என் மலர்
செய்திகள்

காஞ்சீபுரம் அருகே ரூ.200 கடனை திருப்பிக்கேட்ட வாலிபர் கொலை
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் அடுத்த தாமல் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் ராஜா. இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் தயாளன் (30) என்பவர் செல்வராஜிடம் 200 ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.
பலமுறை கேட்டும் கொடுக்காத நிலையில் நேற்று ராஜா தயாளனிடம் என் அப்பாவிடம் வாங்கிய பணத்தினை உடனே திருப்பிக் கொடு எனக் கேட்டுள்ளார். இதில் அவர்க ளுக்குள் வாக்குவாதம் ஏற் பட்டுள்ளது.
அப்போது தயாளன் ராஜாவின் மூக்கில் பலமாகத் தாக்கி விட்டு ஓடிவிட்டார். ராஜா திருப்புட்குழி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பி வந்து படுத்துள்ளார்.
ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் எழுந்திருக்காததால் ராஜாவின் மனைவி புஷ்பா அவரை காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றுள்ளார். பரிசோதனை செய்த டாக்டர் ராஜா இறந்து விட்டதாகத் தெரிவித்தார்.
இது குறித்து பாலு செட்டிசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
200 ரூபாய் பணத்திற்காக வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






