மத்திகிரி பகுதியில்சமுதாயக்கூடத்தை மேயர் ஆய்வு

மேயர் சத்யா, நேற்று சமுதாயக்கூடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.சமுதாய கூடத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மத்திகிரி பகுதியில்சமுதாயக்கூடத்தை மேயர் ஆய்வு
Published on

ஓசூர்,

ஓசூர் மாநகராட்சி 45-வது வார்டுக்குட்பட்ட மத்திகிரி பகுதியில், நீண்ட நாட்களாக சமுதாயக்கூடம் மக்கள் பயன்பாட்டிற்கு இல்லாமல் பூட்டிய நிலையில், பராமரிக்கப்படாமல் இருந்து வருகிறது.

இது சம்பந்தமாக, மேயர் சத்யாவுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதன் அடிப்படையில் மேயர் சத்யா, நேற்று சமுதாயக்கூடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் சமுதாய கூடத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த நிகழ்வின்போது, துணை மேயர் ஆனந்தய்யா, மாநகராட்சி பொறியாளர் ராஜேந்திரன், மாமன்ற உறுப்பினர் கலாவதி மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com