search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சுதந்திர தினவிழா போட்டிகள்
    X

    விளையாட்டு போட்டிகளை துணைவேந்தர் திருவள்ளுவன் தொடங்கி வைத்தார்.

    தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சுதந்திர தினவிழா போட்டிகள்

    • வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகள் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள சுதந்திர தினவிழாவில் வழங்கப்படும் என்பதை தெரிவித்தார்.
    • கபாடி போட்டியில் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை மாணவர்கள் முதல் இடத்தையும், இலக்கியத்துறை மாணவர்கள் இரண்டாம் இடத்தையும் பெற்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 75-வது சுதந்திரதினத்தைச் சிறப்பிக்கும் வகையில், கவிதை, பேச்சு, கட்டுரை, சிலம்பம், நாடகம், இசைக் கருவி இசைத்தல், தனிநபர் பாடல், குழுப்பாடல், தனிநபர் நடனம், குழு நடனம், ஓவியம், ரங்கோலி, குழு வியைாட்டு, தடகள விளையாட்டு எனும் போட்டிகள் வருகிற 12-ந் தேதி நடக்கிறது.

    தமிழ்ப் பல்கலைக்கழகத் துறைகளுக்கு இடையில் நடத்தப்படும் இப்போட்டிகளின் தொடக்க நாளில் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி. திருவள்ளுவன் ஆடவர்களுக்கான கபாடிப் போட்டியையும் மகளிர்களுக்கான எறிபந்துப் போட்டியையும் தொடங்கிவைத்தார்.

    போட்டிகளைத் தொடங்கிவைத்து மாணவர்களை வாழ்த்திய துணைவேந்தர், உடல் நலன், மனநலன் எனும் இவற்றை மேம்படுத்தும் போட்டிகளில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துகொள்ள வேண்டும். பாதுகாப்பாகப் போட்டித் திறன்களை வெளிப்படுத்தும் நோக்கில் விளையாட வேண்டும். போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகள் 15.8.2022 அன்று தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள சுதந்திர தினவிழாவில் வழங்கப்படும் என்பதைத் தெரிவித்தார்.

    முதல்நாள் நடைபெற்ற ஆடவர் கபாடிப் போட்டியில் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை மாணவர்கள் முதல் இடத்தையும் இலக்கியத்துறை மாணவர்கள் இரண்டாம் இடத்தையும் பெற்றனர். மகளிர்களுக்கான எறிபந்துப் போட்டியில் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை மாணவியர்கள் முதல் இடத்தையும் இலக்கிய–த்துறை மாணவியர்கள் இரண்டாம் இடத்தையும் பெற்றனர். இந்நிகழ்வில் புலத்தலைவர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×