என் மலர்
காஞ்சிபுரம்
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் ஒரு நிரந்தரமான, நிலையான அரசு இல்லை. பன்னீர்செல்வம் ராஜினாமா செய்த பின்னர் தற்காலிக அரசு செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள பிரச்சினைகளுக்கு, குழப்பங்களுக்கு அரசியல் சட்டப்படி, சட்டமன்ற, பாராளுமன்ற விதிகளின்படி நிலையான அரசை ஏற்படுத்த கவர்னர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் நிலவும் ஒரு வார கால அரசியல் நிலவரம் குறித்து ராகுல்காந்தியிடம் தெரிவிக்கப்பட்டது. சசிகலா, பன்னீர்செல்வம் ஆகிய இருவரில் காங்கிரஸ் கட்சி யாரையும் ஆதரிக்கவில்லை. அரசியல் சட்டத்தை காங்கிரஸ் கட்சி ஆதரிக்கிறது.
வட மாநிலங்களில் நிலையாக இருந்த ஆட்சிகளை கலைத்து குறுக்குவழியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்க முயற்சித்தது. தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு எந்தவிதமான அஸ்திவாரமும் இல்லாத நிலையில், ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல் ஆகியவற்றை மனதில் கொண்டு குறுக்குவழியில் கால்பதிக்க முயற்சி செய்கிறது.
கவர்னரை மத்திய அரசு நிர்ப்பந்திக்கக் கூடாது. அரசியல் சட்டப்படி எது நியாயம் என்று தோன்றுகிறதோ அதன்படி சுதந்திரமாக செயல்பட்டு, கவர்னர் விரைந்து முடிவு செய்ய வேண்டும். சட்டசபையைக் கூட்டி நம்பிக்கை தீர்மானம் கொண்டுவந்து, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு யாருக்கு பெரும்பான்மையாக உள்ளது என்பதை நிரூபித்து நிலையான அரசை ஏற்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் நிறைய பிரச்சினைகள் உள்ளன. ‘நீட்’ தேர்வு குறித்து தமிழக மாணவர்கள் மத்திய அரசை அணுக வேண்டும். தமிழகத்தில் வறட்சி காரணமாக விவசாயிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
நிலையான அரசு இருந்தால்தான் மக்களுக்கு தொடர்ந்து பணியாற்ற முடியும். இதற்கான முயற்சியை கவர்னர் விரைந்து எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காஞ்சீபுரத்தை அடுத்த திருபருத்திகுன்றம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர்.
பிரபல சாராய வியாபாரியான இவர் ரவுடியாகவும் செயல்பட்டார். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்ட ஸ்ரீதர் பலரை மிரட்டி அவர்களது சொத்துக்களை குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்று வந்தார். இதுகுறித்து பலர் போலீசில் புகார் செய்தனர்.
இதையடுத்து போலீசார் ஸ்ரீதரை கைது செய்ய முயன்ற போது அவர் தலைமறைவானார்.
தற்போது ஸ்ரீதர் வெளிநாட்டில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அங்கிருந்த படியே செல்போனில் பேசி இங்குள்ளவர்களை மிரட்டி சொத்துக்களை தன் மனைவி குமாரி, மகள் தனலட்சுமி, சகோதரர் செந்தில் ஆகியோர் பெயரில் வாங்கி விற்பதாக புகார்கள் வந்தன.
இதுகுறித்த புகாரின் பேரில் சென்னை அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்தது.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஸ்ரீதரின் ரூ. 160 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்தது.
இந்த நிலையில் ஸ்ரீதர் மற்றும் அவரது மனைவி, மகள், சகோதரர் ஆகியோர் பெயரில் உள்ள ரூ. 21 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதில் மனைவி குமாரி பெயரில் ரூ.10 கோடி மதிப்புள்ள நிலங்கள், சகோதரர் செந்தில் பெயரில் உள்ள ரூ.2.84 கோடி மதிப்புள்ள 2 வீடுகள், செந்திலின் மனைவி மற்றும் குழந்தைகள் பெயரில் உள்ள ரூ.7.68 கோடி மதிப்புள்ள நிலங்கள் உள்பட 14 சொத்துக்கள் அடங்கும்.
இதன் மூலம் ரவுடி ஸ்ரீதரின் ரூ. 181 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டு இருக்கிறது.
திருவான்மியூர்:
சோழிங்கநல்லூர் கங்கை அம்மன்கோவில் 2-வது தெருவில் வசித்து வருபவர் பாஸ்கர். ஆந்திராவை சேர்ந்த இவர் செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி ரூத். இவர்களுக்கு 3 வயதில் மகள், 10 மாத ஆண் குழந்தை உள்ளனர்.
பாஸ்கர் மனைவி ரூத்தின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறில் ஈடுபடுவார். நேற்று இரவு பாஸ்கர் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது மனைவியிடம் தகராறு செய்தார். இதில் அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
குடிபோதையில் இருந்த பாஸ்கர் ஆத்திரமடைந்து உருட்டுகட்டையால் மனைவி ரூத்தை சரமாரியாக தாக்கினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
பின்னர் ஆத்திரம் அடங்காமல் மகள், கைக் குழந்தையையும் உருட்டுக் கட்டையால் தாக்கினார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போது ரூத், 10 மாத ஆண் குழந்தை இறந்திருந்தனர். உயிருக்கு போராடி கொண்டிருந்த 3 வயது சிறுமியை மீட்டு ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ரூத், குழந்தை உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போதையில் இருந்த பாஸ்கரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீபெரும்புதூப்:
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த தென்னலூரை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் வேணுகோபால் (வயது 15). தெரசாபுரத்தில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று மாலை அவர் பள்ளி முடிந்து அரசு பஸ்சில் (எண்.583) ஸ்ரீபெரும்புதூர் நோக்கி வந்தார். கூட்டம் அதிகமாக இருந்ததால் வேணுகோபால் படிக்கட்டில் நின்று பயணம் செய்தார்.
தெரசாபுரம் கூட்டுச் சாலை அருகே வந்தபோது வேகத்தடையில் பஸ் ஏறி இறங்கியது. இதில் நிலை தடுமாறிய வேணுகோபால் தவறி கீழே விழுந்தார். பஸ்சின் சக்கரத்தில் சிக்கிய அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
விபத்தை தடுக்க பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் அதிகமாக பயணம் செய்யும் காலை, மாலை நேரங்களில் வல்லக்கோட்டை - ஸ்ரீபெரும்புதூர் இடையே கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மேடவாக்கத்தை அடுத்த கோவிலம்பாக்கத்தை சேர்ந்தவர் பிரதீப் (16). அருகில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
கடந்த 7-ந் தேதி பள்ளி முடிந்து மாநகர பஸ்சில் (எம்14) வந்தார். படிக்கட்டில் பயணம் செய்த அவர் தவறி விழுந்து படுகாயம் அடைந்தார்.
அவருக்கு பள்ளிக்கரணையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பிரதீப் பரிதாபமாக இறந்தார்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு இன்று அதிகாலை பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது.
அதில் செல்ல இருந்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சென்னையை சேர்ந்த ஷேக்சாய்பு, புலாம் சாகுல் ஆகியோரின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் வைத்திருந்த ‘டீ பிளாஸ்கை’ சோதனை செய்தபோது அமெரிக்க டாலர் நோட்டுகளை சுருட்டி வைத்து கடத்தி வந்தது தெரிந்தது.
அவற்றை பறிமுதல் செய்தனர். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ. 17 லட்சம் ஆகும். இதையடுத்து ஷேக் சாய்பு, புலாம் சாகுல் ஆகியோரின் பயணத்தை அதிகாரிகள் ரத்து செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த டிசம்பர் மாதம் 12-ந்தேதி வர்தா புயல் சென்னையை தாக்கியது. இதில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் கடும் சேதம் ஏற்பட்டது. பூங்காவில் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. விலங்குகள் அடைப்பிடங்கள், பார்வையாளர்கள் செல்லும் இடங்கள் கடுமையாக சேதம் அடைந்தன.
இதையடுத்து பூங்காவில் சீரமைப்பு பணிகள் நடந்தது. சாய்ந்து விழுந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி பூங்காவில் ஒரு இடத்தில் குவித்து வைத்தனர். விலங்குகள் இருப்பிடங்கள் சீரமைக்கப்பட்டு வந்தது.
இதனால் பொங்கல் பண்டிகைக்கு பூங்கா திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சீரமைப்பு பணிகள் முழுமையாக முடியாததால் பொங்கலுக்கு பூங்கா திறக்கப்படவில்லை.
கடந்த 2 மாதங்களாக சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வந்தது. தற்போது பணிகள் முழுமையாக முடிந்தது. மரக்கழிவுகள் அகற்றப்பட்டது. குடிநீர், கழிவறை வசதிகள் செய்யப்பட்டன.
பார்வையாளர்கள் செல்லும் பாதைகளும் சரி செய்யப்பட்டன. இதையடுத்து வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை திறக்கப்படும் என்று பூங்கா இயக்குனர் தெரிவித்தார்.
இதற்காக விலங்குகள் அதன் இருப்பிடங்களில் அடைக்கப்பட்டு உள்ளன. 2 மாதங்களுக்கு பிறகு பூங்கா திறக்கப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 3-ந்தேதி முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து கணபதி ஹோமம், சதுர் வேத சமர் பணம், கன்யா பூஜை, சுவாசினி பூஜைகள் நடந்தது.
இன்று காலை 7-ம் கால யாக சாலை பூஜையும் ஹோம மும் மஹா பூர்ணாஹீதி மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து புனித நீர் அடங்கிய கலசங்கள் யாகசாலைகளில் இருந்து கோவிலின் பரம்பரை ஸ்தானீகர்கள் தலையில் சுமந்து வேத மந்திரங்கள், மங்கல வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
கோவிலின் ராஜகோபுரம் உள்ளிட்ட 4 கோபுரங்களிலும் மற்றும் மூலஸ்தானத்தின் மேல் அமைந்துள்ள தங்ககோபுரம், ஆதிசங்கரர் சன்னதிக்கு மேல் உள்ள தங்க கோபுரம் ஆகியவற்றில் காஞ்சீபுரம் சங்கராசாரியார்கள் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவிலின் உள்ளேயும் வெளியேயும் திரண்டிருந்த பக்தர்கள் மீது மின்சார மோட்டார் உதவியுடன் புனிதநீர் தெளிக்கப்பட்டது. கோவிலை சுற்றிலும் ஏராளமான இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்சியில் திருக்கோயிலின் ஸ்ரீகார்யம் சல்லா விஸ்வநாத சாஸ்திரி, ஸ்ரீமடத்தின் ஸ்ரீகார்யம் விஸ்வநாத அய்யர், காமாட்சி அம்மன் கோயில் புனரமைப்பு பணிக்குழு தலைவர் சிவ் நாடார், சேர்மன் ஏ.சி. முத்தையா மற்றும் திருப்பணி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் காஞ்சீபுரம் காந்தி சாலையில் அமைந்துள்ள வழக்கறுத்தீசுவரர் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது.
புதியதாக 3 நிலைகளை கொண்டு அமைக்கப்பட்ட ராஜகோபுரத்திற்கும் அதன் பின்னர் மூலவருக்கும் சிவாச் சாரியார்களால் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். இதனை தொடர்ந்து சுவாமிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.
காஞ்சீபுரம் நகரில் அமைந்துள்ள பிரசித்திபெற்றது. கோவில்களின் கும்பாபி ஷேகங்கள் இன்று ஒரே நாளில் நடைபெற்றதால் நகரின் முக்கிய சாலைகள் அனைத்திலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
காமாட்சி அம்மன் கோவிலில் முன்னதாக 1995-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்று இருந்தது. தற்போது ரூ. 35 கோடி செலவில் கோவில் புரனமைக்கப்பட்டு 21 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கும்பாபிஷேகம் நடந்துள்ளது.
வடக்கு மண்டல ஐ.ஜி. செந்தாமரைகண்ணன், டி.ஐ.ஜி. நஜ்மல் ஹோடா உத்தரவின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி தலைமையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
உயரமான இடங்களில் போலீசார் பைனாகுலர் மூலம் மக்கள் கூட்டத்தை கண்காணித்தனர். கோவில்களை சுற்ற நூற்றுக்கும் மேற்பட்ட தற்காலிக சி.சி. டி.வி. கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
தாம்பரம் சானிடோரியத்தில் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்படும் வளாகம் உள்ளது. இங்குள்ள பல்பு தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களிடம் 2 சூப்பர்வைசர்கள் ஆபாசமாக பேசுவதாகவும், தொல்லை கொடுத்ததாகவும் புகார் எழுந்தது. இதுபற்றி தொழிற்சாலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதேபோல் தனியார் தொழிற்சாலையில் சம்பளம் உயர்த்தி வழங்கப்படவில்லை என்றும், சம்பளம் உயர்வு கேட்ட 7 தொழிலாளர்களை நீக்கம் செய்ததாகவும் குற்றச்சாட்டு கூறினர்.
இந்த இரு தொழிற்சாலையை சேர்ந்த 500 பேர் இன்று காலை தாம்பரம் ஜி.என்.டி. சாலையில் திடீர் மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சமரச பேச்சு நடத்தினர். ஆனால் தொழிலாளர்கள் சமரசத்தை ஏற்கவில்லை. இதையடுத்து 100 பெண்கள் உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த மறியலால் தாம்பரத்தில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதில் 4 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர் பார்க்கப்படுகிற்து. இந்த நிலையில்கோவிலில் பாதுகாப்பு பணிகள் குறித்து வடக்கு மண்டல ஐ.ஜி. செந்தாமரை கண்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
காமாட்சி அம்மன் கோவில் மூலஸ்தான தங்க கோபுரம் கும்பாபிஷேகம் செய்ய கலசநீர் கொண்டு செல்லப்படும் வழிகள், முக்கிய பிரமுகர்கள் வந்து செல்லும் வழிகள் பக்தர்கள் அதிகளவில் கூடும் இடங்கள் ஆகியவற்றினை பார்வையிட்டார்.
கும்பாபிஷேகத்திற்கு பிறகு லட்சகணக்கில் பக்தர்கள் கூடும் நிலையில் பாதுகாப்பு பணிகளுக்காக 2 ஆயிரம் போலீசார் ஈடுபடுவர். மேலும் 2 சிறப்பு பிரிவு போலீசார், வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட அண்டை மாவட்டங்களில் இருந்து கூடுதல் போலீசார் ஆகியோருடன் 2 எஸ்.பி., 2 டி.ஐ.ஜி. உள்ளிட்டோரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.
கோவில்களில் உள்ள குளங்களின் அருகில் ரப்பர் படகுகள் மற்றும் நீச்சல் வீரர்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படுவர். மேலும் கோவில்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் 100 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு முழுவதும் கண்காணிக்கப்படும்.
பொது மக்களுக்கு உதவும் வகையில் காவல் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்படும். அவசர உதவிக்கு பொதுமக்கள் 044-27237107, 27237207 ஆகிய தொலைபேசி எண்களை பயன்படுத்தலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது டி.ஐ.ஜி. நஜ்மல் ஹோடா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி, உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், இன்ஸ்பெக்டர்கள் ஜெய்சங்கர், வெற்றிச் செல்வன், லட்சுமிபதி உடன் இருந்தனர்.
கும்பாபிஷேத்தை காண பொது மக்கள் நாளை காலை 7.30 மணிமுதல் தெற்கு வாசல் வழியே அனுமதிக்கப்படுவர். கும்பாபிஷேகம் முடிந்த உடன் அவர்கள் வடக்கு வாசல் வழியே வெளியே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வெளியே செல்பவர்கள் சாமி தரிசனம் செய்ய விரும்பினால் மீண்டும் தெற்கு வாசல் வழியாகவே உள்ளே வர வேண்டும். தரினத்திற் காக 12.30 மணிக்கு மேல் தான் அனுமதி அளிக்கப்படும்.
மேலும் பொது மக்கள் வசதிக்காக கோவிலின் உள்ளே இன்றும் நாளையும் சிறப்பு மருத்துவ முகாம் செயல்படும். இதை தவிர 50 துப்பரவு தொழிலாளர்கள் கோவில் சுற்றியுள்ள பகுதியில் துப்பரவு பணியில் ஈடுபடுகிறார்கள்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டை அடுத்த நெம்மேலியில் உள்ள பாழடைந்த வீட்டில் பாண்டிச் சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் மதுக்கி விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் சோதனை செய்தபோது 3 ஆயிரத்து 200 மதுபாட்டில்கள் அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிந்தது. இதையடுத்து அதே பகுதியை சேர்ந்த ஜெயந்தி, பூபாலன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக 4 பேரை தேடி வருகிறார்கள்.
செங்கல்பட்டு:
திருப்போரூரை அடுத்த நாவலூரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). தனியார் செல்போன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இவரது மனைவி சத்யா (வயது 30). மகள்கள் பிரீத்தா (வயது 2), ஷைனா (8), மாமியார் பரிமளா.
இவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சேலத்தில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றனர். நேற்று மாலை அவர்கள் காரில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
செங்கல்பட்டை அடுத்த புலிப்பாக்கம் சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் நள்ளிரவில் வந்த போது முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றனர்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்புச் சுவரில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் பலத்த காயம் அடைந்த மணிகண்டன், அவரது மனைவி சத்யா, மகள் பிரீத்தா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
சிறுமி ஷைனா, பரிமளா ஆகியோர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.
தகவல் அறிந்ததும் செங்கல்பட்டு போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலியான 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஒரே குடும்பத்தில் 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தாம்பரம்:
தாம்பரத்தை அடுத்த கடப்பேரி அருகே உள்ள சிக்னலில் இன்று காலை ஏராளமான வாகனங்கள் நின்று கொண்டு இருந்தன.
அப்போது தாம்பரத்தில் இருந்து பிராட்வே நோக்கி மாநகர பஸ் (எண்.21ஜி) வந்தது. சிக்னல் அருகே வந்த போது திடீரென பஸ்சில் பிரேக் பிடிக்கவில்லை.
டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி சிக்னலில் நின்ற வாகனங்கள் மீது அடுத்தடுத்து பயங்கரமாக மோதியது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் வண்டியில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்தனர். பஸ்சில் இருந்த பயணிகளும் பயத்தில் கீழே குதித்து அலறியடித்து ஓடினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பஸ் மோதியதில் சிக்னலில் நின்ற 5 மோட்டார் சைக்கிள்கள், மினி லாரி உள்பட 9 வாகனங்கள் சேதம் அடைந்தன. 10 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதில் 2 பேர் மேல்சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
விபத்து நடந்ததும் ஆத்திரம் அடைந்த வாகன ஓட்டிகள், மாநகர பஸ் டிரைவரை சுற்றி வளைத்து தாக்கினர். பஸ்சில் பிரேக் பிடிக்காததை ஆரம்பத்திலேயே கவனிக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பினர்.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர்சேதம் ஏற்பட வில்லை. தறிகெட்டு ஓடிய மாநகர பஸ், வாகனங்கள் மீது மோதிய சிறிது நேரத்தில் நின்றதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.






