என் மலர்
உள்ளூர் செய்திகள்

கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.
தஞ்சை மாவட்டத்தில், நாளை பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்- கலெக்டர் தகவல்
- நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை 9 வட்டங்களிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
- பொதுமக்களுக்கு குறைகள் ஏதுமிருப்பின் மனுக்களை அளித்து பயன்பெறலாம்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
பொது விநியோகத் திட்டத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின், அதனைக் மாவட்டத்தில் களைவதற்கும், மக்களின் குறைகளைக் கேட்டு அவற்றை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கும் ஒவ்வொரு மாதமும் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும் பொது விநியோகத் திட்டம் தொடர்பாக பொது மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடத்திட சென்னை, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளரால் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி இந்த மாதத்திற்கான பொது விநியோகத் திட்ட மக்கள் குறை தீர்க்கும் கூட்டம், நாளை ( சனிக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும் நடத்திட திட்டமிடப்ப ட்டுள்ளது.
எனவே, பொது மக்களுக்கு குறைகள் ஏதுமிருப்பின் தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலரிடம் மனுக்களை அளித்துப் பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.