என் மலர்
உள்ளூர் செய்திகள்

அன்னூரில்மன்னீஸ்வரர் கோவில் தேரோட்டம்
- 3-ந் தேதி நடைபெற உள்ளது.
- போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
அன்னூர்,
அன்னூரில் 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த மன்னீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் தேர்த்திரு விழா வருகிற 3-ந் தேதி நடைபெற உள்ளது.
கோவை மாவட்டம், அன்னூரில் சுமார் 1300 ஆண்டு பழமை வாய்ந்த அருந்தவச்செல்வி உடன மர் ஸ்ரீ மன்னீஸ்வர சுவாமி கோவில் உள்ளது.
இக்கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் தேரோட்டம் வெகுவிம ரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன் ஒரு பகு தியாக நடப்பாண்டின் தேர்த்திருவிழா கடந்த 27-ந் தேதி கிராம தேவதை வழி பாடு, கிராம சாந்தியுடன் தொடங்கியது.
அதனை தொடர்ந்து நேற்று கோவிலில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து தினமும் பல்வேறு அலங் காரமும், அபிஷேக ஆராத னைகளும் நடைபெற உள்ளன. ஜனவரி 2-ந் தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. விழா வின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித் தல் நிகழ்ச்சியானது 3-ந் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 8 மணிக்கு அருந்தவச் செல்வி உடனமர் மன்னீஸ் வரர் சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
பகல் 11 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியானது நடைபெற உள்ளது. கோவை,திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்ள உள்ள தால் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடு பட உள்ளனர்.






