என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சீபுரம் ரவுடி ஸ்ரீதர் இலங்கையில் பதுங்கல்
    X

    காஞ்சீபுரம் ரவுடி ஸ்ரீதர் இலங்கையில் பதுங்கல்

    மோசடி வழக்கில் தேடப்படும் காஞ்சீபுரம் ரவுடி ஸ்ரீதர் இலங்கையில் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரை கைது செய்ய அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தை அடுத்த திருப்பருத்திகுன்றம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர். ரவுடி.

    இவர் மீது 7 கொலை வழக்கு, 12 கொலை முயற்சி வழக்கு உள்பட மொத்தம் 43 வழக்குகள் உள்ளன. இதையடுத்து ஸ்ரீதரை தேடப்படும் குற்ற வாளியாக போலீசார் அறிவித்தனர். மேலும் அவரைப் பற்றிய தகவல் கொடுப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    கடந்த 2013-ம் ஆண்டு துபாய் சென்ற ஸ்ரீதர் பின்னர் திரும்பி வரவில்லை. வெளிநாட்டில் இருந்தபடியே தனது ஆட்கள் மூலம் ஸ்ரீதர் தொடர்ந்து நிலமோசடி, ஆள் கடத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீதரின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் சொந்த ஊரான காஞ்சீபுரத்துக்கு வந்தனர். அவர்களிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து ஸ்ரீதரின் மனைவி, மகள் மற்றும் தம்பி ஆகியோர் பெயரில் உள்ள சொத்துக்களை அதிகாரிகள் முடக்கி னர். அந்த சொத்துக்களை பறிமுதல் செய்யும் பணி நடந்து வருகிறது.

    இதற்கிடையே தலை மறைவாக உள்ள ரவுடி ஸ்ரீதர் இலங்கையில் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரை கைது செய்ய அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறும் போது, “ஸ்ரீதருக்கு 2017-ம் ஆண்டு வரை துபாயில் தொழில் நடத்துவதற்கான விசா இருப்பதால் அங்கேயே வசித்து வந்தார். துபாயிலேயே அவரை பிடிக்க முயற்சி செய்த போது அங்கிருந்து தப்பி விட்டார்.

    அவர் போலி பாஸ்போர்ட் டில் இலங்கைக்கு தப்பி சென்று இருப்பதாக தகவல் கிடைத்து உள்ளது. கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்றனர்.
    Next Story
    ×