என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
    X

    காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

    காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவில் மற்றும் வழக்கறுத்தீசுவரர் கோவில் கும்பாபிஷேகங்கள் நாளை காலை நடைபெற உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவில் மற்றும் வழக்கறுத்தீசுவரர் கோவில் கும்பாபிஷேகங்கள் நாளை காலை நடைபெற உள்ளது.

    இதில் 4 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர் பார்க்கப்படுகிற்து. இந்த நிலையில்கோவிலில் பாதுகாப்பு பணிகள் குறித்து வடக்கு மண்டல ஐ.ஜி. செந்தாமரை கண்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

    காமாட்சி அம்மன் கோவில் மூலஸ்தான தங்க கோபுரம் கும்பாபிஷேகம் செய்ய கலசநீர் கொண்டு செல்லப்படும் வழிகள், முக்கிய பிரமுகர்கள் வந்து செல்லும் வழிகள் பக்தர்கள் அதிகளவில் கூடும் இடங்கள் ஆகியவற்றினை பார்வையிட்டார்.

    கும்பாபிஷேகத்திற்கு பிறகு லட்சகணக்கில் பக்தர்கள் கூடும் நிலையில் பாதுகாப்பு பணிகளுக்காக 2 ஆயிரம் போலீசார் ஈடுபடுவர். மேலும் 2 சிறப்பு பிரிவு போலீசார், வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட அண்டை மாவட்டங்களில் இருந்து கூடுதல் போலீசார் ஆகியோருடன் 2 எஸ்.பி., 2 டி.ஐ.ஜி. உள்ளிட்டோரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.

    கோவில்களில் உள்ள குளங்களின் அருகில் ரப்பர் படகுகள் மற்றும் நீச்சல் வீரர்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படுவர். மேலும் கோவில்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் 100 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு முழுவதும் கண்காணிக்கப்படும்.

    பொது மக்களுக்கு உதவும் வகையில் காவல் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்படும். அவசர உதவிக்கு பொதுமக்கள் 044-27237107, 27237207 ஆகிய தொலைபேசி எண்களை பயன்படுத்தலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது டி.ஐ.ஜி. நஜ்மல் ஹோடா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி, உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், இன்ஸ்பெக்டர்கள் ஜெய்சங்கர், வெற்றிச் செல்வன், லட்சுமிபதி உடன் இருந்தனர்.

    கும்பாபிஷேத்தை காண பொது மக்கள் நாளை காலை 7.30 மணிமுதல் தெற்கு வாசல் வழியே அனுமதிக்கப்படுவர். கும்பாபிஷேகம் முடிந்த உடன் அவர்கள் வடக்கு வாசல் வழியே வெளியே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    வெளியே செல்பவர்கள் சாமி தரிசனம் செய்ய விரும்பினால் மீண்டும் தெற்கு வாசல் வழியாகவே உள்ளே வர வேண்டும். தரினத்திற் காக 12.30 மணிக்கு மேல் தான் அனுமதி அளிக்கப்படும்.

    மேலும் பொது மக்கள் வசதிக்காக கோவிலின் உள்ளே இன்றும் நாளையும் சிறப்பு மருத்துவ முகாம் செயல்படும். இதை தவிர 50 துப்பரவு தொழிலாளர்கள் கோவில் சுற்றியுள்ள பகுதியில் துப்பரவு பணியில் ஈடுபடுகிறார்கள்.
    Next Story
    ×