search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மறியலில் ஈடுபட்ட 395 காங்கிரஸ் நிர்வாகிகள் மீது வழக்கு
    X

    மறியலில் ஈடுபட்ட 395 காங்கிரஸ் நிர்வாகிகள் மீது வழக்கு

    • கைது செய்யப்பட்டவர்கள் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
    • அவர்கள் மாலையில் விடு விக்கப்பட்டனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் உள்ள பழுதடைந்த தேசிய நெடுஞ்சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும், கிடப்பில் போடப் பட்டுள்ள 4 வழிச்சாலை பணியை உடனடியாக தொடங்கி முடிக்க வேண்டும். 4 வழிச்சாலை பணிக்காக தனியாரிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உடனடியாக மார்க்கெட் விலைப்படி பணம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.

    வில்லுக்குறி அருகே தோட்டியோடு பகுதி யில் நடந்த மறியல் போராட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், கிழக்கு மாவட்ட தலைவர் கே.டி. உதயம் உள்பட ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ் ராஜேஷ்குமார் உட்பட 395 காங்கிரஸ் நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்டவர்கள் அந்த பகுதியில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் மாலையில் விடு விக்கப்பட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உட்பட 395 பேர் மீது இரணியல் போலீசார் வழக் குப்பதிவு செய்து உள்ளனர்.

    Next Story
    ×