search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழக மாணவர்கள் டாக்டராவது சவாலாக உள்ளது- அமைச்சர் பேச்சு
    X

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

    தமிழக மாணவர்கள் டாக்டராவது சவாலாக உள்ளது- அமைச்சர் பேச்சு

    • நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினோம்.
    • இந்தியாவிலேயே முன்னோடி திட்டமாக காலை உணவு திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி உள்ளது.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டையில் நடை பெற்ற ஒரு திருமண விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-

    அஞ்சா நெஞ்சன் அழகிரி பிறந்த இந்த பட்டுக்கோட்டையில் நடைபெறுகின்ற இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் நான் பெருமை அடைகிறேன்.

    முத்தமிழ் அறிஞர் கலைஞர் தனது மகனுக்கு அழகிரி பெயரை சூட்டியுள்ளது மூலம் இந்தப் பட்டுக்கோட்டைக்கும் நமது கலைஞருக்கும் உள்ள நெருக்கம் தங்களுக்கு புரியும்.மணமக்கள் இருவரும் மருத்துவர்கள் அது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.

    ஏனென்றால் நமது தமிழ்நாட்டு மாணவர்கள் மருத்துவராவது மிகப்பெரிய சவாலாக உள்ளது.

    நம் வீட்டுப் பிள்ளைகள் மருத்துவராகும் கனவை தான் ஒன்றிய பாஜக அரசு நீட் தேர்வை கொண்டு வந்து எப்படி எல்லாம் பாழாக்குகிறது என்பது உங்களுக்கு நன்றி தெரியும்.

    5 நாட்களுக்கு முன்பு திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக தமிழ்நாடு முழுவதும் உண்ணாவிரதப் போராட்டத்தை நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்று உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினோம் .

    தி.மு.க. ஆட்சி அமைந்து 2 வருடங்களில் பல்வேறு நலத்திட்டங்களை நமது திராவிட மாடல் அரசு செய்து கொண்டிருக்கிறது. உங்களுக்கெல்லாம் நான் சொல்ல விரும்புவது மிக முக்கியமான திட்டம் 2 நாட்களுக்கு முன்பு தமிழக முதல்வர் திருக்குவளையில் ஒரு திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்கள்.

    அரசு பள்ளியில் 1 முதல் 5 வகுப்பு வரை படிக்கக்கூடிய குழந்தைகளுக்கு கிட்டத்தட்ட 18 லட்சம் மாணவர்கள், 31 ஆயிரம் அரசு பள்ளிகளில் விரிவாக்கப்பட்ட காலை உணவு திட்டம் தொடங்கியதன் மூலம் இந்தியாவிலேயே முன்னோடி திட்டமாக இத்திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி உள்ளது.

    இத்திட்டத்திற்காக மாணவர்களும் மாணவர்களின் பெற்றோர்களும் தமிழக முதல்வரை பாராட்டி வருகின்றனர்.

    இப்படி ஒரு சிறந்த திட்டத்தை நமது தமிழக முதல்வர் செயல்படுத்தி உள்ளார்.

    இப்படிப்பட்ட திராவிட மாநில அரசின் சாதனைகளை நீங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×