என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
குளச்சல் அருகே 2 குழந்தைகளுடன் பெண் மாயம்
- கணவர் போலீசில் புகார்
- குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பெண் மற்றும் குழந்தைகளை தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி:
குளச்சல் அருகே கல்லுக்கூட்டம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் பெயிண்டர் வேலை செய்து வருகிறார்.
இவரது மனைவி விஜி (வயது 33). இத்தம்பதிக்கு 6 மற்றும் ஒரு வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். விஜிக்கும், மாமியாருக்குமிடையே குடும்ப தகராறு இருந்து வருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில் வீட்டிலிருந்த விஜி மற்றும் 2 குழந்தைகளை கடந்த மாதம் 26-ந் தேதி முதல் காணவில்லை.விஜி குழந்தைகளுடன் மாயமானதாக கூறப்படுகிறது. அவரது கணவர் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் விஜி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இது குறித்து முருகேசன் குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பெண் மற்றும் குழந்தைகளை தேடி வருகின்றனர்.
Next Story






