என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரைக்கால் செல்லூரில் :வாய்க்கால் தூர்வாராததை கண்டித்து விவசாயிகள் போராட்டம்
    X

    காரைக்கால் செல்லூரில் :வாய்க்கால் தூர்வாராததை கண்டித்து விவசாயிகள் போராட்டம்

    கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக வயல்வெளிகளில் தேங்கிய தண்ணீர் வடிய வழியின்றி குளம் போல் தேங்கி நிற்கிறது.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்டம் முழுவதும் சுமார் 5500 ஹெக்டர் சம்பா நெல் பயிரிடப்பட்டுள்ளது. பயிர்கள் நன்றாக முளைத்து வரும் நிலையில், மாவட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள், மழைக்கால முன்னெச்சரிக்கை மற்றும் முறைப்படி வடிகால் வாய்க்கால்களை தூர்வாராததால், கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக வயல்வெளிகளில் தேங்கிய தண்ணீர் வடிய வழியின்றி குளம் போல் தேங்கி நிற்பதால், சுமார் 4300 ஹெக்டேரில் பயிர்கள் சேதமடைந்துள்ளது.வடிகால் வாய்க்கால்க ளை போர்க்கால அடிப்படை யில் தூர்வாரவே ண்டும் என விவசாயிகள் பொதுப்பணித்துறை யிடம் முறையிட்டும், வேணாள்துறையை நடவடிக்கை எடுக்க வலியுறு த்தியும் நடவடிக்கை எடுக்க வில்லை. இதனால் பாதிப்பிற்குள்ளாகிய செல்லூர் பகுதி விவசாயி கள், வடிகால் வாய்க்காலை தூர்வாராத பொதுப் பணித்துறையையும், கண்டுகொள்ளாத வேளாண்துறை யையும் கண்டித்து, வடிகால் வாய்க்காலில் இறங்கி போராட்டம் நடத்தினர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    தொடர்ந்து, போர்க்கா ல அடிப்படையில் வடிகால் வாய்க்கால்களை உடனே தூர்வாரி, வயல்களில் தேங்கியுள்ள அதிகப்படி யான மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், மாவட்ட வேளாண்துறை மற்றும் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவோம் என விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×