என் மலர்
காஞ்சிபுரம்
சென்னையில் இருந்து இன்று அதிகாலை துபாய் செல்லும் விமானத்தில் ஏற வந்த பயணிகளின் பாஸ்போர்ட்டை குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்தனர்.
அப்போது இலங்கையை சேர்ந்த சற்குணதாஸ், ஜனார்த்தனன், சவுந்தர ராஜன் ஆகிய 3 பேரின் பாஸ்போர்ட்டுகள் போலி என்று தெரியவந்தது.
இதையடுத்து 3 பேரிடம் விசாரணை நடத்தினர். 3 பேரும் ஒரு மாதத்துக்கு முன்பு இலங்கையில் இருந்து சென்னை வந்ததாகவும், தஞ்சையை சேர்ந்த சிவகுமார் என்ற வெளிநாட்டு வேலைக்கு அனுப்பும் ஏஜெண்டிடம் வெளிநாட்டுக்கு அனுப்ப கேட்டு கொண்டதால் அவர் போலி இந்திய பாஸ்போர்ட், விசா தயார் செய்து கொடுத்ததாக தெரிவித்தனர்.
மேலும் ஏஜெண்டு சிவக்குமார் விமான நிலையம் வெளியே நிற்பதாக தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு சென்று சிவக்குமாரையும் பிடித்தனர். கைதான 4 பேரிடம் தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது.
ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஜெனி என்கிற ஜெய்டினா (வயது 38) என்ற பெண் மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்திருந்தார். அங்குள்ள விடுதியில் தங்கியிருந்த அவர் கடந்த 2-ந்தேதி காலையில் கடற்கரையில் நடை பயிற்சி மேற்கொண்டார். அப்போது அவரை மர்ம நபர்கள் சிலர் வலுக்கட்டாயமாக மறைவான இடத்துக்கு தூக்கி சென்று கற்பழித்தனர்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஜெய்டினா மாமல்லபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
அந்த பெண் கூறிய அங்க அடையாளங்களை வைத்து கம்ப்யூட்டர் மூலம் வரை படம் உருவாக்கப்பட்டது. இந்த வரைபடம் வழக்கை விசாரித்து வரும் 4 தனிப்படை போலீசாருக்கும் வழங்கப்பட்டது.
அந்த வரை படத்துடன் போலீசார் நேற்று மாமல்லபுரம் புதூர், எடையூர்குப்பம், தேவனேரி, சூளேரிகாடு, நெம்மேலி, புதுநெம்மேலி, புதுகல்பாக்கம் ஆகிய கடற்கரை மீனவ கிராமங்களுக்கு சென்றனர். அங்கு பொது மக்களிடம் வரைப்படத்தை காட்டி விசாரணை நடத்தினர்.
அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் 4 பேரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதற்கு மீனவ கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எங்களுக்கு ஊர் கட்டுப்பாடு உள்ளது. அதை மீறி யாரும் தவறு செய்ய மாட்டார்கள். எனவே எங்கள் கிராமத்துக்கு அவப் பெயரை ஏற்படுத்த வேண்டாம் என்று பொதுமக்கள் கூறினார்கள்.
ஆனாலும் போலீசார் 4 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அவர்களிடம் மாமல்லபுரம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசி தலைமையிலான போலீசார் விசாரித்தனர்.
4 பேரையும் ஜெய்டினாவிடம் காட்டி அவர்கள் குற்றவாளிகள்தானா என்பதை அறிய போலீசார் முயற்சி மேற்கொண்டனர். இதற்காக ஜெய்டினாவை போலீசார் தொடர்பு கொண்டனர்.
அப்போது அவர் சென்னையில் இருந்து வாரணாசி செல்ல திட்டமிட்டு சென்னை விமான நிலையத்துக்கு சென்றுவிட்டார். இதையடுத்து 4 பேரையும் போலீசார் விமான நிலையத்துக்கு கொண்டு சென்றனர். ஜெய்டினா முன்பு அவர்களை நிறுத்தினார்கள். அவர்களை பார்த்த ஜெய்டினா அவர்கள் குற்றவாளிகள் இல்லை என்று கூறிவிட்டார்.
இதையடுத்து 4 பேரையும் போலீசார் விடுவித்தனர். இதற்கிடையே ஜென்டினாவும் வாரணாசி புறப்பட்டு சென்றார். அங்கிருந்து ஜெர்மனி செல்ல திட்டமிட்டுள்ளார். விசாரணைக்கு அழைத்தால் அவரை மாமல்லபுரத்துக்கு கொண்டு வர தயாராக இருப்பதாக தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே மாமல்லபுரத்தில் விபசாரம் நடப்பாக சந்தேகப்படும் லாட்ஜுகளில் போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டனர். மாமல்லபுரத்தில் உள்ள லாட்ஜுகளுக்கு அடிக்கடி வந்து செல்பவர்களின் பெயர் பட்டியலையும் போலீசார் கேட்டுள்ளனர். அவர்களில் யாருக்காவது இதில் தொடர்பு இருக்குமா என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது.
காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்த ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஜெசீனா (வயது 35) என்ற பெண் மாமல்லபுரம் அருகே பட்டிபுலம் என்ற இடத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத கடற்கரை பகுதி மணலில் படுத்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு மறைந்து இருந்த 2 மர்ம நபர்கள் அந்த பெண்ணை அருகில் உள்ள சவுக்கு தோப்புக்கு வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று கத்திமுனையில் கற்பழித்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகிறார்கள். பட்டிபுலம் காலனி, மீனவர் குப்பம், புது இடையூர்குப்பம், நெம்மேலிகுப்பம், சூளேரிக்காட்டுகுப்பம் உள்ளிட்ட மீனவர் பகுதிகளில் குற்றவாளிகள் பதுங்கி உள்ளார்களா? என போலீசார் நேற்று காலை 6 மணி அளவில் வீடு, வீடாக சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
சந்தேகத்தின்பேரில் இந்த பகுதிகளை சேர்ந்த 11 பேரை விசாரணைக்காக போலீசார் ஜீப்பில் ஏற்றி அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, எங்கேயோ பதுங்கி இருக்கும் குற்றவாளிகளை விட்டுவிட்டு விசாரணை என்ற பெயரில் வீட்டில் படுத்து இருந்த மீன்பிடி தொழிலுக்கு செல்லும் மீனவர்களையும், படிக்கும் மாணவர்களையும் பிடித்துச் செல்வதாக கூறி பட்டிபுலம் குப்பம் மற்றும் புது இடையூர்குப்பம் பகுதி மீனவ பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதற்கு போலீசார் விசாரணைக்காகத் தான் அழைத்துச் செல்கிறோமே தவிர குற்றவாளி என முடிவு செய்யவில்லை என்றும், விசாரித்த பிறகு அனைவரையும் வீட்டுக்கு அனுப்பிவிடுவோம் என்றும் கூறினர். ஆனாலும் சமாதானம் அடையாத அவர்கள் தொடர்ந்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் 11 பேரையும் மாமல்லபுரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதால் அவர்களின் உறவினர்கள் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். போலீசார் 11 பேரிடமும் சந்தேக நபர்கள் யாராவது சம்பவம் நடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கடற்கரை பகுதிகளில் நடமாடினார்களா? என்று விசாரித்தனர்.
பாதிக்கப்பட்ட ஜெர்மன் நாட்டு பெண் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி சென்றுள்ளார். விசாரணை நடத்திய 11 பேரின் புகைப்படங்களை போலீசார் அடையாளம் காண்பதற்காக அந்த பெண்ணுக்கு ‘வாட்ஸ்-அப்’ மூலம் அனுப்பிவைத்தனர். அந்த பெண் அவர்கள் இல்லை என்று கூறிவிட்டார்.
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சம்பவம் நடந்தபோது பட்டிபுலம் கடற்கரை பகுதி பங்களா ஒன்றில் மதுவிருந்துடன் கேளிக்கை நிகழ்ச்சி ஒன்று நடந்ததாகவும், அதில் சென்னையில் இருந்து வந்த ஏராளமான வாலிபர்கள் கலந்துகொண்டு போதையில் தள்ளாடியதாகவும் கூறப்படுகிறது. அதில் கலந்துகொண்ட வாலிபர்கள் யாராவது இந்த கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்டனரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் நடந்த சவுக்கு தோப்பு பகுதியில் போலீசார் தடயம் ஏதாவது கிடைக்கிறதா? என ஆராய்ந்தபோது 2 ஆணுறைகள் அங்கிருந்து கண்டெடுக்கப்பட்டது. எனவே குற்றவாளிகள் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக முன்னெச்சரிக்கையாக ஆணுறை அணிந்து கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
உள்ளூர் நபர்கள் இதுவரை இதுபோன்ற கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது இல்லை என்றும், சென்னை அல்லது வெளிமாவட்ட நபர்கள் யாராவது இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஜெர்மன் பெண் தெரிவித்த அங்க அடையாளங்களை கொண்டு போலீசார் வரைந்த கம்ப்யூட்டர் மாதிரி வரைபடத்தை வைத்து போலீசார் விசாரித்ததில் இதுவரை எந்த வித துப்பும் கிடைக்காமல் திணறி வருகின்றனர்.
டெல்லியில் இருந்து வெளியுறவுத்துறை அதிகாரிகள் இந்த வழக்கில் குற்றவாளிகளை விரைவாக பிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று போலீசாருக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஜெர்மனி நாட்டை சேர்ந்த பெண் சுற்றுலா பயணி ஜெசீனா (35). மாமல்லபுரத்தில் உள்ள கோவில்கள், சிற்பங்களை காண வந்திருந்தார். அங்குள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்த அவர் நேற்று முன்தினம் காலை கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்ட போது அவரை மர்ம நபர்கள் சிலர் வலுக்கட்டாயமாக மறைவான இடத்துக்கு தூக்கி சென்று கற்பழித்துவிட்டு தப்பி விட்டனர்.
இதுகுறித்து ஜெர்மன் பெண் மாமல்லபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
அப்பெண் கூறிய அங்க அடையாளங்களை வைத்து ஒரு குற்றவாளியின் மாதிரி படத்தை வெளியிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். 60-க்கும் மேற்பட்ட சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ்ஹதானி கூறுகையில், பாதிக்கப்பட்ட பெண் சுற்றுலா பயணி இன்று ஜெர்மனி செல்ல இருப்பதால் பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஜெர்மனி தூதரகத்துக்கு சட்ட ரீதியான தகவலகள் அனைத்தும் கொடுத்து விட்டோம். மருத்துவ பரிசோதனை வந்த பிறகு அடுத்த அறிக்கை அனுப்பப்படும். அவர்கள் நாட்டு போலீசாரும் தற்போது எங்களுடன் இணைந்து ஒத்துழைப்பதால் சைபர் கிரைம், தடயவியல் சாடிலைட் உதவியுடன் குற்றவாளியை நெருங்கி விட்டோம் விரைவில் பிடிபடுவான் காத்திருங்கள் என்றார்.
இதற்கிடையே கற்பழிக்கப்பட்ட பெண்ணிடம் ஜெர்மனி நாட்டு பெண் தூதரக அதிகாரிகள் 2½ மணி நேரம் நேரில் விசாரணை நடத்தி ஆறுதல் கூறினர். அவருக்கு உளவியல் பயிற்சி அளித்தனர். அப்போது அப்பெண் கதறி அழுதார்.
கடந்த மார்ச் மாதம் தனது குழந்தையை பறிகொடுத்தேன். அந்த கவலையை மறக்க இந்தியாவுக்கு சுற்றுலா வந்தேன். கோவில் நகரமான காஞ்சீபுரம் மாவட்டத்தை தேர்வு செய்து மாமல்லபுரம் வந்தேன். இங்கு இப்படி பாலியல் கொடுமையா என்று கண்ணீர்விட்டார். இதை கேட்ட தூதரக அதிகாரிகளும் கண்கலங்கினர்.
அவரிடம் குற்றவாளிகளை விரைவில் பிடித்து தண்டனை பெற்று கொடுக்கப்படும் என்று தேற்றினர்.
ஆலந்தூர்:
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கோவை செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் குறிப்பிட்ட தேதிக்குள் நடத்த முடியாது என்று மாநில தேர்தல் ஆணையம் கூறி இருக்கிறது. தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சசிகலாவின் பினாமி ஆட்சி, தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என்பதால் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயாராக இல்லை.
அதை மாநில தேர்தல் ஆணையம் மூலமாக நீதி மன்றத்தில் சொல்லி இருக்கிறார்கள். நீதிமன்றம் அதை கண்டித்திருக்கிறது. தேர்தலை நடத்தவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும் என்று சொல்லி உள்ளனர்.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அ.தி.மு.க.வினர் பல்வேறு பரிசுகளை கொடுப்பதாக புகார்கள் வந்துள்ளன.

தி.மு.க. சார்பாக நாங்கள் சில அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்தோம். அதை ஏற்று அதிகாரிகளை மாற்றி உள்ளனர்.
தற்போது தேர்தல் ஆணையம் அனைத்து அதிகாரிகளையும் மாற்றி இருப்பது வரவேற்கப்பட வேண்டியது. இது தேர்தல் முடியும் வரை தொடர வேண்டும்.
விவசாயிகளின் பிரச்சினைகளை மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க. அரசின் விவசாயத் துறை அமைச்சரோ, அல்லது பிரதமரோ விவசாயிகளை அழைத்துப் பேசி சுமூக தீர்வு காண வேண்டும்.
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று விவசாயிகளையும், பிரதமரையும் சந்தித்து பேசி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.
சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில், பொதுவாக தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த ஆட்சியில் இதற்கு நிச்சயமாக, உறுதியாக தீர்வு காண வாய்ப்பு கிடையாது.
ஏனென்றால் அவர்கள் 2 அணிகளாக பிரிந்து தங்கள் பதவியை தக்க வைப்பதில்தான் குறியாக உள்ளனர். நாட்டையும், நாட்டு மக்களை பற்றியும் அவர்களுக்கு கவலை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
மாமல்லபுரத்தில் ஜெர்மனி நாட்டு பெண் கற்பழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, குற்றவாளிகளில் ஒருவரின் உருவ படத்தை கம்ப்யூட்டர் மூலம் வரைந்த போலீசார், அதை வைத்து அவரை தேடி வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட ஜெர்மனி பெண்ணிடம், ஜெர்மனி தூதரக அதிகாரிகள் விசாரித்தனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள உலகப்புகழ் பெற்ற மாமல்லபுரத்துக்கு ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், டென்மார்க், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இவர்கள் காலை, மாலை நேரங்களில் கடற்கரையில் நடைபயிற்சி செல்வதும், கடற்கரையில் சூரிய குளியலில் ஈடுபடுவதும் வழக்கம்.
இதற்காக கடற்கரை பகுதிக்கு செல்வர். தொந்தரவு இல்லாத தனிமையான சூழல், ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியையே வெளிநாட்டு பெண்கள் பலர் தேர்வு செய்வர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 3 மணி அளவில் ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஜெசீனா (வயது 35) என்ற இளம்பெண், மாமல்லபுரத்தை அடுத்த பட்டிபுலம் என்ற இடத்தில் ஆள்நடமாட்டம் இல்லாத கடற்கரை பகுதியில் நீச்சல் உடையில் குளித்து விட்டு, கடற்கரை மணலில் படுத்து ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு மறைந்து இருந்த 2 மர்ம நபர்கள், அந்த பெண்ணை அருகில் உள்ள சவுக்கு தோப்புக்கு வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று கற்பழித்தனர். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
ஜெர்மனி நாட்டில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்த ஜெசீனா, மாமல்லபுரம் ஒத்தவாடை தெருவில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி இருந்தார்.

காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ்ஹதிமானி, மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் வீரமணி, தனிப்படையில் உள்ள இன்ஸ்பெக்டர்கள் மாமல்லபுரம் சிரஞ்சீவி, கேளம்பாக்கம் கோவிந்தராஜ், தாழம்பூர் ராஜாங்கம், திருக்கழுக்குன்றம் அனுமந்தன் ஆகியோர் நேற்று அந்த தனியார் விடுதிக்கு சென்று கற்பழிக்கப்பட்ட ஜெர்மனி நாட்டு பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.
அவரிடம், கிழக்கு கடற்கரை சாலையில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட பழைய குற்றவாளிகளின் படத்தை காட்டி அடையாளம் காட்ட செய்தனர்.
அப்போது போலீசாரிடம் ஜெர்மனி நாட்டு பெண் கூறியதாவது:-
28 வயதுடைய ஒருவனும், 30 வயதுடைய ஒருவனும் என்னை பாலியல் பலாத்காரம் செய்தனர். இருவரும் டி-சர்ட் மற்றும் அரைக்கால் டிரவுசர் (சார்ட்ஸ்) அணிந்து இருந்தனர். இருவரும் கருப்பு நிறத்தில் காணப்பட்டனர்.
அவர்கள், என் வாயில் துணியை திணித்து, நான் சத்தம் போடாத வகையில் என்னை தூக்கிச் சென்று அருகில் உள்ள சவுக்கு தோப்பில் உள்ள ஒரு மறைவான இடத்தில் வைத்து என்னை கற்பழித்துவிட்டு ஓடிவிட்டனர். பிறகு நான் சுதாரித்து கடற்கரை பகுதிக்கு வந்து என் துணிமணிகள், கைப்பையை எடுத்துக்கொண்டு கிழக்கு கடற்கரை சாலைக்கு வந்தேன்.
அங்கிருந்து ஒரு ஆட்டோ மூலம் மாமல்லபுரம் வந்து சேர்ந்தேன். என்னிடம் இருந்த பணம், பாஸ்போர்ட் எதையும் அவர்கள் எடுத்துச் செல்லவில்லை.
இவ்வாறு போலீசாரிடம் அவர் கூறினார்.
மேலும் அந்த பெண் தங்கி உள்ள விடுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன் மதுபோதையில் இருந்த கேரள மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட விடுதி ஊழியர் ஒருவரின் புகைப்படத்தையும் அந்த பெண்ணிடம் காட்டி, இந்த சம்பவத்தில் இவர் ஈடுபட்டாரா? எனவும் விசாரித்தனர்.
இதையடுத்து அந்த பெண் கூறிய அங்க அடையாளங்களை வைத்து மர்மநபர்களில் ஒருவரின் படத்தை போலீசார் கம்ப்யூட்டர் உதவியுடன் வரைந்தனர். அந்த மாதிரி வரைபடத்தை நேற்று போலீசார் வெளியிட்டனர். அதை வைத்து தனிப்படை போலீசார் மர்ம ஆசாமியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார் சந்தேகப்படும்படியான 2 பேரை பிடித்து மாமல்லபுரம் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் நடந்த பட்டிபுலம் சவுக்கு தோப்பு பகுதிக்கு தனிப்படை போலீசார் சென்று குற்றவாளிகள் குறித்து ஏதாவது தடயம் உள்ளதா? என ஆராய்ந்தனர். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் ஞாயிற்றுக்கிழமை பதிவாகிய காட்சிகளில் சந்தேக நபர்களின் நடமாட்டம் பதிவாகி உள்ளதா? எனவும் ஆராய்ந்தனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டது 2 பேரா? அல்லது அதற்கும் மேற்பட்ட நபர்களா? என்ற கோணத்திலும் விசாரித்தனர். குறிப்பாக சென்னை புறநகர் பகுதியில் இருந்து விடுமுறை தினமான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிலர் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை நாடி வருவதுண்டு. அப்படி வந்த காமக்கொடூரன்கள் யாராவது இந்த பாலியல் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டு உள்ளனர்.
போலீசார் நேற்று விசாரணை செய்துவிட்டு சென்ற உடனேயே ஜெர்மனி நாட்டு தூதரக அதிகாரிகள் அந்த விடுதிக்கு சென்று, பாதிக்கப்பட்ட ஜெசினாவை சந்தித்து ஆறுதல் கூறினர். அவருக்கு நேர்ந்த கொடூரம் குறித்து விசாரித்தனர்.
பின்னர் அவரிடம் விரிவான அறிக்கையை எழுத்து மூலம் எழுதி வாங்கிக்கொண்டனர். உடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி போலீசாரிடமும் வலியுறுத்தினர். இந்தியாவுக்கான ஜெர்மனி தூதருக்கும் இது குறித்து தகவல் தெரிவித்தனர்.
சுற்றுலா வந்த இடத்தில் ஜெர்மனி பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிப்பதாகவும், சுதந்திரமாக வெளிநாட்டினர் நடமாடமுடியாத நிலை ஏற்பட்டு இருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
ஜெர்மனி பெண் ஜெசினா இன்று (செவ்வாய்க்கிழமை) விமானம் மூலம் ஜெர்மனி செல்ல இருப்பதால் எப்படி இந்த வழக்கை கையாள்வது?, எப்படி குற்றவாளிகளை அடையாளம் காண்பது? தெரியாமல் போலீசார் மிகுந்த குழப்பத்தில் உள்ளனர்.
இது குறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
குற்றவாளிகள் கைது செய்யப்பட்டால்தான் நடந்த சம்பவம் குறித்து முழு விவரம் தெரிய வரும். ஒரு வேளை குற்றவாளி பிடிபட்டால் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்கு முன்பாக அந்த பெண் மூலம் அடையாளம் காணச் செய்ய வேண்டும். தற்போது அவர், ஜெர்மனி செல்ல உள்ளார். மிகுந்த மன உளைச்சலில் உள்ள அவரை நாங்கள் கட்டாயப்படுத்தி தங்கி இருக்க செய்ய முடியாது.
வழக்கு நடக்கும் போது அவர் இங்கிருந்தால் குற்றவாளிகளை பிடிக்க எங்களுக்கு உறுதுணையாக இருக்கும். வெளிநாட்டு பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டு உள்ளது. மருத்துவ பரிசோதனை சான்று கிடைக்க பெற்றவுடன் எந்த மாதிரியான முறையில் பாலியல் சம்பவம் நிகழ்ந்து உள்ளது என்ற விவரமும் தெரிய வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நேற்று மாலை 6 மணி அளவில் காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. நஜ்மல்ஹோடா, மாமல்லபுரம் டி.எஸ்.பி. எட்வர்ட் மற்றும் தனிப்படை போலீசாருடன் தனது அலுவலகத்தில் அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது நாளைக்குள் (அதாவது இன்று) குற்றவாளிகளை பிடிக்க இந்த வழக்கில் தீவிரமாக துப்பு துலக்க வேண்டும் என்று தனிப்படையினருக்கு உத்தரவிட்டார்.
சம்பவம் நடந்த கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் தேடுதல் வேட்டையை துரிதப்படுத்தவும், போலீசாருக்கு அவர் பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். இதையடுத்து கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மீனவர் பகுதிகளில் குற்றவாளிகள் பதுங்கி உள்ளனரா? என போலீசார் அலசி ஆராய்ந்தனர். வாகன தணிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த வழக்கில் குற்றவாளிகளை பிடித்து தண்டிக்க ஜெர்மனி தூதரகத்தில் இருந்து அதிக நெருக்கடி கொடுப்பதால் போலீசார் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று விசாரித்து வருகின்றனர்.
சர்வதேச சுற்றுலா தளமான மாமல்லபுரத்துக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருவார்கள். தினமும் பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.
ஜெர்மன் நாட்டில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் 15 பேர் தமிழகத்துக்கு சுற்றுலா வந்தனர். லோமன் ஜெனு (38) என்கிற இளம் பெண்ணும் அவர்களுடன் வந்திருந்தார்.
மாமல்லபுரத்தில் நீண்ட நாட்கள் தங்க வேண்டும் என்கிற எண்ணத்தில் லோமன் ஜேனுவும், அவருடன் வந்திருந்தவர்களும் மாமல்லபுரம் ஒத்தவாடை தெருவில் உள்ள விடுதி ஒன்றில் அறை எடுத்தனர்.
அங்கு 15 நாட்களாக அவர்கள், தங்கி இருக்கிறார்கள். பல இடங்களுக்கு சென்று சுற்றி பார்த்துவிட்டு இரவில் மாமல்லபுரம் வந்து தங்கியுள்ளனர். திருவண்ணாமலை, ராமேஸ்வரம் காஞ்சீபுரம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வந்துள்ளனர்.

நேற்று மதியம் லோமன் ஜெனுவும் ஜெர்மனை சேர்ந்த 2 பெண்களும் மாமல்லபுரம் கடற்கரையில் சூரிய குளியலில் ஈடுபட திட்டமிட்டனர். இதற்காக மாமல்லபுரம் கடற்கரை கோவில் அருகே வலது புறத்தில் உள்ள காலியான இடத்துக்கு சென்றனர்.
அங்கு சூரியகுளியலில் ஈடுபட சிலர் இடையூறாக இருந்ததால் 3 பேரும் 5 கி.மீ தூரத்தில் பட்டிபுளம் கடற்கரை பகுதிக்கு நடந்து சென்றனர். பின்னர் அங்கு சூரியகுளியலில் ஈடுபட்டனர்.
லோமன் ஜெனுவும் மற்ற 2 பெண்களும் உள்ளாடைகளை மட்டும் அணிந்த நிலையில் கடற்கரை மணலில் படுத்து தனித்தனியாக சற்றுதூரத்தில் சூரிய குளியலில் ஈடுபட்டனர். அப்போது லோமன் ஜேனு அயர்ந்து தூங்கி விட்டார்.
ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்த அந்த பகுதிக்கு மர்ம நபர்கள் 3 பேர் வந்தனர். வெளிநாட்டு பெண் ஒருவர் தனியாக கடற்கரை மணலில் படுத்திருப்பதை பார்த்ததும் அவர்களது மனதில் விபரீத எண்ணம் ஏற்பட்டது. அவரை அடைய திட்டமிட்டனர்.
சூரிய குளியலில் ஈடுபட்டபடியே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த லோமன் ஜெனுவை வாயை பொத்தி குண்டு கட்டாக தூக்கி அங்கிருந்து கடத்திச்சென்றனர். அப்பகுதியில் இருந்த சவுக்குத் தோப்புக்கு அவரை கடத்திச் சென்ற 3பேரும் அங்கு வைத்து பாலியல் பலாத்காரம் செய்து கற்பழித்தனர்.
பின்னர் அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது. தனக்கு நேர்ந்த இந்த கொடுமையால் லோமன் ஜெனு கடும் அதிர்ச்சி அடைந்தார். சவுக்குத் தோப்பில் இருந்து பதட்டத்துடன் வெளியேறி கடற்கரைக்கு வந்த லோமன் ஜெனு, தான் கற்பழிக்கப்பட்டது பற்றி மற்ற 2 பெண்களிடமும் கூறி கதறி அழுதார்.
பின்னர் இது பற்றி மாமல்லபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. லோமன் ஜேனு அளித்த புகாரில், இந்தியர்கள் 3 பேர் தன்னை கற்பழித்துவிட்டதாக கூறி இருந்தார். இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி வழக்கு பதிவு செய்தார். சம்பவ இடத்துக்கு லோமன் ஜெனுவை அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.
சந்தேகத்துக்கிடமாக அப்பகுதியில் யாராவது சுற்றி திரிந்தார்களா? என்பது பற்றி மீனவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஜெர்மன் பெண் கற்பழிக்கப்பட்ட சம்பவம் பற்றி உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. காஞ்சீபுரம் டி.ஐ.ஜி. நஜ்மல் கோடா, போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி ஆகியோரும் உடனடியாக மாமல்லபுரத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இரவு 12 மணி வரையிலும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
கற்பழிப்பு புகார் கூறிய லோமன் ஜெனுவுக்கு செங்கல்பட்டு, மற்றும் சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ஆகியவற்றில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த சம்பவம் பற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி கூறும் போது மருத்துவ பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கிறோம். அது கிடைத்தவுடன் நடவடிக்கை தீவிரபடுத்தப்படும் என்றார்.
இதற்கிடையே ஜெர்மன் தூதரக அதிகாரிகளும் மாமல்லபுரம் வந்து லோமன் ஜெனுவிடம் விசாரணை மேற்கொண்டனர். தப்பி ஓடிய 3 பேரையும் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இதற்கிடையே ரஞ்சித் என்ற வாலிபர் பிடிபட்டிருப்பதாக தகவல் வெளியானது. இதனை போலீசார் உறுதி செய்யவில்லை.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அந்த விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த அருள்பீட்டர் தோஷ்வா (வயது 30), சிவகங்கையை சேர்ந்த ராஜசேகர் (32) ஆகியோர் சுற்றுலா விசாவில் துபாய்க்கு சென்று விட்டு திரும்பி வந்திருந்தனர்.
அவர்கள் இருவர் மீதும் சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள் 2 பேரையும் நிறுத்தி விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் இருவரும் அதிகாரிகளிடம் முன்னுக்குப்பின் முரணாகவே பேசினர். உடனே சுங்க இலாகா அதிகாரிகள் 2 பேரின் உடமைகளையும் சோதனை செய்தனர்.
அப்போது அவர்களிடம் 4 ‘எமர்ஜென்சி’ விளக்குகள் இருந்தன. அவற்றை பிரித்து பார்த்தபோது அதில் தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். அவர்களிடம் இருந்து 3½ கிலோ எடை கொண்ட 30 தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு ரூ.1 கோடியே 5 லட்சம் ஆகும்.
இதையடுத்து அருள்பீட்டர்தோஷ்வா, ராஜசேகர் ஆகிய இருவரையும் கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இவர்கள் இருவரும் யாருக்காக தங்க கட்டிகளை துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்தனர்? என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுற்றுலாத் தளமான மாமல்லபுரத்தில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இளம்பெண் மர்மநபர்களால் கற்பழிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சீபுரம் மாநிலம் மாமல்லபுரம் பகுதி நாட்டின் சிறந்த சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக உள்ளது. இதனால், ஆண்டு முழுவதும் உள்நாடு மற்றும் வெளிநாட்டிலிருந்து அதிகளவில் சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருவர். இந்நிலையில், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த 39 வயதான இளம்பெண் ஒருவர் மாமல்லபுரம் கடற்கரைப் பகுதியில் இன்று மர்ம நபரால் கற்பழிக்கப்பட்டார். தனியாக இருந்த போது அங்கு வந்த மர்மநபர், அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று மறைவிடத்தில் வைத்து கற்பழித்ததாக கூறப்படுகிறது.

பின்னர், தனக்கு நேர்ந்த இந்த கொடூர நிகழ்வு குறித்து அந்த பெண் போலீசில் புகாரளித்துள்ளார். புகாரின் பெயரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கடற்கரை பகுதியில் விசாரணை நடத்தி வரும் போலீசார், சந்தேகப்படும் படியான நபர்களை கைது செய்து அவர்களிடம் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். மேலும், சம்பவ இடத்தை மாவட்ட எஸ்.பி மற்றும் சரக டி.ஐ.ஜி ஆகியோர் பார்வையிட்டனர்.
திருப்போரூர்:
கேளம்பாக்கத்தை அடுத்த புதுப்பாக்கம் பாரதியார் தெருவில் வசித்து வந்தவர் தேவேந்திரன் (வயது45). வெல்டிங் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி வெண்ணிலா (40).
இவர்களுக்கு ஒருமகளும், 2 மகன்களும் உள்ளனர். கணவன்-மனைவி இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 6 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். தேவேந்திரனுடன் ஒரு மகனும், வெண்ணிலாவுடன் மற்ற இருவரும் வசித்து வருகிறார்கள். வெண்ணிலா காரப்பாக்கத்தில் தங்கி இருந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு தேவேந்திரனின் வீடு நீண்ட நேரம் திறக்கப்படாமல் இருந்தது. சந்தேகம் அடைந்த வீட்டின் உரிமையாளர் அறையின் ஜன்னலை திறந்து பார்த்தார்.
அப்போது அறையில் தேவேந்திரன் தூக்குபோட்டு தற்கொலை செய்திருந்தார். அருகே அவரது மனைவி வெண்ணிலா வாயில் துரை தள்ளியபடி இறந்து கிடந்தார்.
இதுகுறித்து கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து வீட்டின் அறைக் கதவை உடைத்து தேவேந்திரன், வெண்ணிலா உடலை மீட்டனர்.
விசாரணையில் 6 வருடமாக பிரிந்திருந்த கணவன்- மனைவி இருவரும் வீட்டில் நேற்று சந்தித்து உள்ளனர். அப்போதும் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. எனவே தேவேந்திரன், வெண்ணிலா தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து கேளம்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து கணவன்- மனைவி தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு அடுத்த ஈச்சங்கரணை பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் பசுபதி (வயது 22). டிரைவர்.
இவரும் அதே பகுதியை சேர்ந்த கன்னியப்பன் மகள் ரம்யா (21)வும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு இருந்தது.
இந்த நிலையில் கடந்த 25-ந்தேதி ரம்யா வீட்டை விட்டு வெளியேறினார். செங்கல்பட்டு அடுத்த புலிப்பாக்கம் மலைக்கோவிலில் ரம்யாவும், பசுபதியும் சந்தித்துக் கொண்டனர்.
பின்னர் இருவரும் திருப்பதி கோவிலுக்கு சென்றனர். அங்கு கடந்த 29-ந் தேதி இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் பசுபதியும், ரம்யாவும் காரில் செங்கல்பட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
செங்கல்பட்டை அடுத்த பச்சையம்மன் கோவில் அருகே வந்தபோது ரம்யாவின் அண்ணன் வினோத் 10 பேருடன் அங்கு வந்தார். அவர்கள் ரம்யாவை காரில் கடத்தி சென்றனர்.
இது குறித்து பசுபதி செங்கல்பட்டு டவுன் போலீசில் புகார் செய்தார். அதில், ‘தனது காதல் மனைவியை அவரது அண்ணன் 10 பேருடன் வந்து கடத்தி சென்று விட்டார்’ என்று கூறியிருந்தார் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
புதுப்பெண் ரம்யாவை மீட்கும் நடவடிக்கையில் போலீசார் இறங்கினர். ரம்யாவை அவரது அண்ணன், வீட்டுக்கு கொண்டு செல்லவில்லை. வேறு இடத்தில் கடத்தி சிறை வைத்திருக்கலாம் என்று தெரிகிறது. அவரை போலீசார் தேடிவருகிறார்கள்.
இதற்கிடையே கடந்த 25-ந்தேதி தனது மகள் மாயமாகி விட்டதாக ரம்யாவின் தாயார் பத்மாவதி செங்கல்பட்டு தாலுகா போலீசில் புகார் கொடுத்திருந்தார். அது தொடர்பாகவும் விசாரணை நடக்கிறது.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் அடுத்த தாமல் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் ராஜா. இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் தயாளன் (30) என்பவர் செல்வராஜிடம் 200 ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.
பலமுறை கேட்டும் கொடுக்காத நிலையில் நேற்று ராஜா தயாளனிடம் என் அப்பாவிடம் வாங்கிய பணத்தினை உடனே திருப்பிக் கொடு எனக் கேட்டுள்ளார். இதில் அவர்க ளுக்குள் வாக்குவாதம் ஏற் பட்டுள்ளது.
அப்போது தயாளன் ராஜாவின் மூக்கில் பலமாகத் தாக்கி விட்டு ஓடிவிட்டார். ராஜா திருப்புட்குழி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பி வந்து படுத்துள்ளார்.
ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் எழுந்திருக்காததால் ராஜாவின் மனைவி புஷ்பா அவரை காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றுள்ளார். பரிசோதனை செய்த டாக்டர் ராஜா இறந்து விட்டதாகத் தெரிவித்தார்.
இது குறித்து பாலு செட்டிசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
200 ரூபாய் பணத்திற்காக வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






