என் மலர்

  செய்திகள்

  சோழிங்கநல்லூரில் மனைவி-கைக்குழந்தையை அடித்து கொன்ற வாலிபர்
  X

  சோழிங்கநல்லூரில் மனைவி-கைக்குழந்தையை அடித்து கொன்ற வாலிபர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சோழிங்கநல்லூரில் மனைவி மற்றும் கைக்குழந்தையை அடித்து கொலை செய்யப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  திருவான்மியூர்:

  சோழிங்கநல்லூர் கங்கை அம்மன்கோவில் 2-வது தெருவில் வசித்து வருபவர் பாஸ்கர். ஆந்திராவை சேர்ந்த இவர் செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் வேலை பார்த்து வருகிறார்.

  இவரது மனைவி ரூத். இவர்களுக்கு 3 வயதில் மகள், 10 மாத ஆண் குழந்தை உள்ளனர்.

  பாஸ்கர் மனைவி ரூத்தின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறில் ஈடுபடுவார். நேற்று இரவு பாஸ்கர் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது மனைவியிடம் தகராறு செய்தார். இதில் அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

  குடிபோதையில் இருந்த பாஸ்கர் ஆத்திரமடைந்து உருட்டுகட்டையால் மனைவி ரூத்தை சரமாரியாக தாக்கினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

  பின்னர் ஆத்திரம் அடங்காமல் மகள், கைக் குழந்தையையும் உருட்டுக் கட்டையால் தாக்கினார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.

  போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போது ரூத், 10 மாத ஆண் குழந்தை இறந்திருந்தனர். உயிருக்கு போராடி கொண்டிருந்த 3 வயது சிறுமியை மீட்டு ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  ரூத், குழந்தை உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  போதையில் இருந்த பாஸ்கரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

  இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  Next Story
  ×