search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் தேசிய மக்கள் நீதிமன்றம்
    X

    கோவையில் தேசிய மக்கள் நீதிமன்றம்

    • 11-ந் தேதி நடக்கிறது.
    • உடனடி தீா்வினை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொ ள்ளப்படுகிறது.

    கோவை

    கோவையில் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) பிப்ரவரி 11-ந் தேதி நடைபெறுகிறது.

    இது குறித்து கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிரு ப்பதாவது:-

    தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின்படியும், மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் வழிகாட்டு தலின்படியும், கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் வருகிற பிப்ரவரி 11-ந் தேதி (சனிக்கிழமை) கோவை மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்திலும் மற்றும் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, சூலூா், மதுக்கரை கோர்ட்டு வளாகங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற உள்ளது.

    இந்த மக்கள் நீதிமன்றம் மூலம், நிலுவையிலுள்ள சமரசம் செய்யக்கூடிய, வழக்குகள், காசோலை வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், நில ஆா்ஜித வழக்குகள் மற்றும் தொழிலாளா் சம்பந்தப்பட்ட வழக்குகள் மற்றும் நிலுவையில் இல்லாத வழக்குகள் போன்ற வழக்குகளுக்கு உடனடியாக தீா்வு பெற்றுக் கொள்ளலாம்.

    எனவே மேற்கண்ட வழக்குகளுக்கு தீா்வு காண்பதற்காக, கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சாா்பில் மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் உள்ள கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் வரும் பிப்ரவரி 6-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை சிறப்பு அமா்வுகள் நடைபெற உள்ளன.

    எனவே வழக்காடிகள் மற்றும் பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது வழக்குகளுக்கு உடனடி தீா்வினை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொ ள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×