என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில் காய்கறிகளின் விலை உயர்வு
    X

    தஞ்சையில் காய்கறிகளின் விலை உயர்வு

    • பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொது மக்கள் பானைகள், அடுப்பு, கரும்பு, மஞ்சள் கொத்து, அச்சு வெல்லம் உள்ளிட்ட பொங்கலுக்கு தேவையான பொருட்களையும் வாங்கி வருகின்றனர்.
    • பொங்கல் பண்டிகைக்கு வழக்கத்தை விட காய்கறிகளின் தேவை அதிக அளவில் இருக்கும். இதனால் அவற்றின் விலையும் உயர்ந்து காணப்படும்.

    தஞ்சாவூர்:

    வருகிற 15-ந் தேதி தைப்பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. பின்னர் மாட்டுப்பொங்கல் , காணும் பொங்கல் உள்ளிட்ட அடுத்தடுத்து பண்டிகைகள் வருகின்றன.

    பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொது மக்கள் பொங்கல் பானைகள், அடுப்பு, கரும்பு, மஞ்சள் கொத்து, அச்சு வெல்லம் உள்ளிட்ட பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி வருகின்றனர்.

    பொங்கலன்று பல்வேறு வகையான காய்கறிகளைக் கொண்டு சமைப்பது வழக்கம். இதனால் பொங்கல் பண்டிகைக்கு வழக்கத்தை விட காய்கறிகளின் தேவை அதிக அளவில் இருக்கும்.

    இதனால் அவற்றின் விலையும் உயர்ந்து காணப்படும். தஞ்சையில் கடந்த சில நாட்களாகவே காய்கறி விலை உச்சத்தை தொட்டு வருகிறது.

    தஞ்சை அரண்மனை வளாகத்தில் செயல்படும் காமராஜர் காய்கறி மார்க்கெட்டில் காய்கறி விலை அதிகரித்துள்ளது.

    இந்த மார்க்கெட்டிற்கு கரூர், தூத்துக்குடி, தேனி, பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, நிலக்கோட்டை, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் கொண்டு வரப்படும்.

    பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்கள் தான் உள்ளது. இதனால் பொங்கல் பண்டிகைக்காக புதுமணத் தம்பதியினருக்கும் மற்றும் திருமணமான பெண்களுக்கு பெற்றோர்கள், சகோதரர்கள் சீர்வரிசை கொடுப்பது வழக்கம்.

    இதில் கரும்பு, வாழைத்தார், பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருட்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவையும் அடங்கும்.

    இதனால் தற்போது காய்கறிகள் விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது. மேலும் தற்போது பனி காரணமாக காய்கறிகள் விளைச்சலும் குறைவாக உள்ளது. இதனால் விலை கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது.

    கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி இன்று கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதே போல் முருங்கைக்காய் விலையும் கடுமையாக உயர்ந்து காணப்பட்டது.

    ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.140-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இதே போல் கத்தரிக்காய் கிலோ ரூ.100, வெண்டைக்காய் ரூ.80, மாங்காய் ரூ.120, அவரை ரூ.50, சின்ன வெங்காயம் ரூ.90 முதல் ரூ.110, பெரிய வெங்காயம் ரூ.30, பீட்ரூட் ரூ.50, மொச்சை ரூ.100, கருணைக்கிழங்கு ரூ.90, சவ்சவ் ரூ.25, கோவைக்காய் ரூ.90 -க்கு விற்பனை செய்யப்பட்டது.

    விளைச்சல் குறைவாக இருந்ததாலும் வரத்தை குறைவாக உள்ளதாலும் தேவை அதிகமாக இருப்பதாலும் காய்கறி விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×