search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொள்ளிடம் கரையில் முன்னேற்பாடு பணிகள் ஆய்வு
    X

    முன்னேற்பாடு பணிகளை கலெக்டர், கொறடா ஆய்வு செய்தனர்.

    கொள்ளிடம் கரையில் முன்னேற்பாடு பணிகள் ஆய்வு

    • விவசாயிகள் தங்களது கால்நடைகளை நீர்நிலைகளின் வழியாக அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும்.
    • நமது மாவட்டத்தில் வெள்ள அபாயம் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகின்றன.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளது. இதனால் கொள்ளிடம் கரையில் முன்னேற்பாடு பணிகளை அரசு தல்லமை கொறடா கோவி. செழியன், மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பின்னர்அரசுதலைமை கொறடாகோவி.செ ழியன் அளித்த பேட்டியில் கூறியிரு ப்பதாவது:-

    காவிரி நீர்டிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையின காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. அணையில் இருந்து உபரி நீர் காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகள் மற்றும் கொள்ளிடம் ஆற்றில் 1.40 லட்சம் கன அடிக்கு மேல் திறந்து விடப்பட்டுள்ளது.

    எனவே காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் நீர்வரத்து அதிகமாக இருக்கும் என்பதால் ஆற்றின் கரையோர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

    அதன் அடிப்படையில் திருவையாறு தாலுகா, விளாங்குடி, செம்மங்குடி, பட்டுக்குடி, கூடத்தூர், குடிக்காடு, பாபநாசம் தாலுகா சருக்கை, புது குடிசை, தட்டுமால், கும்பகோணம் தாலுகா குடிதாங்கி, மகாராஜபுரம், அணைக்கரை வரை உள்ள கொள்ளிடம் கரையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

    காவிரி நீர் பாய்ந்து வரும் காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம் ஆறுகள் கால்வாய்கள் மற்றும் நீர்நிலைப் பகுதிகளில் பொது மக்கள் யாரும் குளிக்கவோ, நீச்சல் அடிக்கவோ, மீன்பிடிக்கவோ மற்றும் இதர பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம்.

    தன்ணீர் வரத்து அதிகமாக உள்ள அபாயகரமான இடங்களில் பொதுமக்கள் யாரும் தன்படம் (செல்பி) எடுப்பதை தவிர்க்க வேண்டும். கால்வாய்கள், ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் நீர் அதிகம் நிறந்து விடப்பட வாய்ப்பு உள்ளதால் அந்த பகுதிகளில் குழந்தைகளை விளையாடச் செல்லாமல் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    கரையை விட்டு தண்ணீர் வெளியே வராமல் இருக்க மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள பணியினை பார்வையிட்டு பொதுமங்கள் வெள்ளம் வந்தால் தங்குவதற்கு ஏதுவாக முன்னெச்சரிக்கை பணியாக பாதுகாப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ள இடத்தையும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

    விவசாயிகள் தங்களது கால்நடைகளை நீர்நிலைகளின் வழியாக அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும்.

    மேலும், நமது மாவட்டத்தில் வெள்ள அபாயம் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகின்றன. காவல்துறை, வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை ஆகிய துறைகளை ஒன்றிணைத்து பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பேரிடர் காலங்களில் தங்குவதற்கு ஏதுவாக அடிப்படை வசதிகளுடன் கூடிய 6 தற்காலிக பாதுகாப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது கும்பகோணம் கோட்டாட்சியர் லதா, நீர்ளைத்துறை உதவி செயற்பொறியாளர் அய்யம்பெருமாள், உதவி பொறியாளர் பூங்கொடி, பாபநாசம் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன், தாசில்தார்கள் பழனியப்பன், (திருவையாறு), மதுசூதனன், (பாபநாசம்), தங்கபிரபாகரன் (கும்பகோணம்) மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×