என் மலர்
கிருஷ்ணகிரி
- தொடர்ந்து உதவி கலெக்டர் தலைமையில் அனைவரும் பசுமை உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
- அணை பூங்கா வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை பூங்காவில் மீண்டும் மஞ்சப்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நீர், காற்று மற்றும் நிலம், பிளாஸ்டிக் மாசில்லாத தமிழகத்தை உருவாக்க, அணை பூங்காவில் உள்ள கழிவு குப்பைகளை அகற்றும் பணி நடந்தது. இந்த பணியை கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் பாபு தொடங்கி வைத்தார். தொடர்ந்து உதவி கலெக்டர் தலைமையில் அனைவரும் பசுமை உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். ஆணை பூங்கா வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
இந்த நிகழச்சியில் துணை கலெக்டர் (பயிற்சி) தாட்சாயிணி, தாசில்தார் சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சக்தி நகர், ராகவேந்திரா காலனி உள்ளிட்ட பகுதிகளில் மாநகர மேயர் அதிகாரிகளுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
- சாக்கடை கால்வாய், சாலை, குடிநீர் வசதிகள் ஒவ்வொரு பகுதியாக செய்து முடிக்கப்படும் என உறுதியளித்தார்
கிருஷ்ணகிரி,
ஒசூர் மாநகராட்சி, 7,8 வது வார்டுக்குட்பட்ட மூவேந்தர் நகர், ஆவலப்பள்ளி அட்கோ, ஜெ.ஜெ.,நகர், ரெயின்போ கார்டன், சக்தி நகர், ராகவேந்திரா காலனி உள்ளிட்ட பகுதிகளில் மாநகர மேயர் அதிகாரிகளுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அப்பகுதி மக்களின் சாக்கடை கால்வாய், குடிநீர், சாலை உள்ளிட்ட குறைகளை கேட்டறிந்து, அவற்றை மனுக்களாக பெற்றுக்கொண்டார்.ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெருவிளக்கு பிரச்னைகள் உடனடியாக தீர்க்கப்படும் என உறுதியளித்த அவர், சாக்கடை கால்வாய், சாலை, குடிநீர் வசதிகள் ஒவ்வொரு பகுதியாக செய்து முடிக்கப்படும் என உறுதியளித்தார். இந்த ஆய்வின்போது, துணை மேயர் ஆனந்தய்யா, மண்டல தலைவர் ரவி, 8-வது வார்டு உறுப்பினர் சீனிவாசலு உள்பட பலர் உடன் இருந்தனர்.
- அந்த வழியாக வந்த காரை வழிமறித்து சோதனையிட்டனர்.
- அவர்களிடம் இருந்து 208 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், காரையும் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் பகுதியில் போலீஸ் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை வழிமறித்து சோதனையிட்டனர்.
அதில் 208 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி சென்றது தெரியவந்தது. மேலும் காரில் வந்தவர்களிடம் விசாரித்ததில் சென்னை முகமலை சென்னிரகுப்பம் பகுதியைச் சேர்ந்த மைக்கேல்ராஜ் (வயது34), போரூர் லட்சுமணன் (38) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 208 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், காரையும் பறிமுதல் செய்தனர்.
- மோட்டார் சைக்கிளில் சென்றபோது பின்னால் வந்த அரசு பஸ் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
- எதிர்பாராதவிதமாக அந்த வழியாக வேன் ஒன்று அவர் மீது மோதியது
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜா கடை கொல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் தீர்த்தகிரி (வயது52).
கூலித்தொழிலாளியான இவர் கடந்த 3-ந் தேதி மோட்டார் சைக்கிளில் கந்திகுப்பம் சென்றார்.
பின்னர் மீண்டும் அவர் வீடு திரும்புவதற்காக கிருஷ்ணகிரி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது பின்னால் வந்த கார் ஒன்று வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த கந்திகுப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்று காவேரிப்பட்டணம் தாரைகொட்டாய் பகுதியைச் சேர்ந்த வேடியப்பன் மகன் நந்தகுமார் (21). சம்பவத்தன்று இவர் கூட்டப்பட்டி அருகே உள்ள பாலக்கோடு- காவேரிப்பட்டணம் நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அந்த வழியாக வேன் ஒன்று அவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
திருப்பத்தூர் மாவட்டம் சிபிபுரா பகுதியைச் சேர்ந்தவர் கதிப்அஹமது (28). இவர் அதேபகுதியில் உள்ள செல்போன் சர்வீஸ் கடையில் வேலை செய்து வந்தார்.
இவர் சம்பவத்தன்று ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது பின்னால் வந்த அரசு பஸ் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் சாவு
கர்நாடக மாநிலம் பெங்களூரு கவுதமபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காமராஜ். இவரது மனைவி சாந்தி (39). இவர் ஓசூர் லேலாண்ட் 2-வது யூனிட் பகுதியில் மொபட்டில் சென்றார். அப்போது பின்னால் வந்த கார் ஒன்று வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழக அரசு காவல்துறை சார்பில் தமிழ்நாடு பசுமை இயக்கம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்து பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு குறித்து எடுத்துரைத்தார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை சார்பாக தமிழக அரசு காவல்துறை சார்பில் தமிழ்நாடு பசுமை இயக்கம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு சிறப்பு காவல் படை பாண்டியராஜன் தலைமை தாங்கினார். களர்பதி ஊராட்சிக்கு உட்பட்ட சமத்துவபுரத்தில் அணிவகுப்புடன் சென்று பொதுமக்களுக்கு மரக்கன்று கன்றுகள் வழங்கி மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்து பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு குறித்து எடுத்துரைத்தார்.
இந்த நிகழ்ச்சியின் போது உதவி தளவாய் ராஜா உடன் இருந்தார்.
- காணத்தக்க கிருஷ்ணகிரி' என்கிற விழிப்புணர்வுச் சுற்றுலாத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது
- கலெக்டர், உயர்அலுவலர்கள், வரலாற்று ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள் உள்பட பல தரப்பினரும் பங்கேற்க உள்ளனர்.
கிருஷ்ணகிரி,
'காணத்தக்க கிருஷ்ணகிரி' என்கிற விழிப்புணர்வு சுற்றுலா திட்டத்தின் கீழ் மயிலாடும்பாறைக்கு நாளை(சனிக்கிழமை) மரபு நடை மேற்கொள்ளப்படுகிறது.
இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
'காணத்தக்க கிருஷ்ணகிரி' என்கிற விழிப்புணர்வுச் சுற்றுலாத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இந்த மாவட்டத்தில் காணப்படும் பல்வேறு வரலாற்று சின்னங்கள், கலாச்சரா பெருமை கொண்ட இடங்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அனைவரும் அறிந்து கொள்ளவும், அவற்றை பாதுகாக்கவும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
அதன்படி நாளை (சனிக்கிழமை) காலை 6.30 மணிக்கு தொகரப்பள்ளி நடுகற்கள், ஐகுந்தம் வணிகக்குழு கல்வெட்டு, பாறை ஒவியங்கள், மயிலாடும்பாறை அகழ்வாராய்ச்சி உள்ளிட்ட இடங்களுக்கு மரபு நடை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இதில், கலெக்டர், உயர்அலுவலர்கள், வரலாற்று ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள் உள்பட பல தரப்பினரும் பங்கேற்க உள்ளனர். இத்திட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு நமது மாவட்டத்தின் தொன்மையின் சிறப்புகளை அறிந்து கொள்ளலாம். இத்திட்டத்தில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களுக்கு மரபு நடை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வந்த அந்த ஆழ்துளை கிணறு மீது கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டது.
- மின்மோட்டார் அமைக்கப்பட்டு அதன் மூலம் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த கீழ்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட பாப்பானூர் கிராமத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு புதிய கழிவு நீர் கால்வாய் அமைக்கப்பட்டது.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை 14-வது நிதிக்குழு மானிய நிதியிலிருந்து சுமார் ரூ.3 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கால்வாய் அக்கிராமத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வந்த அந்த ஆழ்துளை கிணறு மீது கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டது.
இது அப்பகுதி கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அலட்சியமாக ஆழ்துளை கிணறு மீது கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்ட ஒப்பந்ததார் மீது நடவடிக்கை எடுத்து ஆழ்துளை கிணற்றை மீட்டெடுத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து கிராம இளைஞர் கூறுகையில், கடந்த பல ஆண்டுகளாக கை பம்பு அமைக்கப்பட்டு அதன் மூலம் கிராம மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வந்தது.
தற்போது மின்மோட்டார் அமைக்கப்பட்டு அதன் மூலம் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் ஆழ்துளை கிணறு மீது கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இதுகுறித்து கீழ்குப்பம் ஊராட்சி மன்ற தலைவரிடம் கேட்டபோது, கிராம மக்களின் குடிநீர் தேவை தென்பெண்ணை ஆற்றிலிருந்து கிடைப்பதால், ஆழ்துளை கிணறு பயனற்று கிடந்தது. தற்போது இந்த ஆழ்துளை கிணறு செயல்பாட்டில் இல்லை என தெரிவித்தார்.
- குழந்தைத் தொழிலாளர்கள் குறித்த புகார்களை தெரிவிக்க, பி.எஸ்.என்.எல். மூலம் 155214 உருவாக்கப்பட்டு செயல்படுத்த ப்பட்டுள்ளது.
- கட்டண மில்லா தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு, பொதுமக்கள் தங்கள் புகார்களை பதிவு செய்யலாம்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்ட த்தில் கொத்தடிமை மற்றும் குழந்தைத் தொழிலாளர்கள் குறித்த புகார்களை தெரிவிக்க, பொதுமக்கள் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளும் பொருட்டு பி.எஸ்.என்.எல். மூலம் 155214 உருவாக்கப்பட்டு செயல்படுத்த ப்பட்டுள்ளது.
கொத்தடிமை மற்றும் குழந்தை தொழிலாளர்கள் குறித்த புகார்களை தெரிவிக்க ஏற்கனவே உள்ள 1800 4252 650 என்ற கட்டண மில்லா தொலைபேசி எண்ணிலும், கூடுதலாக ஏற்படுத்த ப்பட்டுள்ள 155214 என்ற கட்டண மில்லா தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு, பொதுமக்கள் தங்கள் புகார்களை பதிவு செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கிருஷ்ணகிரி வட்டாரத்தில் சுமார் 2 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
- ஒரு எக்டேருக்கு 1800 வீதம் மரத்தின் ஓலையின் அடிப்பகுதியில் விடுவிக்க வேண்டும்
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி வட்டாரத்தில் தென்னையில் பூச்சி நோய் தாக்குதல் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
கிருஷ்ணகிரி வட்டாரத்தில் சுமார் 2 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அண்மையில் தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் தென்னையில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதனால் குறிப்பிடத்தக்க அளவு மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. கருத்தலைப்புழு, சுருள் வெள்ளை ஈக்கள், காண்டாமிருக வண்டு போன்ற பூச்சிகளாலும், தஞ்சாவூர் வாடல் நோயாலும் அதிக சேதாரம் ஏற்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி, கிருஷ்ணகிரி வட்டாரத்திற்கு உட்பட்ட சோக்காடி, பச்சிகானப்பள்ளி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் கருத்தலைப்புழு, ரூகோஸ், சுருள் வெள்ளை ஈக்கள் தாக்கிய வயல்களை ஆய்வு மேற்கொள்ள வேளாண்மை உதவி இயக்குநர்கள் கிருஷ்ணகிரி சுரேஷ்குமார், வேப்பனஅள்ளி வானதி, பையூர் மண்டல ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் துறை உதவி பேராசிரியர் சசிகுமார், தோட்டக்கலைத்துறை உதவி பேராசிரியர் கீதாலட்சுமி மற்றும் கிருஷ்ணகிரி உதவி வேளாண்மை அலுவலர்கள் வயலாய்வு மற்றும் முக்கிய நோய்கிளன் சேதார அறிகுறிகள் குறித்து செயல்விளக்கம், பூச்சி நோயை கட்டுப்படுத்துவதற்கான தொழில்நுட்ப விழிப்புணர்வு முகாம் மற்றும் ஆலோசனைகளை வழங்கினர்.
மேலும், மஞ்சள் நிற பொறி, வளர்ச்சி அடைந்த வெள்ளை ஈக்களை கவரும் தன்மையுடைய தாள், மஞ்சள் நிற பாலீத்தின் தாள்களால் உருவாக்கப்பட்ட ஒட்டும் பொறிகள் (நீளம் 3 அடி, அகலம் 1 அடி) 10 என்ற எண்ணிக்கையில் 6 அடி உயரத்தில் வைத்து, பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும். பிராக்கான் பிரவி கார்னிஸ் ஒட்டுண்ணிகள், ஒரு எக்டேருக்கு 1800 வீதம் மரத்தின் ஓலையின் அடிப்பகுதியில் விடுவிக்க வேண்டும் எனவும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர். இதில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.
- இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான தீபக் ஜேக்கப் வெளியிட்டார்.
- தயார் செய்யப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்களில் வெளியிடப்பட்டுள்ளது என்றார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக முகாம் அலுவலகத்தில், மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான தீபக் ஜேக்கப் வெளியிட்டார்.
இது குறித்து அவர் கூறுகையில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளர் தெரிவித்துள்ள கால அட்டவணையின்படி, மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலுக்கு, ஊரக பகுதியில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், நகர்ப்புற பகுதியில் மாநகாட்சி வார்டு உறுப்பினர்கள், நகராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் கொண்டு தயார் செய்யப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்களில் வெளியிடப்பட்டுள்ளது என்றார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ராஜகோபால், வட்டார வளர்ச்சி அலுவலர் அன்சர்பாஷா உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
- சாக்கு மூட்டை ஒன்றுக்குள் செல்போன் கேமரா வீடியோவை ஆன் செய்து வைத்து, அவர்களின் உல்லாச காட்சிகளை படம் பிடித்தார்.
- போலீஸ் வரை இந்த விவகாரம் போகா விட்டாலும், தளி பகுதியில் தற்போது பரபரப்பாக இந்த விஷயம் தான் பேசப்பட்டு வருகிறது.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
இங்கு பணிபுரிந்து வந்த பெண் ஒருவருக்கும், ஆண் ஒருவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்து வந்தது.
திருமணம் ஆனதையும் மறந்து அவர்கள் 2 பேரும் கள்ளக்காதலை தொடர்ந்து வந்தனர். தாங்கள் பணிபுரிந்து வந்த இடத்தை உல்லாசபுரியாக மாற்றிக் கொண்டார்கள். இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் அந்த நிறுவனத்திற்குள் அரசல் புரசலாக தெரிய வந்தது.
பல நேரங்களில் இந்த ஜோடி காணாமல் போனதை கண்ட ஊழியர் ஒருவர் அவர்களை கண்காணிக்க தொடங்கினார். அப்போது அங்குள்ள குடோன் ஒன்றில் அவர்கள் உல்லாசமாக இருந்து வருவதை அறிந்த அவர், தனது கொடூர புத்தியை அங்கு அரங்கேற்றினார்.
அந்த நிறுவன குடோனில் உள்ள சாக்கு மூட்டை ஒன்றுக்குள் செல்போன் கேமரா வீடியோவை ஆன் செய்து வைத்து, அவர்களின் உல்லாச காட்சிகளை படம் பிடித்தார்.
தனக்கு தெரிந்தவர்க ளுக்கு அந்த வீடியோவை அனுப்பி, அவர்களின் கள்ளக்காதல் விவரங்களை அந்த நபர் தெரிவிக்க, ஒரு கட்டத்தில் அந்த நிறுவன உரிமையாளருக்கும் இந்த விவகாரம் தெரிய வந்தது.
இதையடுத்து கள்ள க்காதல் வைத்திருந்ததோடு, நிறுவன வளாகத்தில் உல்லாசமாக இருந்து அவப்பெயரை ஏற்படுத்தியதற்காக அவர்கள் 2 பேரையும் அந்த நிறுவனத்தில் இருந்து நீக்கினார். மேலும் இந்த வீடியோ எடுத்து பரப்பிய நபரிடமும் விசாரணை நடந்து வருகிறது. போலீஸ் வரை இந்த விவகாரம் போகா விட்டாலும், தளி பகுதியில் தற்போது பரபரப்பாக இந்த விஷயம் தான் பேசப்பட்டு வருகிறது.
- 8 கல்குவாரிகளால் கிராம மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.
- குவாரி வருவதை தடுக்க நாங்கள் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பஞ்சாட்சிபுரம் மற்றும் கோபனபள்ளி பகுதியில் புதிதாக தனியார் கல்குவாரிகள் தொடங்கப்படுவது தொடர்பாக, மாசுகட்டுப்பாட்டு வாரியம் சார்பில மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது.
ஓசூர் அருகே நாகொண்டபள்ளியில் ஒரு தனியார் மண்டபத்தில் நடந்த இக்கூட்டத்திற்கு , ஓசூர் ச.ப்- கலெக்டர் சரண்யா தலைமை தாங்கினார். மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.
இதில், கொரட்டகிரி, தண்டரை, அடவி சாமிபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்துகொண்டு, "ஏற்கனவே அந்த பகுதியில் உள்ள 8 கல்குவாரிகளால் கிராம மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.
குடிநீர் மாசடைந்து, ஆடுமாடுகள் கூட உயிரிழக்கும் நிலை இருந்து வருகிறது. வீடுகளில் விரிசல் ஏற்படுகின்றன. குவாரிகளுக்கு சரமாரியாக வந்து செல்லும் டிப்பர் வாகனங்களால் பள்ளி குழந்தைகளும் சாலையில் நடந்து செல்லமுடியாத நிலை உள்ளது.
இந்த நிலையில் மேலும் ஒரு குவாரிக்கு அனுமதி வழங்கினால், நாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்வதை தவிர வேறு வழியில்லை.
குவாரி வருவதை தடுக்க நாங்கள் மிகப்பெரிய போராட்ட த்தில் ஈடுபடுவோம் என்று ஆக்ரோஷத்துடன் கூறினர். மேலும், உதவி கலெக்டரிடம் உருக்கமாக முறையிட்டு, மனு வழங்கினர். இதன் காரணமாக, அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதைதொடர்ந்து, கோபனபள்ளி கிராமத்தில் அமையவுள்ள புதிய தனியார் கல்குவாரி தொடர்பாக நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில், எந்த வித எதிர்ப்புமின்றி, கோபனபள்ளி பகுதி மக்கள், புதிய கல்குவாரிக்கு ஆதரவு தெரிவித்து பேசினர்.
புதிய கல்குவாரிகள் தொடங்குவது தொடர்பான கிராம மக்களின் கருத்துக்களை கேட்டறிந்த சப்- கலெக்டர் சரண்யா, கிராம மக்களின் கருத்துக்கள் மற்றும் புகார்களை, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சரகத்துக்கு மேல் நடவடிக்கை அனுப்பி வைப்பதாக தெரிவித்தார்.






