search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி உணவகங்களில் சோதனை
    X

    குமரி உணவகங்களில் சோதனை

    • கெட்டுப்போன 40 கிலோ இறைச்சி பறிமுதல்
    • 5 கடைகளுக்கு ரூ.13,000 அபராதம்

    நாகர்கோவில்:

    நாமக்கல் மாவட்டத்தில் சவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி பலியானதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஓட்டல்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். குமரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில்குமார் தலைமையில் அதிகாரிகள் குமார பாண்டியன், சங்கர நாராயணன் ஆகியோர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். நாகர்கோவில் மாநகர பகுதியில் பல்வேறு இடங்களில் ஓட்டல்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதேபோல் மாவட்டம் முழுவதும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் 40 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப் பட்டுள்ளது.

    மேலும் காலாவதியான மீன் குழம்பு 1½ கிலோ, சூடு படுத்தி பயன்படுத்தி எண்ணெய் 2 லிட்டரும், மாட்டு இறைச்சி 3 கிலோ, கெட்டுப்போன பால் 11 லிட்டர், புரோட்டா 4 கிலோ, வேகவைத்த மீன் குழம்பு ½ கிலோ, வத்த குழம்பு 4 கிலோ, கெட்டுப்போன முந்திரி 2 கிலோ பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. முறையான பராமரிப்பின்றி உணவு தயார் செய்த 7 உணவுகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 5 கடைகளுக்கு ரூ.13,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். சவர்மா, மீன், கோழி, ஆடு, மாட்டு இறைச்சி தயாரித்து விற்பனை செய்யும் உணவு வணிகர்கள் உணவு பாதுகாப்பு தர சட்டத்தின் படி உணவு பாதுகாப்பு உரிமை அல்லது பதிவு சான்றிதழ் பெற்று பொது மக்களின் பார்வைக்கு தெரியும்படி தொங்கவிட வேண்டும். அசைவ உணவு பொருட்களை சமைத்து விற்பனை செய்யும் உணவு வணிகர்கள் தாங்கள் விற்பனை செய்யும் அசைவ உணவுகளை அன்றே தேவைக்கு வாங்கி விற்பனை செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் விற்பனை செய்தது போக மீதம் உள்ள உணவு மற்றும் இறைச்சி வகைகள் மீண்டும் குளிர்சாதன பெட்டியில் பதப்படுத்தி விற்பனை செய்யக்கூடாது. சமைய லறை உணவு பொருட்கள் சேமித்து வைக்கும் இடம் சமைத்த உணவை பரா மரிக்கும் இடம் ஆகிவை சுத்தமாக சுகாதாரமாக இருக்க வேண்டும். உணவுகையாளுபவர்கள் கையுறை அணிந்திருக்க வேண்டும்.

    பாதுகாப்பான சுத்தமான கொதிக்க வைக்கப்பட்ட குடிநீரை வாடிக்கை யாளர்களுக்கு வழங்க வேண்டும். ஒரு முறை பயன்படுத்திய எண்ணையை மீண்டும் சூடுபடுத்தி உபயோகப்படுத்த கூடாது. சவர்மா தயாரிக்கும் இடம் மற்றும் புரோட்டா தயாரிக்க பயன்படுத்தும் மேஜை மற்றும் அடுப்பு ஆகியவை கடைக்கு வெளியே இருந்தால் தூசிகள் படாத வண்ணம் தடுப்புகள் அமைத்து சுத்தமாக பராமரிக்க வேண்டும். அல்லது கடைக்கு உட்புறம் வைக்க வேண்டும். பொது மக்கள் உணவு தொடர்பாக ஏதேனும் புகார்கள் இருந்தால் 94440 42322 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×