search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில், உலக வாய் சுகாதார தின விழிப்புணர்வு பேரணி- மேயர் தொடங்கி வைத்தார்
    X

    விழிப்புணர்வு பேரணியை மேயர் சண் ராமநாதன் தொடங்கி வைத்தார்.

    தஞ்சையில், உலக வாய் சுகாதார தின விழிப்புணர்வு பேரணி- மேயர் தொடங்கி வைத்தார்

    • சாப்பிட்ட பிறகு தவறாமல் வாய் கொப்பளிக்க வேண்டும்.
    • விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு அண்ணா சாலை வழியாக பேரணியாக புறப்பட்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ரெயிலடியில் இன்று இந்திய பல் மருத்துவ சங்கம் சார்பில் உலக வாய் சுகாதார தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இதற்கு தஞ்சாவூர் கிளை தலைவர் டாக்டர் ராமகிருஷ்ணன், செயலாளர் இலியாஸ் பாட்ஷா, பொருளாளர் ரவிக்குமார், சி.டி.எச்.கன்வீனர் பொன்மொழி ஆகியோர் தலைமை தாங்கினர்.

    தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, சுகாதாரத்துறை துணை இயக்குனர் நமச்சிவாயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பேரணியை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் பல் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, தினமும் இரு முறை பல் துலக்க வேண்டும், 6 மாதத்திற்கு ஒரு முறை பரிசோதனை செய்ய வேண்டும், சாப்பிட்ட பிறகு தவறாமல் வாய் கொப்பளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு அண்ணா சாலை வழியாக பேரணியாக புறப்பட்டனர்.

    பழைய பஸ் நிலையம் அருகே பேரணி முடிவடைந்தது.

    இதில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், பல் மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×