search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் இன்று போலீஸ் சூப்பிரண்டு குறை தீர்க்கும் நாளில் மனு கொடுக்க வந்த மாற்றுத்திறனாளி
    X

    மனு கொடுக்க வந்த மாற்றுத்திறனாளியை நாற்காலியில் அமர வைத்து தூக்கிச் சென்ற அதிவிரைவுப் படையினர்.

    நாகர்கோவிலில் இன்று போலீஸ் சூப்பிரண்டு குறை தீர்க்கும் நாளில் மனு கொடுக்க வந்த மாற்றுத்திறனாளி

    • நாற்காலியில் உட்கார வைத்து போலீசார் அழைத்துச் சென்றனர்
    • வாரத்தில் புதன் கிழமை தோறும் பொது மக்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.

    நாகர்கோவில்:

    வாரத்தில் புதன் கிழமை தோறும் பொது மக்களிடம் மனுக்கள் பெற்று குறைகளை தீர்த்து வைக்க போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவுறுத்தி உள்ளார். அதன்படி அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.

    குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நாகர்கோவிலில் உள்ள அலுவல கத்தில் வைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்று வருகிறார். அதன்படி இன்று (புதன்கிழமை) அவர் பொது மக்களை நேரடி யாக சந்தித்து மனுக்களை பெற்றார்.

    ஏராளமானோர் தங்க ளின் புகார் மனுக்களை கொடுக்க வந்த னர். மாற்றுத் திறனாளி ஓருவரும் இன்று மனு கொடுக்க வந்தார். அவரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் அதிவிரைவுபடை போலீசார் நாற்காலியில் அமரவைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் அழைத்துச் சென்றனர். தொடர்ந்து மாற்றுத்திறனாளியான அவர், போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்திடம் மனு கொடுத்துச் சென்றார்.

    Next Story
    ×