என் மலர்
உள்ளூர் செய்திகள்

வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபர் கைது
- அறைக்குள் வாலிபர் ஒருவர் நிற்பதைக் கண்ட அவர் உடனே மூதாட்டி சத்தம் போட்டார்.
- மூதாட்டி மற்றும் மகன், மருமகள் ஆகியோர் வாலிபரை மடக்கி பிடித்தனர்.
கன்னியாகுமரி:
குளச்சல் அருகே உடையார்விளையை சேர்ந்தவர் பிச்சை. இவரது மனைவி நேசம் (வயது 80). இவர் மகன் ஜாண்ராஜ் வீட்டில் தனியாக ஒரு அறையில் வசித்து வருகிறார்.
இன்று அதிகாலையில் நேசம் அறையில் வாலிபர் ஒருவர் புகுந்தார். சத்தம் கேட்டு எழுந்த மூதாட்டி மின் விளக்கை போட்டார். தன் அறைக்குள் வாலிபர் ஒருவர் நிற்பதைக் கண்ட அவர் உடனே சத்தம் போட்டார். சத்தம் கேட்டு மூதாட்டியின் மகனும் மருமகளும் அங்கு வந்தனர்.
அதற்குள் அந்த வாலிபர் மூதாட்டியின் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க செயினை பறித்தான்.சுதாரித்து கொண்ட மூதாட்டி மற்றும் மகன், மருமகள் ஆகியோர் வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர் குளச்சல் போலீசில் வாலிபரை ஒப்படைத்தனர்.
விசாரணையில் அந்த வாலிபர் வேப்பவிளையை சேர்ந்த அஜின் (29) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அஜினை கைது செய்து 3 பவுன் நகையையும் மீட்டனர்.