என் மலர்
காஞ்சிபுரம்
மாமல்லபுரத்தில் காதலியை சுத்தியலால் அடித்து கொன்ற காதலன் பின்னர் காதலியின் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை:
சென்னை கொட்டிவாக்கத்தை சேர்ந்த இருதயராஜ் மகள் ஜெனிபர்புஷ்பா (20) நுங்கம்பாக்கத்தில் மகளிர் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார்.
இவரும் செம்மஞ்சேரி வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்த ஜான்மேத்தீசும் (22). பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்து வந்தனர். அவரது தந்தை மாணிக்கதாஸ் டெய்லராக உள்ளார். ஜான்மேத்தீசும் அவரது கடையில் வேலை செய்து வந்தார். இருவரும் பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்து வந்தனர்.
இந்த காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஜெனிபர் காதலை முறித்துக் கொள்வோம் என்று ஜான் மேத்தீசிடம் கூறினார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜெனிபரின் பிறந்தநாள் வந்தது. அப்போது கடைசியாக மாமல்லபுரத்தில் நாம் இருவரும் சந்தித்து விட்டு பின்னர் பிரிந்து விடுவோம் என்று ஜான்மேத்தீஷ் கூறினார்.
அப்போது உனக்கு நான் பரிசு ஒன்று கொடுக்கிறேன். அதை மட்டும் வாங்கி கொள் என்று மேத்தீஷ் கூறினார்.
இதனை நம்பி ஜெனிபர் மாமல்லபுரத்திற்கு சென்றார். இருவரும் புலிக்குகை அருகே பேசி கொண்டிருந்தனர். அப்போது பரிசு பொருள் இருப்பதாக கூறி அட்டை பெட்டியை மேத்தீஷ் காட்டினார்.
அதன் பிறகு தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி ஜெனிபரிடம் வற்புறுத்தினார். ஆனால் ஜெனிபர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து பரிசு பொருளையாவது வாங்கி கொள் என்று கூறி அட்டை பெட்டியை திறந்தார்.
அதில் இருந்த சுத்தியல் ஒன்றை எடுத்த மேத்தீஷ் திடீரென ஜெனிபர் தலையில் ஓங்கி அடித்தார். இதனை சற்றும் எதிர்பாராத ஜெனிபர் நிலைகுலைந்தார். மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. சம்பவ இடத்திலேயே துடிதுடித்து அவர் பலியானார்.
பின்னர் காதலியின் துப்பட்டாவை எடுத்து அவரது உடல் அருகே சவுக்கு மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இருவரையும் காணாததால் குடும்பத்தினர் தேடினர். நண்பர்கள் கொடுத்த தகவலின் பேரில் மாமல்லபுரம் சென்றனர். அப்போது புலிக்குகை அருகில் மேத்தீஷ் மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் அருகே 2 பேரும் பிணமாக கிடந்தது தெரிய வந்தது. மாமல்லபுரம் போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
ஜெனிபரும், மேத்தீசும் ஒன்றாகவே மாமல்லபுரம் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருவரும் மாமல்லபுரம் சென்றது எப்படி? என்பது பற்றியும், உடல்கள் அடையாளம் காணப்பட்டது குறித்தும் பரபரப்பான தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் விவரம் வருமாறு:-
மேத்தீசுடனான காதலை முறித்துக் கொள்வதாக கூறியதை தொடர்ந்து ஜெனிபர் எங்கு சென்றாலும் அவரது குடும்பத்தினர் கண்காணித்து வந்தனர்.
கொட்டிவாக்கம் சாமிநாதன் நகர் 8-வது குறுக்கு தெருவில் வசித்து வரும் ஜெனிபர் நேற்று காலையில் வீட்டில் இருந்து புறப்பட்டு வெளியில் சென்றார். அப்போது தோழிகளின் வீட்டுக்கு சென்று விட்டு மாலையில் வந்து விடுவேன் என கூறிவிட்டே சென்றார். அதன் பின்னரே மேத்தீசும், ஜெனிபரும் சந்தித்து பேசியுள்ளனர். பின்னர் இருவரும் ஒன்றாகவே மாமல்லபுரத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றிருக்கிறார்கள்.
காதலை முறித்துக் கொண்டு பிரியும் போது சந்திக்க வேண்டும் என்று கூறியதால் ஜெனிபர் முழுமையாக மேத்தீசை நம்பிச் சென்றுள்ளார். ஆனால் மேத்தீசோ ஜெனிபரை கொலை செய்யும் எண்ணத்தில் பரிசு பொருளுக்கு பதில் சுத்தியலை பார்சல் போட்டு எடுத்துச் சென்றுள்ளார்.
மாமல்லபுரத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண் டிருந்தபோதே, திடீரென தனக்கு கிடைக்காத பெண் யாருக்கும் கிடைக்கக் கூடாது என்கிற வெறி மேத்தீசின் மனதில் ஏற்பட்டது. இதன் காரணமாகவே ஜெனிபரை சுத்தியலால் தலையில் அடித்து துடிக்க, துடிக்க கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.
இதற்கிடையே மாலை 6 மணி வரையில் ஜெனிபர் வீட்டுக்கு வராததால் அவரது பெற்றோர் தேட தொடங்கினர். அப்போது தான் மேத்தீசையும் காணவில்லை என்பது தெரிய வந்தது. இதனால் இருவரும் எங்காவது ஓடிச்சென்று வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டிருக்கலாம் என்று நினைத்தே இரு வீட்டாரும் இரவு முழுவதும் தேடினர்.
அப்போதுதான் மேத்தீசின் நண்பர் ஒருவர், ஜெனிபருடன் மேத்தீஸ் மாமல்லபுரம் சென்றிருப்பதாக கூறினார். இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற உறவினர்கள் போலீசாரின் துணையுடன் தேடினர். இதன் பின்னர்தான் இருவரது உடல்களும் சடலமாக மீட்கப்பட்டன. ஜெனிபர், மேத்தீசின் உடல்களை பார்த்து உறவினர்கள் கண்ணீர் விட்டு அழுதனர்.

சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்தவரும், இலங்கைக்கு போதைபொருள் கடத்த முயன்றவரும் கைது செய்யப்பட்டனர்.
தாம்பரம்:
துபாயில் இருந்து இன்று அதிகாலை 3.30 மணிக்கு சென்னை விமான நிலையத்துக்கு எம்ரேட்ஸ் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளிடம் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த வடகால் (வயது 29) என்ற பயணி மீது சுங்க இலாகா அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை நடத்தினார்கள்.
அப்போது அவர் 13 தங்க பிஸ்கட்டுகளை கடத்தி வந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ. 40 லட்சம் ஆகும். அவற்றை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து வடகால் என்பவரை கைது செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று நள்ளிரவு 1 மணிக்கு கொழும்பு செல்லும் தனியார் விமானம் புறப்பட தயாராக இருந்தது.
இந்த விமானத்தில் போதை பொருள் கடத்தப்படுவதாக மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அதில் ஏற வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். இலங்கையை சேர்ந்த முனீர்பாஷா (32) என்ற பயணி வைத்திருந்த உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது அவரிடம் 1 கிலோ எடை கொண்ட பால் பவுடர் டப்பா இருந்தது. அதை திறந்து பார்த்த போது பால் பவுடருக்கு பதில் ஹெராயின் போதை பொருள் இருந்தது. 1 கிலோ எடை கொண்ட போதை பொருளின் மதிப்பு ரூ. 2½ கோடி ஆகும். அதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
முனீர் பாஷாவிடம் விசாரித்த போது சுற்றுலா விசாவில் இந்தியா வந்து விட்டு சென்றது தெரிய வந்தது. அவரை அதிகாரிகள் கைது செய்தனர். அவருக்கு சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.

காஞ்சீபுரத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக தண்ணீர் தொட்டி மீது ஏறி மாணவர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
காஞ்சீபுரம்:
டெல்லியில் இரு வாரங்களுக்கு மேலாக போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் மாணவர்கள் அமைப்பினரின் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மத்திய அரசினை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். அப்போது எதிர் பாராதவிதமாக அரிகிருஷ்ணன் என்பவர் திடீரென பஸ்நிலையத்தின் உள்ளே அமைந்துள்ள நகராட்சிக்கு சொந்தமான மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் மீது ஏறி நின்று கோஷங்களை எழுப்பினார்.
போராட்டத்தில் ஈடுபட்ட மற்ற இளைஞர்களும் தண்ணீர் தொட்டியின் மீது ஏறியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பாதுகாப்பிற்காக அங்கிருந்த போலீசார் தண்ணீர் தொட்டி மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து சிறிது நேரத்திற்கு பிறகு தண்ணீர் தொட்டி மீது நின்று கொண்டிருந்த லோகேஷ், தேவராஜ் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

டெல்லியில் மூளைச்சாவு அடைந்த விமானப்படை வீரரின் இதயம் சென்னைக்கு விமானத்தில் கொண்டு வரப்பட்டு முதியவருக்கு பொருத்தப்பட்டது.
ஆலந்தூர்:
டெல்லியில் விமானப்படை வீரர் கஞ்சன்லால் சாலை விபத்தில் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் அங்குள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அவர் மூளைச்சாவு அடைந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள முதியவர் ஒருவருக்கு இதயம் தேவைப்படுவதாக அனைத்து மருத்துவமனைகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விமானப்படை வீரரின் இதயத்தை சென்னை பெரும்பாக்கம் மருத்துவமனையில் உள்ள முதியவருக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது.
பொதுவாக 4 மணி நேரத்திற்குள் இதயத்தை பொருத்த வேண்டும். எனவே டெல்லியில் இருந்து நேற்று மாலை 4.10 மணிக்கு விமானப்படை வீரரின் இதயம் விமானத்தில் சென்னைக்கு புறப்பட்டது.
சென்னைக்கு 6.50 மணிக்கு அந்த விமானம் வந்தது. உடனே விமான நிலையத்தில் இருந்து பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு இரவு 7.25 மணிக்கு இதயம் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் முதியவருக்கு அந்த இதயம் பொருத்தப்பட்டது.
அதிக தூரம் விமானத்தில் இதயம் கொண்டு வரப்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்க மத்திய அரசு அறிவித்த 31 இடங்களில் காரைக்கால் அல்ல "நாகப்பட்டினத்தில் ஒருபகுதி" என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி விளக்கம் அளித்துள்ளார்.
ஆலந்தூர்:
டெல்லியில் இருந்து சென்னை வந்த புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
டெல்லியில் தமிழக விவசாயிகள் வறட்சி பாதிப்பு நிதி, கடன் தள்ளுபடி போன்றவற்றை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே புதுச்சேரி விவசாயிகள் சார்பாக இந்த கோரிக்கைகளை நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.
நானும் போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறினேன். மத்திய விவசாய மந்திரியை சந்தித்து பேசுவதாக உறுதி அளித்திருக்கிறேன். விவசாயிகள் போராட்டத்தில் எந்த உள்நோக்கமும் இல்லை.

ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்க 31 இடங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதில் காரைக்கால், நெடுவாசல் இடம் பெற்றுள்ளது. இது பற்றி அந்த ஒப்பந்தத்தை நான் ஆய்வு செய்தபோது அது காரைக்கால் அல்ல என்பது தெரிந்தது.
அது காரைக்காலில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நாகப்பட்டினத்தில், ஒரு பகுதியாகும். அதை காரைக்கால் என்று குறிப்பிட்டுள்ளனர். அதுபற்றி நான் விவசாயிகளிடம் தெளிவுப்படுத்துவேன்.
ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று ஏற்கனவே தெரிவித்து இருக்கிறோம்.
இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை சந்திக்க பிரதமர் நேரம் ஒதுக்க வேண்டும் என்று தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. பேட்டியளித்துள்ளார்.
ஆலந்தூர்:
தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
கடந்த 16 நாட்களுக்கு மேலாக டெல்லியில் தமிழக விவசாயிகள் போராடி வருகிறார்கள். பிரதமர் விவசாயிகளை சந்திக்க தயாராக இல்லை. அவர் விவசாயிகளை சந்திக்க நேரம் ஒதுக்கி தர வேண்டும்.

காவிரி பிரச்சினையில் தமிழக அரசு அதிக அக்கறை செலுத்தவில்லை. இதற்கு தமிழக அரசு நினைத்தால் தீர்வு காண முடியும்.
தமிழகத்தில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. பிரச்சினைகளை தீர்க்க வில்லை என்றால் மக்கள் போராட்டமாக அது மாறும். மக்கள் இனி பொறுத்து கொள்ள மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்.கே.நகர் தேர்தலில் டி.டி.வி.தினகரனுக்கு கடைசி இடம்தான் கிடைக்கும் என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை:
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திருச்சி செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
கேள்வி:- தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க. தொடர்ந்து தெரிவித்து வரும் புகார்கள் மீது நடவடிக்கை எடுத்திருப்பதாக நீங்கள் கருதுகிறீர்களா?
பதில்:- ஏற்கனவே, சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை மாற்ற வேண்டும் என்று தெரிவித்திருந்தோம். கடந்த தேர்தலிலேயே அவர் மீது பல புகார்கள், பிரச்சினைகள் வந்தன.
அதேமாதிரி இங்கே ரிட்டர்னிங் ஆபீசர் நியமிப்பதிலும் தவறு நடந்திருக்கிறது என ஆதாரங்களோடு, சில செய்திகளை தேர்தல் ஆணையத்திடம் புகாராகக் கொடுத்திருந்தோம். அந்தப் புகாரின் அடிப்படையில் இருந்த நியாயத்தை உணர்ந்து நடவடிக்கை எடுத்து அவர்களை மாற்றி இருக்கிறார்கள்.
இப்பொழுது தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்க கூடிய நேரத்தில், இங்கு இருக்கக்கூடிய சில ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், ஆளுங் கட்சியைச் சார்ந்த அமைச்சர்களின் துணையோடு, சில காவல்துறை அதிகாரிகள் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
அதுகுறித்தும் சம்பத்தப்பட்ட அதிகாரிகளிடம் நேற்றைய தினம் நாங்கள் புகார் அளித்திருக்கிறோம். அதேபோல, தொடர்ந்து இதை நாங்கள் கண் காணித்துக் கொண்டு விழிப்போடு இருந்து அந்த பணிகளை நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறோம்.
கே:- நீங்கள் தி.மு.க. செயல் தலைவராக பொறுப்பேற்ற பின் சந்திக்கும் இந்த முதல் இடைத் தேர்தல் எவ்வளவு முக்கியமானது என்று நினைக்கிறீர்கள்?
ப:- நீங்கள் எப்படி நினைக்கிறீர்களோ அப்படி நினைக்கிறேன்.
கே:- தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது? ஆர்.கே.நகரில் தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பு குறித்தும், பணப்பட்டுவாடா மீதான அவர்களின் நடவடிக்கை குறித்தும் என்ன நினைக்கிறீர்கள்?
ப:- தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை நியாயமாக நடப்பதாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நாங்களும் நியாயமாக நடப்பார்கள் என்றுதான் நம்பிக்கொண்டு இருக்கிறோம்.
கே:- தினகரனுக்கு வரிசையின் இரண்டாவது இடத்தில் சின்னம் கொடுத்துள்ளார்கள். அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
ப:- சின்னம் இருப்பது முதலிடமோ இரண்டாம் இடமோ, ஆனால் தேர்தலில் அவர் வரப்போவது கடைசி இடம்.
கே:- விவசாயிகள் தொடர்ந்து டெல்லியில் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக சென்னையில் மாணவர்கள் போராட்டம் நடத்தினால் தடை விதிக்கப்படுகிறது. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
ப:- ஏற்கனவே விவசாயப் பெருங்குடி மக்கள் தமிழகத்திலே போராடி, போராடி அதைப்பற்றி இந்த அரசு கவலைப்படாத காரணத்தால் நேரடியாக இந்தியாவின் தலைநகரமாக இருக்கக்கூடிய டெல்லி மாநகரத்துக்கு சென்று மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கக்கூடிய வகையில் தொடர்ந்து இரண்டு வார காலத்திற்கும் மேலாக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இதுவரை மத்திய அரசு கொஞ்சம் கூட கவலைப்படாத நிலையில்தான் இருந்து கொண்டிருக்கிறது. தி.மு.க.வை சார்ந்திருக்கக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து அவர்களைப் போய் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் சொல்வது மட்டுமல்ல, நேற்றைய தினம் எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர் சிவா அந்த விவசாயப் பெருங்குடி மக்களின் நிர்வாகிகளை அழைத்துக் கொண்டுச் சென்று, நிதியமைச்சர் அருண்ஜெட்லியை நேரடியாக சந்தித்து பிரச்சினைகளை எடுத்துச் சொல்லியிருக்கிறார்.
ஆனால், மாநிலத்தில் இருக்கக்கூடிய முதல்- அமைச்சரோ இதுவரை போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிற அந்த விவசாயப் பெருங்குடி மக்களை நேரடியாக சென்று சந்திக்கவில்லை என்பது தான் வேதனைப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது.
தற்கொலை செய்து கொண்டிருக்கக் கூடிய விவசாயப் பெருங்குடி மக்களுக்கு நிவாரண நிதியைக் கூட வழங்க முடியாத நிலையிலேதான் இன்றைக்கு இந்த அரசு இருந்து கொண்டிருக்கிறது.
ஆக, பினாமி அரசாக இருக்கக்கூடிய இந்த அரசைப் பொறுத்தவரையில் ஆர்.கே.நகர் தொகுதியில் நடக்கக்கூடிய இடைத் தேர்தலில் எப்படியாவது தில்லுமுல்லு செய்து வெற்றிபெற முடியுமா என்பதற்கு திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்களே தவிர, மக்கள் படக்கூடிய வேதனைகளை, குறிப்பாக விவசாயப் பெருங்குடி மக்கள் படக்கூடிய வேதனைகளைப் பற்றி அவர்கள் கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை என்பது கண்டனத்திற்குரியது.
கே:- ஹைட்ரோ கார்பன் திட்டம் வராது என்று தொடர்ந்து தமிழக அரசின் சார்பில் கூறி வந்தாலும், மத்திய அரசு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், தமிழக அரசோ மவுனம் காத்து வருகிறதே?
ப:- இந்தப் பிரச்சினை குறித்து கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டபோது நான் தெளிவாகவே இதுகுறித்து பேசியிருக்கிறேன். அப்போது முதல-அமைச்சரும், அந்தத் துறை சம்பத்தப்பட்ட அமைச்சரும் எழுந்து எனக்கு என்ன பதில் சொன்னார்கள் என்றால், நிச்சயமாக உறுதியாக இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று ஒரு வாக்குறுதியை தந்தார்கள்.
அப்போது கூட நான் கேட்டேன், எப்படி ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு இந்த சட்டமன்றத்தில் ஏகமனதாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோ, அதுபோல சிறப்பு தீர்மானம் ஒன்றை சட்டமன்றத்தில் நிறைவேற்றி அதை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று நான் கோரிக்கை வைத்தேன். அதற்கு எந்தவித பதிலும் சொல்லாமல் மவுனமாக இருந்து விட்டார்கள்.
இதிலிருந்து என்ன தெரிகிறது என்று சொன்னால், எப்படி மத்திய அரசில் இருக்கக்கூடிய அமைச்சர் பெருமக்கள் எந்த காரணத்தைக் கொண்டு திட்டம் வராது, வராது, வராது, வராது என்று தொடர்ந்து அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
ஆனால், இப்போது இரண்டு நாட்களுக்கு முன்னர் தனியார் நிறுவனங்களோடு மத்திய அரசு ஒப்பந்தம் கையெழுத்து போட்டிருக்கிறது என்ற செய்தியை பார்க்கிறபோது அதிர்ச்சியாக இருக்கிறது. எனவே மத்திய அரசு இரட்டை வேடம் போட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கு இங்கே இருக்கக்கூடிய மாநில அரசு துணை போய்க்கொண்டு இருக்கிறது என்பதுதான் உண்மை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தாம்பரம் சானட்டோரியம் ரெயில் நிலையத்தில் ‘மர்ம பை’ ஒன்றில் இருந்து புகை வெளியானதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்து அதில் வெடிகுண்டு இருக்கலாம் என அச்சம் அடைந்தனர்.
தாம்பரம்:
தாம்பரம் சானட்டோரியம் ரெயில் நிலையம் இன்று காலை 7.30 மணியளவில் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. அப்போது அங்கு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் செல்லும் தண்டவாளம் அருகே கறுப்பு நிற ‘மர்ம பை’ (பேக்) கிடந்தது. அதில் இருந்து புகை வெளியேறிக் கொண்டிருந்தது.
அதைப்பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதில் வெடிகுண்டு இருக்கலாம் என அச்சம் அடைந்தனர். உடனே இது குறித்து சிட்லப்பாக்கம் மற்றும் தாம்பரம் ரெயில் நிலைய போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
உடனே போலீசார் அங்கு விரைந்து வந்தனர். புகை வெளியான மர்ம பை பாதி திறந்த நிலையில் இருந்தது. உள்ளே வயர் இணைப்புடன் கூடிய பேட்டரி இருந்தது. எனவே இது வெடிகுண்டாக இருக்கலாம் என்ற பீதி வலுப்பெற்றது.
எனவே, தாம்பரம்- கடற்கரை மற்றும் கடற்கரை- தாம்பரம் வரை செல்லும் மின்சார ரெயில்களின் போக்குவரத்து சுமார் 20 நிமிட நேரம் நிறுத்தப்பட்டது.
இதற்கிடையே எழும்பூர் ரெயில் நிலைய உயர் அதிகாரிகள் அங்கு விரைந்தனர். போலீஸ் மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டது. பலத்த சோதனைக்கு பின் தண்டவாளத்தில் கிடந்த ‘மர்ம பை’ எடுக்கப்பட்டது.
பின்னர் அது தாம்பரம் ரெயில் நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு திறந்து பார்க்கப்பட்டது. அது வெடிகுண்டு அல்ல என உறுதி செய்யப்பட்டது. மாறாக அதில் 3 வோல்ட் கொண்ட 300 பேட்டரிகள் வயர் மூலம் இணைக்கப்பட்டிருந்தது. அவை ‘பவர் பேங்’க்கு பயன்படுத்துபவை.
இவை வெடிக்கும் திறன் கொண்டது அல்ல என நிபுணர்கள் உறுதி செய்தனர். இவற்றை ‘லேப்டாப்’ உபயோகிக்க பயன்படுத்தி இருக்கலாம். அல்லது என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் திட்ட செயலாக்கத்துக்கு (புராஜக்டுக்கு) இதை உபயோகித்து இருக்கலாம்.
இதை ‘பை’யினுள் வைத்து எடுத்து சென்ற போது மின் கசிவு காரணமாக புகை வெளியாகி இருக்கலாம். இதனால் அது வெடித்து விடும் என கருதி தண்டவாளத்தில் வீசி சென்று இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
இருந்தாலும் இந்த பேட்டரியை எடுத்து சென்றது யார்? அது எப்படி இங்கு வந்தது என தெரியவில்லை. அது குறித்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் சூப்பிரண்டு அஷ்ரப் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

துரைப்பாக்கத்தில் நேற்று ஒரே நாளில் 4 வீடுகளில் நடந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவான்மியூர்:
துரைப்பாக்கம் மேட்டு குப்பம் தலைமை செயலக குடியிருப்பை சேர்ந்தவர் செல்வராகவன். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் சுப்பிரமணி. 2 பேரும் அரசு ஊழியர்கள். அவர்கள் 2 பேரும் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றனர்.
இதை அறிந்த மர்ம நபர்கள் செல்வராகவன் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே சென்று 1 லேப்டாப், ரூ.5 ஆயிரம் பணத்தையும், சுப்பிரமணி வீட்டு பூட்டை உடைத்து ரூ.3 ஆயிரம் மற்றும் 2 பவுன் நகை ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
மேட்டுகுப்பம் வி.ஜி.பி. அவென்யூவை சேர்ந்தவர் நித்தியானந்தம். இவர் தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். அதை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதேபோல வி.ஜி.பி. அவென்யூவை சேர்ந்த கந்தன் என்பவரது மோட்டார் சைக்கிளையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்தும் துரைப்பாக்கம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். நேற்று ஒரே நாளில் 4 வீடுகளில் நடந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மோசடி வழக்கில் தேடப்படும் காஞ்சீபுரம் ரவுடி ஸ்ரீதர் இலங்கையில் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரை கைது செய்ய அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரத்தை அடுத்த திருப்பருத்திகுன்றம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர். ரவுடி.
இவர் மீது 7 கொலை வழக்கு, 12 கொலை முயற்சி வழக்கு உள்பட மொத்தம் 43 வழக்குகள் உள்ளன. இதையடுத்து ஸ்ரீதரை தேடப்படும் குற்ற வாளியாக போலீசார் அறிவித்தனர். மேலும் அவரைப் பற்றிய தகவல் கொடுப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
கடந்த 2013-ம் ஆண்டு துபாய் சென்ற ஸ்ரீதர் பின்னர் திரும்பி வரவில்லை. வெளிநாட்டில் இருந்தபடியே தனது ஆட்கள் மூலம் ஸ்ரீதர் தொடர்ந்து நிலமோசடி, ஆள் கடத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீதரின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் சொந்த ஊரான காஞ்சீபுரத்துக்கு வந்தனர். அவர்களிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து ஸ்ரீதரின் மனைவி, மகள் மற்றும் தம்பி ஆகியோர் பெயரில் உள்ள சொத்துக்களை அதிகாரிகள் முடக்கி னர். அந்த சொத்துக்களை பறிமுதல் செய்யும் பணி நடந்து வருகிறது.
இதற்கிடையே தலை மறைவாக உள்ள ரவுடி ஸ்ரீதர் இலங்கையில் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரை கைது செய்ய அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறும் போது, “ஸ்ரீதருக்கு 2017-ம் ஆண்டு வரை துபாயில் தொழில் நடத்துவதற்கான விசா இருப்பதால் அங்கேயே வசித்து வந்தார். துபாயிலேயே அவரை பிடிக்க முயற்சி செய்த போது அங்கிருந்து தப்பி விட்டார்.
அவர் போலி பாஸ்போர்ட் டில் இலங்கைக்கு தப்பி சென்று இருப்பதாக தகவல் கிடைத்து உள்ளது. கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்றனர்.

காஞ்சீபுரம் அருகே வாகன சோதனையில் ரூ.3.50 லட்சத்தை கொள்ளையடித்த 3 பேரை உத்திரமேரூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் அடுத்த உத்திரமேரூர் பகுதியில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு உரக்கடை உரிமையாளர் வேலாயுதம் என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது மற்றொரு பைக்கிள் வந்த மர்ம நபர்கள் அவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதுவது போல் சென்று அவரிடமிருந்து 3.50 லட்சத்தினை அபேஸ் செய்து சென்றனர்.
இது குறித்து வேலாயுதம் போலீசில் புகார் அளித்ததை அடுத்து போலீசார் உத்திரமேரூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு மர்ம நபர்களை வலைவீசி தேடிவந்தனர்.
இந்நிலையில் நேற்று உத்திரமேரூர் போலீசார் எண்டத்தூர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக வந்த ஒரு கார் போலீசாரின் எச்சரிக்கையை மீறி நிற்காமல் சென்றது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் ஜீப்பில் பின் தொடர்ந்து வந்து மடக்கி பிடித்தனர்.
காரில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் பாதிரி கிராமத்தைச் சேர்ந்த சுரேன், எண்டத்தூர் பகுதியைச் சேர்ந்த சசிகுமார் என்கிற சத்யா மற்றும் ராஜசேகர் என்கிற குமார் என்பது தெரிய வந்தது. விசாரணையில் உத்திரமேரூர் வேலாயுதத்திடம் ரூ.3.50 லட்சத்தை கொள்ளை அடித்ததை ஒப்புக்கொண்டனர்.
மேலும் ராமாபுரம் பகுதியில் டாஸ்மாக் ஊழியரிடம் கொள்ளையடித்ததாகவும் கூறியுள்ளனர்.
இதுகுறித்து உத்திரமேரூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

காஞ்சீபுரத்தில் தடை செய்யப்பட்ட புகையிலையை விற்ற வியாபாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் பாக்கு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தது. இதை தொடர்ந்து காஞ்சீபுரம் அடுத்த ஓரிக்கை, வெள்ளைகேட், திம்ம சமுத்திரம் போன்ற பகுதிகளில் உள்ள கடைகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த தடைசெய்யப்பட்ட புகையிலை கைப்பற்றப்பட்டது.
இதையடுத்து கடையை நடத்தி வந்த ஆறுமுகம், ரேணுகா, சத்யவாணி, ராம மூர்த்தி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதேபோல் வாலாஜா பாத் பஜார் வீதி, சுங்குவார் சத்திரம் மொளச்சூர் பகுதிகளில் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்ற நாராயணன், வெங்கடேசன் மற்றும் வாசுதேவன் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.