என் மலர்
உள்ளூர் செய்திகள்

கவுரம்மா
ஓசூரில் மின்சாரம் தாக்கி பெண் சாவு
- கவுரம்மா, மாட்டினை பழுதடைந்த கட்டிடத்திற்கு அருகே கட்ட முயன்றார்.
- ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கவுரம்மா பரிதாபமாக உயிரிழந்தார்.
ஓசூர்,
ஓசூர் அந்திவாடியை சேர்ந்த கூலி தொழிலாளி நஞ்சுண்டப்பா என்பவரது மனைவி கவுரம்மா (வயது 38). இவர்கள் வீட்டில் பசு மாடுகளை வளர்த்து வருகின்றனர்.
ஓசூரில் நேற்று காலை முதல் தொடர்ந்து சாரல் மழை பெய்து வந்த நிலையில், அந்திவாடி பகுதியில் விவசாய நிலத்திற்கு அருகில் உள்ள ஒரு தனியார் லே அவுட்டில் பசு மாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டி சென்ற கவுரம்மா, மாட்டினை பழுதடைந்த கட்டிடத்திற்கு அருகே கட்ட முயன்றார்.
அப்போது அந்த கட்டிடத்தில் துண்டிக் கப்படாத மின் மீட்டர் மூலம் நிலத்திற்கு அமைக்கப் பட்டுள்ள எர்த் வயரை எதிர்பாராத விதமாக தொட்டதில் அவர் தூக்கி வீசப்பட்டார். உடனடியாக அவரை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கவுரம்மா பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது உடலை மத்திகிரி போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






