆசிரியர்கள் மூர்த்தி, எல்லம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பள்ளி வளாகத்தில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் மாணவர்கள் பெற்றோர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
- மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.
- இதில் மனமுடைந்து காணப்பட்ட யசோதா நேற்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரபள்ளி அடுத்துள்ள சிந்துகும்மனபள்ளி பகுதியை சேர்ந்தவர் முனிராஜ். இவரது மனைவி யசோதா (வயது26). இவருக்கும், இவரது மாமியாருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதில் மனமுடைந்து காணப்பட்ட யசோதா நேற்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து குருபரபள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- பாரதிதாசன் நகரில் கஞ்சா விற்றதாக ஓசூர் தர்கா பகுதியை சேர்ந்த ஹரிஷ், ரிஷி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடந்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பாரதிதாசன் நகரில் கஞ்சா விற்றதாக ஓசூர் தர்க்கா பகுதியை சேர்ந்த ஹரிஷ், ரிஷி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதான அவர்களிடம் இருந்து 1000 மதிப்புள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- கொலை வழக்கில் ஆறு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
- எஸ்.ஐ சித்ராவின் கள்ளக்காத லரான கமல் ராஜன் நண்பரை ஊத்தங்கரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் முன்னாள் போலீஸ்காரர் செந்தில்குமார் கொலை வழக்கில் ஆறு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் எஸ்.ஐ சித்ராவின் கள்ளக்காத லரான கமல் ராஜன் நண்பர் பாவக்கல் பகுதியைச் சேர்ந்த ராமன் மகன் சென்னக்கிருஷ்ணன் (வயது30) என்பவரை ஊத்தங்கரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
சென்னகிருஷ்ணனும் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சென்ன கிருஷ்ணனிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- இந்த நிலையில் கடந்த 24-ந்தேதி அன்று பாரதிக்கு வலிப்பு நோய் ஏற்பட்டது.
- அவரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனபள்ளி அடுத்துள்ள ராமசந்திரம் பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மனைவி பாரதி (வயது29). இவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 24-ந்தேதி அன்று பாரதிக்கு வலிப்பு நோய் ஏற்பட்டது. இதனால் பதறி போன குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பாரதி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கட்சியின் 138-வது தொடக்க நாள் விழா நேற்று ஓசூரில் கொண்டாடப்பட்டது.
- இதையொட்டி, ஓசூர் எம். ஜி.ரோட்டில் உள்ள காந்தி சிலைக்கு மாவட்ட தலைவர் எஸ்.ஏ. முரளிதரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், கட்சியின் 138-வது தொடக்க நாள் விழா நேற்று ஓசூரில் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, ஓசூர் எம். ஜி.ரோட்டில் உள்ள காந்தி சிலைக்கு மாவட்ட தலைவர் எஸ்.ஏ. முரளிதரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும், தொடர்ந்து கட்சி அலுவலகம் முன்பு கட்சிக்கொடி ஏற்றி வைத்தார். பின்னர்,கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில், கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
- மேயர் சத்யா, நேற்று சமுதாயக்கூடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- சமுதாய கூடத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
ஓசூர்,
ஓசூர் மாநகராட்சி 45-வது வார்டுக்குட்பட்ட மத்திகிரி பகுதியில், நீண்ட நாட்களாக சமுதாயக்கூடம் மக்கள் பயன்பாட்டிற்கு இல்லாமல் பூட்டிய நிலையில், பராமரிக்கப்படாமல் இருந்து வருகிறது.
இது சம்பந்தமாக, மேயர் சத்யாவுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதன் அடிப்படையில் மேயர் சத்யா, நேற்று சமுதாயக்கூடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் சமுதாய கூடத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த நிகழ்வின்போது, துணை மேயர் ஆனந்தய்யா, மாநகராட்சி பொறியாளர் ராஜேந்திரன், மாமன்ற உறுப்பினர் கலாவதி மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- ரூ.1.29 லட்சம் மதிப்பில் உடைகள் மற்றும் புத்தகப் பைகளை ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் அப்பள்ளி குழந்தைகளுக்கு வழங்கினார்.
- இதுவரை ரூ.9.93 லட்சம் மதிப்பிலான கல்வி சேவைகளை இப்பள்ளிக்கு வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி,
மகளிர் மேம்பாட்டுப் பணிகளை முதன்மைப் பணியாக மேற்கொண்டுள்ள ஐ.வி.டி.பி நிறுவனம் சமூகத்தின் பல்வேறு தரப்பு மக்களின் தேவைகளையும் சிறப்பாக குழந்தைகள், முதியோர் தொடர்பான பணிகளையும் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம், அத்திமுகம் கிராமத்தில் அரசு மற்றும் சகோதரிகளால் இணைந்து நடத்தப்படும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிடப்பள்ளி குழந்தைகளுக்கு பல்வேறு கல்விச் சேவைகளை ஐ.வி.டி.பி நிறுவனம் வழங்கி வருகிறது.
இருளர், நரிக்குறவர் இனத்தை சேர்ந்த பள்ளிச் செல்லாக் குழந்தைகள் என 126 குழந்தைகள் இவ்வுறைவிடப் பள்ளியில் தங்கி சிறப்புக் கல்வி பயின்று வருகின்றனர்.
இம்மாணவர்களின் உடல் நலன் கருதியும், கல்வி நலனுக்காகவும் அப்பள்ளியில் பயிலும் 126 குழந்தைகளுக்கு ரூ. 72450-மதிப்பில் குளிர் கால உடைகள் மற்றும் ரூ. 56650- மதிப்பில் புத்தகப்பைகள் என மொத்தம் ரூ.1.29 லட்சம் மதிப்பில் உடைகள் மற்றும் புத்தகப் பைகளை ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் அப்பள்ளி குழந்தைகளுக்கு வழங்கினார்.
இந்நிகழ்வில் உதவிகளை வழங்கி பேசிய ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர் இப்பள்ளியின் வளர்ச்சிக்காகவும், குழந்தைகளின் கல்வி நலனுக்காகவும் ஐ.வி.டி.பி நிறுவனம் இதுவரை ரூ.9.93 லட்சம் மதிப்பிலான கல்வி சேவைகளை இப்பள்ளிக்கு வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
- கவுரம்மா, மாட்டினை பழுதடைந்த கட்டிடத்திற்கு அருகே கட்ட முயன்றார்.
- ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கவுரம்மா பரிதாபமாக உயிரிழந்தார்.
ஓசூர்,
ஓசூர் அந்திவாடியை சேர்ந்த கூலி தொழிலாளி நஞ்சுண்டப்பா என்பவரது மனைவி கவுரம்மா (வயது 38). இவர்கள் வீட்டில் பசு மாடுகளை வளர்த்து வருகின்றனர்.
ஓசூரில் நேற்று காலை முதல் தொடர்ந்து சாரல் மழை பெய்து வந்த நிலையில், அந்திவாடி பகுதியில் விவசாய நிலத்திற்கு அருகில் உள்ள ஒரு தனியார் லே அவுட்டில் பசு மாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டி சென்ற கவுரம்மா, மாட்டினை பழுதடைந்த கட்டிடத்திற்கு அருகே கட்ட முயன்றார்.
அப்போது அந்த கட்டிடத்தில் துண்டிக் கப்படாத மின் மீட்டர் மூலம் நிலத்திற்கு அமைக்கப் பட்டுள்ள எர்த் வயரை எதிர்பாராத விதமாக தொட்டதில் அவர் தூக்கி வீசப்பட்டார். உடனடியாக அவரை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கவுரம்மா பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது உடலை மத்திகிரி போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இந்திய கண்டம் முழுவதும் விரவிக் காணப்படுவது திருப்பாவை வழிபாடு.
- தினந்தோறும் ஒவ்வொரு வகுப்பு மாணவர்களால் பாசுரங்கள் பாடப்பட்டு வருகின்றது.
மத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூரில் பூமகள் அம்சமாக துளசி வனத்தில் பெரியாழ்வாரால் கண்டெடுக்கப்பட்டு வளர்த்த சூடிக்கொடுத்த சுடர்கொடியான ஆண்டாள் நாச்சியார் அருளியது திருப்பாவை ஆகும்.
வைகுந்த நாதனின் வழிபாட்டில் இந்திய கண்டம் முழுவதும் விரவிக் காணப்படுவது திருப்பாவை வழிபாடு.
அத்தகைய சிறப்பு வழிபாட்டின் தொடக்க நிகழ்வாக மார்கழி மாதம் முதல் நாளைத் தொடர்ந்து ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியில் பாசுரங்கள் பாடி தமிழ்த்துறை ஆசிரியர்கள் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.
தினந்தோறும் ஒவ்வொரு வகுப்பு மாணவர்களால் பாசுரங்கள் பாடப்பட்டு வருகின்றது .பள்ளி தாளாளர் சீனி திருமால் முருகன், பள்ளி முதல்வர் லீனா ஜோசப் ஆகியோர் வழிபாட்டில் கலந்து கொண்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள், துப்புரவு பணியாளர்கள் ஆகியோருக்கு பிரசாதம் அளித்து வாழ்த்தி வருகின்றனர்.






