என் மலர்
உள்ளூர் செய்திகள்

விபத்தில் சிக்கிய காரையும், மோட்டார் சைக்கிளையும் படத்தில் காணலாம்.
கேரளாவுக்கு ரேசன் அரிசி கடத்திய கார் மோதி தொழிலாளி படுகாயம்
- ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதி
- மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
கேரளா மாநிலம் ஐரா பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார். தொழிலாளி. இவர் நேற்று மாலை மார்த்தாண்டம் மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது திருவனந்தபுரம் நோக்கி வேகமாக சென்ற கார் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் விபத்தில் சிக்கிய காரை விட்டு விட்டு டிரைவர் அங்கிருந்து தப்பி சென்றார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினcர்.
அப்போது விபத்துக் குள்ளான காரில் சோதனை செய்தபோது ஒரு டன் ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ரேஷன் அரிசி கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.
இது தொடர்பாக மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார் மற்றும் அரிசியை மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.மேலும் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற டிரைவரை போலீசாரை வலைவீசி தேடி வருகினறனர்.