என் மலர்
செய்திகள்

'பீட்டா' ராதாராஜன் வீட்டில் தே.மு.தி.க. முற்றுகை
ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்ததால் பீட்டா ராதாராஜன் வீட்டில் தே.மு.தி.க. முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டது.
திருவான்மியூர்:
ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தக் கோரியும் பீட்டா அமைப்பை தடை செய்யக் கோரியும் தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள். பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இதுபற்றி பீட்டா அமைப்பை சேர்ந்த ராதா ராஜன் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தார். இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அவரை கண்டித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.
கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளதால் சென்னை பெசன்ட் நகர் பாரி தெருவில் உள்ள அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் இன்று காலை ராதா ராஜன் வீட்டை முற்றுகையிட தே.மு.தி.க. மாநில பொருளாளர் இளங்கோவன் தலைமையில் 200 தே.மு.தி.க.வினர் வந்தனர். உடனே அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து ராதா ராஜன் வீட்டு முன்பு தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தே.மு.தி.க.விடம் போலீசார் சமரச பேச்சில் ஈடுபட்டனர். இதையடுத்து தே.மு.தி.க.வினர் கலைந்து சென்றனர்.

Next Story