என் மலர்tooltip icon

    செய்திகள்

    துரைப்பாக்கத்தில் 4 வீடுகளில் நகை-பணம் கொள்ளை
    X

    துரைப்பாக்கத்தில் 4 வீடுகளில் நகை-பணம் கொள்ளை

    துரைப்பாக்கத்தில் நேற்று ஒரே நாளில் 4 வீடுகளில் நடந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருவான்மியூர்:

    துரைப்பாக்கம் மேட்டு குப்பம் தலைமை செயலக குடியிருப்பை சேர்ந்தவர் செல்வராகவன். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் சுப்பிரமணி. 2 பேரும் அரசு ஊழியர்கள். அவர்கள் 2 பேரும் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றனர்.

    இதை அறிந்த மர்ம நபர்கள் செல்வராகவன் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே சென்று 1 லேப்டாப், ரூ.5 ஆயிரம் பணத்தையும், சுப்பிரமணி வீட்டு பூட்டை உடைத்து ரூ.3 ஆயிரம் மற்றும் 2 பவுன் நகை ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

    மேட்டுகுப்பம் வி.ஜி.பி. அவென்யூவை சேர்ந்தவர் நித்தியானந்தம். இவர் தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். அதை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதேபோல வி.ஜி.பி. அவென்யூவை சேர்ந்த கந்தன் என்பவரது மோட்டார் சைக்கிளையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்தும் துரைப்பாக்கம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். நேற்று ஒரே நாளில் 4 வீடுகளில் நடந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×