search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கருங்குளம் யூனியனில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்க விழா
    X

    கருங்குளம் ஊராட்சி ஒன்றியக் சேர்மன் கோமதி ராஜேந்திரன் மரக்கன்று நடவுப் பணியை தொடங்கி வைத்தபோது எடுத்தபடம்.

    கருங்குளம் யூனியனில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்க விழா

    • 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்க விழா கருங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
    • கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிட்டுள்ளோம்.

    தென்திருப்பேரை:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாகவும், தமிழ்நாடு முதல் -அமைச்சரின் கனவுத் திட்டமான பசுமை தமிழ்நாடு திட்டத்தின் ஒரு பகுதியாகவும் தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டு அறக்கட்டளை (கூட்டமைப்பு) சார்பில் கலைஞர் நூற்றுக்கு நூறு என்ற அடிப்படையில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்க விழா செய்துங்கநல்லூரில் உள்ள கருங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

    தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டு அறக்கட்டளை (கூட்டமைப்பு) மாநில தலைவரும், தூத்துக்குடி மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினருமான எம்.ஏ. தாமோதரன் தலைமையில் ஊராட்சி ஒன்றிய ஆணை யர் முத்து கிருஷ்ணராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர் அரவிந்தன் ஆகியோர் முன்னி லையில் நடை பெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கருங்குளம் ஊராட்சி ஒன்றியக் சேர்மன் கோமதி ராஜேந்திரன் கலந்து கொண்டு மரக்கன்று நடவுப் பணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலக மேலா ளர் சித்தார்தன், துணை வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் ஆனந்த சுப்பு லெட்சுமி, கண்ணன், ஒன்றிய பணி மேற்பா ர்வை யாளர் பத்மகலா மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் எஸ். தன லட்சுமி, நியூ பாசகரங்கள் முத்துப்பாண்டி, பனையூர் வின்ஸ்டன், முருகேஸ்வரி, மதுரிதா அறக்கட்டளை இயக்குனர் சந்திரசேகரன் ஆகி யோர் மரக்கன்று நடவுப் பணியை மேற்கொண்டனர்.

    முடிவில் தமிழ்நாடு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டமைபு தலைவர் எம்.ஏ. தாமோரதான் பேசுகையில் சுற்றுச் சூழலை பாதுகாத்து பூமியில் அதிகரித்துவரும் வெப்பத்தை குறைக்கவும், பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த நாட்டின் பசுமைப் போர்வையை மேம்படுத்தவும், 2023-ம் ஆண்டு முழுவதும் கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் பாதுகாப்பான இடங்களில் எங்களது தமிழ்நாடு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் நடவு செய்ய திட்டமிட்டுள்ளோம் என கூறினார். விழா வுக்கான ஒருங்கிணைப்பு பணியை தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகி ராஜேந்திரன் செய்திருந்தார்.

    Next Story
    ×