என் மலர்
உள்ளூர் செய்திகள்

புவனகிரியில் புகையிலைபொருட்கள் விற்ற 2 பெட்டிக்கடைக்காரர்கள் கைது
- புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
- புவனகிரி பங்களா பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர்.
கடலூர்:
புவனகிரியில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பாக்கு மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து புவனகிரி இன்ஸ்பெக்டர் சரஸ்வதி மற்றும் போலீசார் புவனகிரி பங்களா பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது பாபு (வயது 43), சுரேஷ் (43) ஆகியோர் தனித்தனியே நடத்தி வந்த கடைகளில், ஹான்ஸ், பான்பராக் போன்றவைகள் கட்டுகட்டாக இருந்தது. இதனை பறிமுதல் செய்த போலீசார், 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story






