என் மலர்
செய்திகள்

விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்டுடன் வந்த 3 பேர் கைது
சென்னை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்டுடன் வந்த 3 பேரை குடியுரிமை அதிகாரிகள் கைது செய்தனர். இந்த சோதனையில் ஏஜெண்டும் சிக்கினார்.
ஆலந்தூர்:
சென்னையில் இருந்து இன்று அதிகாலை துபாய் செல்லும் விமானத்தில் ஏற வந்த பயணிகளின் பாஸ்போர்ட்டை குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்தனர்.
அப்போது இலங்கையை சேர்ந்த சற்குணதாஸ், ஜனார்த்தனன், சவுந்தர ராஜன் ஆகிய 3 பேரின் பாஸ்போர்ட்டுகள் போலி என்று தெரியவந்தது.
இதையடுத்து 3 பேரிடம் விசாரணை நடத்தினர். 3 பேரும் ஒரு மாதத்துக்கு முன்பு இலங்கையில் இருந்து சென்னை வந்ததாகவும், தஞ்சையை சேர்ந்த சிவகுமார் என்ற வெளிநாட்டு வேலைக்கு அனுப்பும் ஏஜெண்டிடம் வெளிநாட்டுக்கு அனுப்ப கேட்டு கொண்டதால் அவர் போலி இந்திய பாஸ்போர்ட், விசா தயார் செய்து கொடுத்ததாக தெரிவித்தனர்.
மேலும் ஏஜெண்டு சிவக்குமார் விமான நிலையம் வெளியே நிற்பதாக தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு சென்று சிவக்குமாரையும் பிடித்தனர். கைதான 4 பேரிடம் தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது.

Next Story