என் மலர்
காஞ்சிபுரம்
மாமல்லபுரத்தை அடுத்த எச்சூர் அருகே நேற்று மாலை அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது மர்ம கும்பல் திடீரென பஸ் மீது கல்வீசி தாக்கினர். இதில் பஸ் கண்ணாடி உடைந்தது. டிரைவர் பாலசுந்தரம் படுகாயம் அடைந்தார்.
கோவளம் அருகே உள்ள கரிக்காட்டு குப்பம், செம்மஞ்சேரி பகுதியை சேர்ந்தவர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் உத்திரமேருர் பஸ் நிலையம் அருகே பொதுக்கூட்டம் மாவட்ட தலைவர் மலையூர் புருஷோத்தமன் தலைமையில் நடைபெற்றது. வட்டாரத் தலைவர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு பேசியதாவது:-
நடைபெறுகின்ற இந்தக் கூட்டம் விசேஷமான கூட்டம். ஒரு குறிக்கோளுக்காக நடைபெறும் கூட்டம் தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள், பொது மக்கள் ஒன்று கூடி நம் கலாச்சாரத்தினைக் காப்பாற்ற அறவழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஜனவரி முதல் வாரத்திலேயே தமிழ் மாநில காங்கிரஸ் சார்பினில் முதன் முதலாக ஜல்லிக்கட்டினை நடத்த வலியுறுத்தி அலங்காநல்லூரில் போராட்டம் நடத்தி இந்தப் போராட்டத்திற்கு அடித்தளமிட்டது.
தற்போது ஜல்லிக்கட்டு பிரச்சனைக்காக இளைஞர்கள் மாணவ மாணவியர்கள் பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக்களும் அமைதியான முறையில் போராடி வருகின்றனர்.
மத்திய, மாநில அரசுகள் கால தாமதமாக அவசர சட்டத்தினை கொண்டு வந்தாலும் இது வரவேற்கத்தக்கது. இதனை நிரந்தர சட்டமாக மாற்றி போராட்டக்காரர்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும். சட்டமன்றம் கூடியதும் இந்த அவசர சட்டத்திற்கு முழு வடிவம் தர வேண்டியது தமிழக அரசின் பொறுப்பு.
கூட்டத்தில் த.மா.கா. மூத்த தலைவர் ஞானதேசிகன், இளைஞரணி மாநில பொதுச்செயலாளர் சங்கர், தென் சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் கொட்டிவாக்கம் முருகன், மாவட்ட இளைஞரணி தலைவர் கார்த்திக், காஞ்சி நகர தலைவர் எஸ்.சுகுமார், நிர்வாகிகள் கஜேந்திரன், ஆதிகேசவலு, கார்த்திகேயன், சுதர்சன், வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் படப்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், பொது மக்கள், இளைஞர்களை வன்முறை மூலம் அப்புறப்படுத்துவதை விடுதலை சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கிறது.
போராட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே மக்கள் ஒரே இடத்தில் திரள திட்டமிட்டு உள்நோக்கத்திற்காக அனுமதித்ததே அரசு தான்.
அவ்வாறு அனுமதித்து விட்டு அவர்களை தற்போது கலைந்து செல்லும் படி அச்சுறுத்துவது எந்த விதத்தில் நியாயம். அவசர சட்டத்தை சட்டமாக்குவது மட்டும் அல்லாமல் அந்த சட்டத்திற்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தால் எந்த பாதிப்பும் வரக்கூடாது என்று கோரிதான் இந்த போராட்டம் நடந்தது.
மத்திய, மாநில அரசுகள் கூட்டு சேர்ந்து சதி செய்து அவசர சட்டம் என்ற நாடகத்தின் மூலம் இந்த கூட்டத்தை கலைத்து விட்டு பின்னர் தங்களது விருப்பம் போல் முடிவு செய்யலாம் என்பதை நாம் நன்கு அறிய முடிகிறது. ஏனென்றால் உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு நிலுவையில் உள்ளது.
அவசர சட்டத்தை மாநில அரசே கொண்டு வரலாம் என்று ஒப்புதல் அளித்தாலும், உச்ச நீதிமன்றத்தில் எந்த நேரத்திலும் இந்த அவசர சட்டத்தை செல்லாததாக ஆக்க முடியும் என்ற நிலை உள்ளது. இருப்பினும் மத்திய, மாநிலஅரசுகள் இந்த அவசர சட்டத்தின் மூலம் போராட்டகளத்தில் உள்ள தமிழ்மக்களின் உணர்வுகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டார்கள் என்பது தான் விடுதலை சிறுத்தை கட்சிகளின் குற்றச்சாட்டு.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மேலும் ஒரு நாள் பொருத்திருந்து சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி களைந்து போகச் செய்து இருக்கலாம். வன்முறை, கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி போன்றவற்றால் அப்புறப்படுத்துவது மிகவும் வேதனையை தருகிறது. இதனை மிகவும் வன்மையாக கண்டிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடந்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நடக்கவில்லை. அங்கு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. தமிழக அரசுக்கு பிரதமர் மோடி பக்கபலமாக இருந்து அவசர சட்டத்தை பிறப்பித்து உள்ளார். இதனால் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சென்றோம்.
இளைஞர்களின் போராட்டத்தை செவி எடுத்து ஜல்லிக்கட்டு நடத்த மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து உள்ளது. போராட்டக்காரர்கள் 2 அரசுகளையும் மதித்து அவசர சட்டத்தை ஏற்று இருக்கவேண்டும். ஜல்லிக்கட்டுக்காக உண்மையாக போராடியவர்கள் அவசர சட்டத்தை ஏற்று இருக்கிறார்கள்.
இது தற்காலிகமான சட்டம் என கூறுகின்றனர். இது நிரந்தரமான சட்டம்தான் என முதல்-அமைச்சர், சட்ட வல்லுனர்கள் கூறுகின்றனர். ஏதோ ஒரு சக்தி இந்த போராட்டங்களில் இருந்து மீள்வதை தடுக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்கள் ஜல்லிக்கட்டு வேண்டும் என போராடினார்கள். இப்போது ஜல்லிக்கட்டு கிடைத்து உள்ளது.
எனவே போராட்டத்தை கைவிட்டு சுமுகமான நிலைக்கு திரும்பவேண்டும். புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு நடந்தபோது 80 பேர் காயமடைந்து, 2 பேர் பலியானதாக வந்த தகவல் வேதனை அளிக்கிறது. இது பாதுகாப்பான விளையாட்டாக இருக்கவேண்டும்.
போராட்ட களத்தில் இருந்து தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பவேண்டும். இனியும் போராட்ட களமாக இருந்தால் அதை யாராலும் தாங்கிக்கொள்ள முடியாது. இதை போராட்டம் நடத்துபவர்கள் உணரவேண்டும். மிருக வதையில் இருந்து ஜல்லிக்கட்டு, ரேக்ளா, மஞ்சுவிரட்டு விலக்கப்பட்டு சட்டம் இயற்றப்பட்டு உள்ளது.
இந்த சட்டத்துக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு வழங்கி உள்ளது. மிக வலுவான சட்டமாக உள்ளது. இதனால் பா.ஜனதா கட்சிக்கு பின்னடைவு கிடையாது. தமிழகத்தில் உள்ள கட்சிகளை விட பா.ஜனதா கட்சி தமிழ் உணர்வு கொண்டது.
மாநிலங்களுக்கு திட்டங்களை கொண்டு வரும் தேசிய கட்சியாக பா.ஜனதா உள்ளது. தவறான உள்நோக்கத்துடன் பிரசாரம் செய்யப்படுவதை கண்டிக்கிறோம். போராட்டத்தை மதித்ததால்தான் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது.
தொடர்ந்து போராடுவது நியாயமா? என்பதை சிந்திக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு நிலுவையில் இருக்கிறது. சட்டரீதியாக வாய்ப்பு இல்லாததால் மத்திய அரசு சட்டம் கொண்டு வரவில்லை. ‘பீட்டா’ அமைப்பின் நோக்கம் வேறாக இருப்பதால் அதை தடை செய்யப்படவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பா.ம.க. இளைஞரணி தலைவரும், எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ், டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக அரசு ஒரு அவசர சட்டத்தை கொண்டு வந்து ஜல்லிக்கட்டு நடக்்கும் என அறிவித்து உள்ளது. 23-ந் தேதி(இன்று) சட்டமன்றம் நடக்கும்போது இதை முழுமையான சட்டமாக்க தயார் செய்ய இருக்கிறார்கள். ஜல்லிக்கட்டு தொடர்பான தீர்ப்பு அடுத்த வாரம் உச்சநீதிமன்றத்தில் வர இருக்கிறது. தமிழக அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்துக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்கவில்லை என்றால் மகிழ்ச்சி. தடை விதித்்து விட்டால் மத்திய அரசுதான் சட்டம் கொண்டு வர வேண்டும்.
தமிழக அரசு கொண்டு வந்து உள்ள சட்டத்துக்கு தடை வழங்கப்பட்டால் நிதிநிலை கூட்டத்தொடரில் சட்டத் திருத்தம் கொண்டு வருவோம் என மத்திய அரசு உத்்தரவாதம் வழங்க வேண்டும். பாராளுமன்றத்தில் சட்டத்திருத்்தம் கொண்டு வந்தால் உச்சநீதிமன்றம் தடை செய்ய முடியாது.
மாணவர்களின் உணர்வை நாம் புரிந்துகொள்ளவேண்டும். 5 ஆண்டுகளாக இந்த அரசுதான் உள்ளது. 2 நாளில் அவசரமாக சட்டம் கொண்டு வரமுடியும் என்கிறபோது, கடந்த காலத்தில் ஏன் கொண்டு வரவில்லை?. மாணவர்கள் தந்த அழுத்தம் காரணமாக டெல்லிக்கு சென்று அவசரமாக கொண்டு வந்ததால் மாணவர்களுக்கு நம்பிக்கை வரவில்லை.
‘பீட்டா’வை தடை செய்ய வேண்டும் என்ற உணர்வு தமிழகத்தில் உள்ளது. இந்தியாவின் வளர்ச்சியை கெடுக்கின்ற அமைப்பு அது. பீட்டாவை தடை செய்ய வேண்டும். எங்களால் செய்ய முடியாத பணிகளை மாணவர்கள் செய்ய வந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு பின்னர் ஜல்லிக்கட்டில் ஒருமித்த உணர்வு உள்ளது. மது எதிர்ப்பு, ஊழல் எதிர்்ப்பு, நிர்வாக சீர்கேடு, காவிரி மேலாண்மை பிரச்சினையிலும் இந்த உணர்வுடன் மாணவர்கள் போராட முன்வந்தால் மாற்றங்கள் வரும்.
ஜல்லிக்கட்டு நிரந்தர தீர்வுக்கு கூட்டு முயற்சி தேவை. முதல்-அமைச்சர் அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும். தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களை அழைத்து சென்று பிரதமரை சந்திக்க வேண்டும். பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் ஒன்றாக இணைந்து ஸ்தம்பிக்க வைக்்க வேண்டும். அப்போதுதான் தமிழகத்துக்கு நன்மைகள் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆலந்தூர்:
ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
உலகத்தின் கவனத்தை ஈர்த்த மெரினாவின் புரட்சி, தமிழக மக்களின் ஆதரவை பெற்ற கிளர்ச்சி இதுவரை தமிழக வரலாற்றில் நடக்காத ஒன்று.
முன்பெல்லாம் மாணவர்கள் போராடும் போது, அடக்குமுறை, துப்பாக்கிசூடு, தீக்குளிப்பு என்று இருந்தது. இன்று தமிழகம் முழுவதும் யாருடைய தலைமையும் இல்லாமல், எந்த ஒரு அரசியல் கட்சி ஊடுருவல் இல்லாமல் போராட்டம் நடக்கிறது.
கொட்டும் பனியில், கொளுத்தும் வெயிலில் சிறு அசம்பாவிதம கூட இல்லாமல் நடக்கின்ற போரட்டம் பெருமைக் குரியது.
ஜல்லிக்கட்டு நடக்க வேண்டி முதல்-அமைச்சர் பன்னீர் செல்வம் எடுத்த நடவடிக்கைகளை வரவேற்கிறேன், பாராட்டுகிறேன். அவரை நான் மதிக்கிறேன்.
ஜல்லிக்கட்டுக்காக தமிழக அரசை அவசர சட்டம் இயற்ற சொன்ன பிரதமர் மோடி, ஏன் மத்திய அரசு கொண்டு வரநடவடிக்கை எடுக்கவில்லை.
‘பீட்டா’ என்பது அமெரிக்காவில் தொடங்கப்பட்ட ஒரு அமைப்பு. அது எத்தனையோ பிராணிகளை கொன்ற அமைப்பு. அதனை கண்டிப்பாக தடை செய்ய வேண்டும்.
உச்சநீதிமன்ற தீர்ப்பை, முல்லைபெரியாறு விவகாரத்திலும் காவிரி பிரச்சினையில் அந்த மாநிலங்கள் மதித்ததா? இனியும் தமிழர்கள், மாணவர்கள் ஏமாற மாட்டார்கள். நம்ப மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பீட்டா அமைப்பும், இந்தியாவின் விலங்குகள் நல வாரியமும் ஜல்லிக்கட்டுக்கு எதிராக தொடர்ந்து செயல் பட்டு வரும் நிலையில், மீண்டும் உச்சநீதிமன்றம் தமிழ்நாட்டின் அவசரச் சட்டத்திற்கு தடை விதிக்கவும் கூடும்.
எனவே, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு நிரந்தர உத்தரவாதம் இல்லை என்பதால் லட்சோப லட்சம் மாணவர்களும், கோடிக் கணக்கான தமிழர்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான அறப்போராட்டத்தைத் தொடர்வது நியாயமானது.
இதே கருத்துக்களை வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடியின் அவசர கவனத்திற்கும் மின்னஞ்சல் கடிதத்தை அனுப்பி உள்ளேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தக் கோரியும் பீட்டா அமைப்பை தடை செய்யக் கோரியும் தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள். பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இதுபற்றி பீட்டா அமைப்பை சேர்ந்த ராதா ராஜன் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தார். இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அவரை கண்டித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.
கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளதால் சென்னை பெசன்ட் நகர் பாரி தெருவில் உள்ள அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் இன்று காலை ராதா ராஜன் வீட்டை முற்றுகையிட தே.மு.தி.க. மாநில பொருளாளர் இளங்கோவன் தலைமையில் 200 தே.மு.தி.க.வினர் வந்தனர். உடனே அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து ராதா ராஜன் வீட்டு முன்பு தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தே.மு.தி.க.விடம் போலீசார் சமரச பேச்சில் ஈடுபட்டனர். இதையடுத்து தே.மு.தி.க.வினர் கலைந்து சென்றனர்.
ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி 3-வது நாளாக நேற்று பழைய மாமல்லபுரம் சாலை செம்மஞ்சேரியில் உள்ள செயின்ட்ஜோசப், ஜேப்பியார், சத்தியபாமா என்ஜினீயரிங் கல்லூரிகளை சேர்ந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் செயின்ட் ஜோசப் கல்லூரி வாயில் எதிரே பழைய மாமல்லபுரம் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் தங்கள் கையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும் பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பினர். மாணவர்களுக்கு ஆதரவாக பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் மட்டும் சுமார் 1 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் ஒரு வழிப்பாதையில் இயக்கப்பட்டன.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நேற்று செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர் குமரன்நகர், சிக்னல், காரப்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் கடைகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள் உள்ளிட்டவைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
குறைந்த அளவு பஸ்களே இயக்கப்பட்டதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் சோழிங்கநல்லூர் சிக்னல் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.
சோழிங்கநல்லூர்-மேடவாக்கம் சாலையில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனங்கள் நுழைவு வாயில் அருகே சாப்ட்வேர் என்ஜினீயர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குமரன்நகர் மற்றும் சோழிங்கநல்லூர் பொன்னியம்மன் கோவில் அருகே ஆட்டோ ஓட்டுனர்கள் பந்தல் அமைத்து தங்கள் குடும்பத்தினருடன் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சோழிங்கநல்லூர் மின்வாரிய அலுவலகம் எதிரில் தனியார் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் தங்கள் குழந்தைகளுடன் வந்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சோழிங்கநல்லூர் சிக்னல் அருகே தனியார் பல் மருத்துவமனை ஊழியர்களும் அமைதி போராட்டத்தில் ஈடுபட்டனர். சோழிங்கநல்லூர் துலுக்கானத்தம்மன் கோவில் அருகில் தனியார் சாப்ட்வேர் நிறுவன என்ஜினீயர்கள் சாலை ஓரத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்போரூர் ஒன்றியத்தில் உள்ள நாவலூர், சிறுசேரி, படூர், கேளம்பாக்கம், மேலகோட்டையூர், புதுப்பாக்கம், காலவாக்கம், திருப்போரூர், தண்டலம், மானாம்பதி, சிறுதாவூர் மற்றும் திருப்போரூர் ஆகிய இடங்களில் பள்ளி மாணவர்கள், இளைஞர்கள், பல்வேறு தொழிற் சங்க அமைப்புகள், ஆட்டோ டிரைவர்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்போரூரை சுற்றி உள்ள வெவ்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் அனைவரும் ஒன்று கூடி திருப்போரூர் அம்பேத்கர் சிலை அருகில் போராட்டம் நடத்தினர். பின்னர் திருப்போரூர் பகுதியில் முக்கிய வீதிகளில் பேரணியாக சென்று பஸ் நிலையம் வந்து மீண்டும் போராட்டத்தை தொடர்ந்தனர்.
அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் எலப்பாக்கம் மற்றும் சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள், விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் ஊர்வலமாக சென்று பஸ் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சோத்துப்பாக்கம் மற்றும் போந்தூர் கூட்ரோட்டில் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இடைக்கழிநாடு பேரூராட்சி கடப்பாக்கத்தில் கிழக்கு கடற்கரை சாலையோரம் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அச்சரப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து பள்ளி ஆசிரியர்கள், அனைத்து அரசு ஊழியர்கள் அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அலுவலகம் அருகே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சீபுரம்:
ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் பிறப்பிக்க கோரி தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் ரெயில் மறியலில் ஈடுபட்டனர். காஞ்சீபுரம் புதிய ரெயில் நிலையத்தில் திருமால்பூர் - சென்னை கடற்கரை மின்சார ரெயிலை முற்றுகையிட்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. எழிலரசன், சன்பிராண்ட் ஆறுமுகம், வி.எஸ்.ராமகிருஷ்ணன், பி.எம்.குமார். சிறுவேடல் செல்வம், வி.ராஜேந்திரன், சோபன்குமார், உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதே போல் வாலாஜாபாத் ரெயில் நிலையத்தில் உத்திரமேருர் எம்.எல்.ஏ. சுந்தர் தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் சேகர், பாண்டியன், குமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் ஊர்வலமாக வந்து ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காட்டாங்கொளத்தூர் ஒன்றிய செயலாளர் தண்டபாணி, நகர செயலாளர்கள், நரேந்திரன், சண்முகம், முன்னாள் எம்.எல்.ஏ. தமிழ்மணி, மூர்த்தி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கார்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் ஆலடி சா.மு.நாசர் தலைமையில் எம்.எல்.ஏ., வி.ஜி ராஜேந்திரன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் 500-க்கும் மேற்பட்டோர் அரக்கோணம் புறநகர் ரெயிலை மறித்து மறியலில் ஈடுபட்டனர்.
மறியல் போராட்டத்தில் காலை 6 மணி முதல் அரக்கோணத்தில் இருந்து திருவள்ளூர்-சென்னை நோக்கி எந்த மின்சார ரெயிலும் இயக்கப்படவில்லை.
கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தில் திருவள்ளூர் வடக்குமாவட்ட செயலாளர் வேலு தலைமையில் ரெயில் மறியல் போராட்டம் நடந்தது.
காஞ்சீபுரத்தில் இன்று 3-வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு ராட்டின கிணறு மேம்பாலம் அருகே சட்டக் கல்லூரி மாணவர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்றும் அவர்கள் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.
கும்மிடிப்பூண்டி பஸ் நிலையத்தில் நேற்று மாலை துவங்கிய ஆர்ப்பாட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நேற்று இரவு வரை மாணவர்கள் போராட்டத்தில் டி.வி. சீரியல் நடிகை மகாலட்சுமி கலந்து கொண்டு தனது ஆதரவை தெரிவித்தார். இன்று காலையும் அவர் மாணவர்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே மாணவர்கள் இன்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும் அவர்கள் இன்று முதல் உண்ணாவிரதத்தை தொடங்கி உள்ளனர்.
பீர்க்கன்கரணை பஸ் நிலையம் அருகே கல்லூரி மாணவர்கள், ஐடி ஊழியர்கள் சுமார் 300 பேர் போராட்டம் நடத்தினர். தாம்பரம் சானட்டோரியம் ஜி.எஸ்.டி. சாலை அருகே சாப்ட்வேர் என்ஜினீயர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிழக்கு தாம்பரம் பூண்டி பஜார் பகுதியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சேலையூரை அடுத்த அகரம் தென்சாலை, சிட்லபாக்கம் ஆர்.பி.சாலை, முடிச்சூர் லட்சுமிபுரம், உள்ளிட்ட இடங்களிலும் போராட்டம் நடைபெற்றது.
பல்லாவரம் பஸ் நிலையத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரம் இருந்தனர். அனகாபுத்தூர் பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஊத்துக்கோட்டை அருகே உள்ள தொம்பரம்பேடுவில் இன்று காலை மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். இதில் ஏராளமான பொதுமக்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
பூந்தமல்லியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் நகராட்சி அலுவலகத்தில் இருந்து பூந்தமல்லி கோர்ட்டு வரை ஊர்வலமாக சென்றனர். பூந்தமல்லி கோர்ட்டு அருகே இன்று 2-வது நாளாக கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
வியாசர்பாடி, சாஸ்திரி நகரில் பாதிரியார் பாலச்சாமி தலைமையில் கிறிஸ்தவர்கள் 500-க்கும் மேற்பட் டோர் அம்பேத்கர் கல்லூரி வரை ஊர்வலமாக சென்றனர். பின்னர் அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவொற்றியூர், காலடிபேட்டை, காந்தி சிலை அருகே கோக், பெப்சி குளிர்பானங்களை கீழே கொட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தாழங்குப்பம் மீனவர் கிராமத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்றது. திருவொற்றியூர் சத்திய மூர்த்தி நகரில் பொதுமக்கள் மற்றும் சென்னை பசுமை இயக்கத்தினர் உண்ணாவிரதம் இருந்தனர்.
ஜல்லிக்கட்டை ஆதரித்தும், பீட்டா அமைப்புக்கு தடை விதிக்க கோரியும் தமிழகம் முழுவதும் மாணவர்களும், இளைஞர்களும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
காஞ்சீபுரம் வணிகர் வீதியில் நேற்று முன்தினம் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தை தொடங்கினர். தொடர்ந்து அவர்கள் அங்கேயே முகாமிட்டு உள்ளனர்.
நேற்று இரவு கடும் பனியிலும் குளிரை பொருட்படுத்தாமல் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இரவிலும் கோஷங்களை எழுப்பி போராட்டம் செய்தனர். இன்று 3-வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காஞ்சீபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, இன்ஸ்பெக்டர்கள் ஜெய்சங்கர், லட்சுமிபதி, அண்ணாத்துரை, முத்துராம லிங்கம், ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
செங்கல்பட்டு ராட்டின கிணறு மேம்பாலம் அருகே சடடக் கல்லூரி மாணவர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்றும் அவர்கள் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி அருகே அரிமா சங்கம், வணிகர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரி முன்பு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
கும்மிடிப்பூண்டி பஸ் நிலையத்தில் நேற்று மாலை துவங்கிய ஆர்ப்பாட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள், சமூக வலைதள குழுவைச் சேர்ந்த நண்பர்கள், பொதுமக்கள், அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், நிலத்தரகர் சங்க நிர்வாகிகள், பெண்கள் என 400-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று உள்ளனர்.
ஆர்ப்பாட்ட இடத்திலேயே தங்களது இரவு உணவை சாப்பிட்ட அவர்கள் ஜல்லிக்கட்டு குறித்து நல்ல முடிவு வரும் வரை போராட்டத்தை தொடரப்போவதாக அறிவித்து உள்ளனர்.
நேற்று இரவு வரை மாணவர்கள் போராட்டத்தில் டி.வி. சீரியல் நடிகை மகாலட்சுமி கலந்து கொண்டு தனது ஆதரவை தெரிவித்தார். இன்று காலையும் அவர் மாணவர்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே மாணவர்கள் இன்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும் அவர்கள் இன்று முதல் உண்ணா விரதத்தை தொடங்கி உள்ளனர்.
இதற்கு அப்பகுதி மக்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். காலை முதல் ஏராளமானோர் போராட்டம் நடத்தும் இடத்தில் குவிந்து தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
தனியார் நிறுவன ஊழியர்களும் இதில் பங்கேற்றனர். வக்கீல்கள் இன்று கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதையடுத்து அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
காஞ்சீபுரம்:
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இணையதளம் மூலம் இணைந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
காஞ்சீபுரத்தில் நேற்று மாலை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஜல்லிகட்டுக்கு ஆதரவு தெரிவித்து நகராட்சி அலுவலகம் அருகில் திரண்டனர்.
அவர்கள் பஸ் நிலையம் வழியாக காமராஜர் வீதியில் பேரணியாக சென்றனர். அவர்களிடம் போலீசார் சமாதானம் பேசி கலந்து போகுமாறு கூறினர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்ல மறுத்து காஞ்சீபுரம், காமராஜர் வீதி மண்ணடி தெருவில் அமர்ந்தனர். விடிய விடிய அவர்களது போராட்டம் நீடித்தது.
இன்று 2-வது நாளாக போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. அதிகாலை முதல் மேலும் ஏராளமான மாணவர்கள், இளைஞர்கள் போராட்ட களத்திற்கு வந்தனர். ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் திரண்டு உள்ளதால் அப்பகுதி யில் பரபரப்பாக காணப்படுகிறது.
போராட்டத்தில் ஈடுபட் டோர் ஜல்லிகட்டுக்கு ஆதரவு தெரிவித்தும் பீட்டா அமைப்பினை தடை செய்யக் கோரியும் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடியவர்களை கைது செய்ததை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
இப்போது நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், மாணவர்கள் தங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்குமாறு பொது மக்களிடம் கேட்டு வருகின்றனர்,
மேலும் இணையதளம் மூலம் ஜல்லிகட்டுக்கு ஆதரவு திரட்டுமாறு இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
மேலும் இந்தியாவில் பீட்டா அமைப்பிற்கு தடை விதிக்கும் வரை தங்கள் போராட்டம் ஓயாது எனவும் தெரிவித்தனர்.
போராட்டம் நடை பெறும் இடத்தில் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் தலைமையில் இன்ஸ் பெக்டர்கள் அண்ணா துரை, ஜெய்சங்கர், லட்சுமிபதி உள்பட ஏராளமான போலீ சார் குவிக்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூரில் உள்ள கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் ஜல்லிக்கட்டை நடத்த கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்யக் கோரியும் இன்று காலையில் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள எம்.ஜி.ஆர். சிலை, திருவள்ளூர் ஆயில் மில், திருவள்ளூர் டோல்கேட் ஆகிய 3 இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் மாணவர்கள், இளைஞர்கள் கலைந்து கோஷம் எழுப்பியபடி ஊர்வலமாக சென்று திருவள்ளூர் ஆயில் மில்லில் ரெயில் நிலையம் வரை மனித சங்கிலியாக நின்று போராட்டம் நடத்தினர்.
அசம்பாவிதங்களை தடுக்க திருவள்ளூர் துணை சூப்பிரண்டு ஈஸ்வரன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இதைபோல் பொன்னேரி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 300-க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
செங்கல்பட்டு அரசு கலைக்கல்லூரி மாணவ- மாணவிகள் 700 பேர் இன்று வகுப்புகளை புறக்கணித்து சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒன்று கூடினார்கள்.
பின்னர் அவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேரணியாக சென்றனர். செங்கல்பட்டு பஸ் நிலையத்தை அடைந்ததும் அங்கு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.






