என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருக்குறுங்குடி அருகே ஜீப்- ஆட்டோ மோதல்
- தரை பாலத்தில் சென்ற போது ஆட்டோவும், ஜீப்பும் மோதி விபத்துக்குள்ளானது.
- படுகாயம் அடைந்த சந்தன குமார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
களக்காடு:
திருக்குறுங்குடி அருகே உள்ள தென்கரையை சேர்ந்தவர் சந்தனகுமார் (வயது 37 ). இவர் சம்பவத்தன்று திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவிலுக்கு ஜீப்பில் சென்று கொண்டிருந்தார். திருமலைநம்பி கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள தரை பாலத்தில் சென்ற போது எதிரே வந்த ஆட்டோவும், ஜீப்பும் மோதி விபத்துக்கு ள்ளானது. இதில் சந்தன குமார் படுகாயம் அடை ந்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்க ப்பட்டார். இதுபற்றி திருக்கு றுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விபத்தை ஏற்படுத்திய ஆட்டோவை ஓட்டி வந்த நம்பிதலைவன் பட்டயத்தை சேர்ந்த உதயா (21) மீது வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






