என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவையில் மூதாட்டியிடம் செயின் பறிப்பு
- மூதாட்டி தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.
- 2 வாலிபர்கள் கழுத்தில் அணிந்திருந்த செயினை பறித்து தப்பிச்சென்றனர்.
குனியமுத்தூர்
கோவைப்புதூர் அருகே உள்ள நேதாஜி நகரை சேர்ந்தவர் அலெக்ஸ் உதயராம். இவரது மனைவி அல்போன்ஸ் ரீட்டா (வயது 63). சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் உள்ள ஆலயத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் அல்போன்ஸ் ரீட்டா கழுத்தில் அணிந்திருந்த 4½ பவுன் தங்க செயினை பறித்து தப்பிச்சென்றனர்.இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவருக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள், அல்போன்ஸ் ரீட்டாவை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மூதாட்டியிடம் செயினை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகின்றனர்.
Next Story