search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசியல் உள்நோக்கத்தோடு வருமானவரி, அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது -  காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி பேச்சு
    X

    அரசியல் உள்நோக்கத்தோடு வருமானவரி, அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது - காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி பேச்சு

    • அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தொடக்க உரையாற்றினார்.
    • கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டம் என்பது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கொண்டு வரப் பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி காங்கிரஸ் கட்சி சார்பில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குச் சாவடி முகவர்கள் பயிற்சி பட்டறை மாநாடு தூத்துக்குடியில் உள்ள மாணிக்கம் மகாலில் நேற்று நடந்தது.

    தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சி.எஸ். முரளிதரன் முன்னிலை வகித்தார். ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. வரவேற்று பேசினார்.

    அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தொடக்க உரையாற்றினார். முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் சிறப்புரையாற்றி னார்.

    மாநாட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கி பேசியதாவது:-

    கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டம் என்பது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி யில் கொண்டு வரப் பட்டது.

    இது 15 கோடி குடும்பங் களை வறுமைப் பிடியிலிருந்து வெளியே கொண்டு வந்த திட்டம் என்று இந்திய அரசை பாராட்டி ஐ.நா. சபை நற்சான்றிதழ் வழங்கியது. தற்போது கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்திற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. எனவே வருகிற 15-ந் தேதி மத்திய அரசைக் கண்டித்து ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

    இந்தியாவில் இவ்வளவு மாநிலங்கள் இருந்தும் பா.ஜனதா ஆளும் மாநி லங்கள் மற்றும் பா.ஜனதா ஆதரவு மாநிலங்களில் ஏன் வருமான வரித்துறை சோதனை நடைபெற வில்லை. தமிழக மக்கள் மிகவும் அறிவுபூர்வமா னவர்கள்.

    அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு ஒருத் தரப்புக்கு எதிராக செயல் படுவதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

    இந்த வருமான வரி சோதனை, அமலாக்கத்துறை சோதனை ஆகியவை அரசியல் உள்நோக்கத்தோடு நடைபெறுகிறது. இந்த சோதனைகளால் இந்தியா கூட்டணி வலிமை குறையாது. தமிழகத்தில் உள்ள தி.மு.க. அமைச்சர்கள் மீதான வருமான வரி சோதனை என்பது அதிகா ரத்தை கையில் வைத்துக் கொண்டு ஒரு கட்சிக்கு எதிராக செயல் படுவதாகவே பார்க்கிறோம். இதனை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

    தமிழகத்திற்கு தொந்தரவு கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்த சோதனை கள் நடை பெறுகிறது. இதற்காக நாங்கள் தலைகுனிய மாட்டோம், நிமிர்ந்து நிற்போம்.

    மதசார்பின்மை என்ற நேர்கோட்டில் காங்கிரஸ், தி.மு.க, ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் என அனைத்து கட்சிகளும் ஒரே நேர்கோட் டில் உள்ளது. பயிற்சி பட்டறை மூலமாக சொல்வது என்னவென்றால் உங்கள் தெருக்களில் ஒரு காங்கிரஸ் கொடியை ஏற்றுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலா ளர் விஸ்வநாதன், விஜய் ஆனந்த் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்கள் ராஜேஷ் குமார், விஸ்வநாதன், ஜே.ஜே.பிரின்ஸ், அசோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×