search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மாவட்டத்தில் கைவிடப்பட்ட திறந்தவெளி கிணறு, குவாரி குழிகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்- கலெக்டர் கார்த்திகேயன் தகவல்
    X

    கலெக்டர் கார்த்திகேயன்

    நெல்லை மாவட்டத்தில் கைவிடப்பட்ட திறந்தவெளி கிணறு, குவாரி குழிகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்- கலெக்டர் கார்த்திகேயன் தகவல்

    • திறந்தவெளி கிணறுக்கு போதுமான உயரத்தில் உறுதியான சுவர்கள் கட்டப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
    • கைவிடப்பட்ட குவாரி குழிகளுக்கு உரிமையாளா்கள் உடனடியாக வேலி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் கைவிடப்பட்ட குவாரி குழிகள், திறந்தவெளி கிணறுகள் மற்றும் செயலிழந்த ஆழ்துளை கிணறுகளை கண்டறிய விரிவான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். மேலும், அவற்றின் இருப்பிடங்களின் பரிமாணங்கள் மற்றும் பிற தொடர்புடைய தகவல்களின் விரிவான பதிவை பராமரிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்கள்.

    திறந்தவெளி கிணறுக்கு போதுமான உயரத்தில் உறுதியான சுவர்கள் கட்டப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இதேபோல், செயலிழந்த ஆழ்துளை கிணறுகள் குறிப்பாக குழந்தைகளுக்கு ஆபத்தை விளை விக்கக்கூடிய கிணறுகள் உடனடியாக மூடப்பட வேண்டும். கைவிடப்பட்ட குவாரி குழிகளுக்கு சம்பந்தப்பட்ட உரிமையாளா்கள் உடனடியாக வேலி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அருகில் யாரும் செல்ல வேண்டாம், ஆபத்தான பகுதி என்ற எச்சரிக்கை பலகைகளை வைக்க வேண்டும். மேலும், சாலையோரங்களில் உள்ள கால்வாய்களில், சாலை பயன்பாட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, சாலை யோரங்களில் கட்டுமான பணிக்காக

    தோண்டப்படும் பள்ளங்கள் மற்றும் கால்வாய்களின் இருப்பை அறிவுறுத்தும் பொருட்டு டிரைவர்களுக்கு தெளிவாக தெரியும் வகையில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட வேண்டும். இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து பணிகளை விரைந்து செய்ய வேண்டும். மேலும் பொதுமக்கள் இதுகுறித்த தகவல்களை அருகில் உள்ள கிராம நிர்வாக அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×