என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திட்டச்சேரி ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுமான பணிகள் ஆய்வு
    X

    திட்டச்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தை ஷா நவாஸ் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

    திட்டச்சேரி ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுமான பணிகள் ஆய்வு

    • காத்திருப்போர் கூடம் அமைக்கும் பணியை முழுமைப்படுத்த வேண்டும்.
    • அனைத்து பணிகளும் முடிந்து விரைவில் ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்படும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சியில் 15-ஆவது நிதிக்குழு சுகாதார மானியத்தின் கீழ், ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டும் பணி தொடங்கி முடிவ டைந்து திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது.

    இந்நிலையில் அங்கு சுற்றுச்சுவர், பேவர்பிளாக் நடைபாதை மற்றும் காத்திருப்போர் கூடம் அமைத்து பணியை முழுமை ப்படுத்த வேண்டுமென்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக அங்கு நேரில் ஆய்வு செய்த நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ், சட்டமன்ற உறுப்பி னர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அப்பணிகள் நடைபெறும் என்றும், விரைவில் அனைத்துப் பணிகளும் முடிந்து ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

    ஆய்வின் போது, திட்டச்சேரி பேரூராட்சி தலைவர் ஆயிஷா சித்தீக்கா, பேரூராட்சி உறுப்பினர்கள் முகம்மது சுல்தான், செய்யது ரியாசுதீன், சுல்தான் ரிதாவுதீன், பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×