search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    முட்டம் இரட்டை கொலை வழக்கு விசாரணை தீவிரம்
    X

    முட்டம் இரட்டை கொலை வழக்கு விசாரணை தீவிரம்

    • கொலைக்கான காரணம் குறித்து 3 கோணங்களில் தனிப்படை போலீசார் விசாரணை
    • தகராறில் கொலை நடந்ததா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொள்ளை முயற்சியில் கொலை நடந்ததா? என 3 கோணங்களில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி:

    ராஜாக்கமங்கலம் அருகே முட்டம் தூய குழந்தை ஏசு தெருவை சேர்ந்தவர் ஆன்றோ சகாயராஜ். இவருடைய மனைவி பவுலின் மேரி (வயது 48). இவரது தாயார் திரேசம்மாள் (90). பவுலின் மேரியின் கணவர் ஆன்றோ சகாயராஜ். அவரது மூத்த மகன் ஆலன் (25) ஆகியோர் துபாயில் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள்.

    பவுலின் மேரியின் 2-வது மகன் ஆரோன் (19) சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் என்ஜினியரிங் பயின்று வருகிறார். இந்த நிலையில் பவுலின் மேரி, அவரது தாயார் திரேஸ் அம்மாள் இருவரையும் அடித்துக் கொலை செய்து விட்டு அவர்கள் அணிந்திருந்த 15 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    கொலையாளிகளை பிடிக்க குளச்சல் இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ், வடசேரி இன்ஸ்பெ க்டர் திருமுருகன், கொல்ல ங்கோடு இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் குளச்சல் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வில்லியம்பெஞ்சமின் ஆகியோர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்க ப்பட்டது. தனிப்படை போலீசார் கொலை நடந்த வீட்டிற்கு சென்று விசாரித்தனர். அப்போது வீட்டில் இருந்த சில முக்கிய தடயங்களை போலீசார் கைப்பற்றினார்கள்.

    இந்த கொலை வழக்கு தொடர்பாக அந்த பகுதியில் உள்ள சிலரை பிடித்து விசாரணை மேற்கொண்ட னர். வடமாநில வாலிப ர்கள் சிலரிடமும் விசா ரணை நடத்தப்பட்டது. இதற்கிைடயில் கொலை செய்யப்பட்ட பவுலின்மேரி, திரேசம்மாளின் உடல் பரிசோ தனை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நடந்தது. பிரேத பரிசோதனையின் போது பவுலின்மேரி கையில் தலைமுடி சிக்கி இருந்தது தெரிய வந்தது. அது ஆணின் தலைமுடி என்று கூறப்படுகிறது. எனவே கொலையாளிகள் பவுலின்மேரியை தாக்கும் போது அவர், கடுமையாக போராடி இருப்பது தெரிய வந்துள்ளது.

    மேலும் கொலையாளிகள் வீட்டில் விட்டு சென்ற மப்ளரையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். மப்ளர் கைப்பற்றப்பட்டதால் கொலையாளிகள் பவுலின் மேரிக்கு தெரிந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். கொலையாளிகள் முகம் தெரியாமல் இருக்க மப்ளரை பயன்படுத்தி இருக்கலாம் என்று தெரிகிறது.

    கொலை செய்யப்பட்ட பவுலின்மேரி வீட்டிற்கு செல்லும் வழியில் கஞ்சா அடித்துக்கொண்டு வாலிபர் கள் சிலர் கடந்த சில மாதங் களுக்கு முன்பு தகராறில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக பவுலின் மேரி புகார் அளித்துள்ளார். இேதபோல் பவுலின்மேரி நடத்திவந்த தையல் பயிற்சி பள்ளிக்கு வந்த இளம்பெண் களை வாலிபர்கள் சிலர் கிண்டல் செய்துள்ளனர்.

    இது தொடர்பாகவும் போலீசில் புகார் செய்து ள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்ததா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொள்ளை முயற்சியில் கொலை நடந்ததா? என 3 கோணங்களில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

    கொலை செய்யப்பட்ட பவுலின்மேரி, திரேசம்மா ளின் உடல்கள் இன்று அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. இதை தொடர்ந்து மாலை பவுலின்மேரி, திரேசம்மாள் உடல் அடக்கம் செய்யப்படு கிறது.

    இதையடுத்து முட்டம் பகுதி மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    Next Story
    ×