குடோனில் உல்லாசமாக இருந்த கள்ளக்காதல் ஜோடி

சாக்கு மூட்டை ஒன்றுக்குள் செல்போன் கேமரா வீடியோவை ஆன் செய்து வைத்து, அவர்களின் உல்லாச காட்சிகளை படம் பிடித்தார்.போலீஸ் வரை இந்த விவகாரம் போகா விட்டாலும், தளி பகுதியில் தற்போது பரபரப்பாக இந்த விஷயம் தான் பேசப்பட்டு வருகிறது.
குடோனில் உல்லாசமாக இருந்த கள்ளக்காதல் ஜோடி
Published on

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

இங்கு பணிபுரிந்து வந்த பெண் ஒருவருக்கும், ஆண் ஒருவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்து வந்தது.

திருமணம் ஆனதையும் மறந்து அவர்கள் 2 பேரும் கள்ளக்காதலை தொடர்ந்து வந்தனர். தாங்கள் பணிபுரிந்து வந்த இடத்தை உல்லாசபுரியாக மாற்றிக் கொண்டார்கள். இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் அந்த நிறுவனத்திற்குள் அரசல் புரசலாக தெரிய வந்தது.

பல நேரங்களில் இந்த ஜோடி காணாமல் போனதை கண்ட ஊழியர் ஒருவர் அவர்களை கண்காணிக்க தொடங்கினார். அப்போது அங்குள்ள குடோன் ஒன்றில் அவர்கள் உல்லாசமாக இருந்து வருவதை அறிந்த அவர், தனது கொடூர புத்தியை அங்கு அரங்கேற்றினார்.

அந்த நிறுவன குடோனில் உள்ள சாக்கு மூட்டை ஒன்றுக்குள் செல்போன் கேமரா வீடியோவை ஆன் செய்து வைத்து, அவர்களின் உல்லாச காட்சிகளை படம் பிடித்தார்.

தனக்கு தெரிந்தவர்க ளுக்கு அந்த வீடியோவை அனுப்பி, அவர்களின் கள்ளக்காதல் விவரங்களை அந்த நபர் தெரிவிக்க, ஒரு கட்டத்தில் அந்த நிறுவன உரிமையாளருக்கும் இந்த விவகாரம் தெரிய வந்தது.

இதையடுத்து கள்ள க்காதல் வைத்திருந்ததோடு, நிறுவன வளாகத்தில் உல்லாசமாக இருந்து அவப்பெயரை ஏற்படுத்தியதற்காக அவர்கள் 2 பேரையும் அந்த நிறுவனத்தில் இருந்து நீக்கினார். மேலும் இந்த வீடியோ எடுத்து பரப்பிய நபரிடமும் விசாரணை நடந்து வருகிறது. போலீஸ் வரை இந்த விவகாரம் போகா விட்டாலும், தளி பகுதியில் தற்போது பரபரப்பாக இந்த விஷயம் தான் பேசப்பட்டு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com