என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொன்னேரி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை
    X

    பொன்னேரி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை

    • 8 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள், பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    பொன்னேரி அருகே உள்ள சின்ன வேண்பாக்கம் செல்லியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் லோகம்மாள். இவர் கடந்த 14-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திருப்பதி சென்றார்.

    பின்னர் நேற்று காலை அவர்கள் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 8 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள், பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

    லோகம்மாள் குடும்பத்துடன் வெளியூர் சென்று இருப்பதை நோட்டமிட்டு மர்ம கும்பல் கைவரிசை காட்டி இருப்பது தெரிந்தது. இதில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்த நபர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இது குறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×