என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  நெல்லையில் மின்னகம் மூலம் பெறப்படும் புகார்களுக்கு உடனடி தீர்வு - மின்வாரிய அதிகாரிக்கு பாராட்டு
  X

    மின் பொறியாளர் ராஜன்ராஜ் பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். 

  நெல்லையில் மின்னகம் மூலம் பெறப்படும் புகார்களுக்கு உடனடி தீர்வு - மின்வாரிய அதிகாரிக்கு பாராட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இந்தியாவிலேயே முதன்முறையாக மின் நுகர்வோர்கள் நேரடியாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலகமான சென்னையில் அமைக்கப்பட்ட மின் நுகர்வோர் சேவை மையம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.
  • இதற்காக மின்னகம் என்ற பெயரில் தொலைபேசி எண் 94987 94987 அறிவிக்கப்பட்டது.

  நெல்லை:

  தமிழக மின்சார துறையின் சீரிய முயற்சியால் இந்தியாவிலேயே முதன்முறையாக மின் நுகர்வோர்கள் நேரடியாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலகமான சென்னையில் அமைக்கப்பட்ட மின் நுகர்வோர் சேவை மையம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.

  இதற்காக மின்னகம் என்ற பெயரில் தொலைபேசி எண் 94987 94987 அறிவிக்கப்பட்டது.

  அதில் நெல்லை மின் பகிர்மான வட்டத்தில் மின்தடை குறை கேட்கும் மையத்தின் இளநிலை மின் பொறியாளராக பணிபுரியும் கோவிந்தராஜ் மின்னகத்திலிருந்து பெறப்படும் புகார்களை உடனுக்குடன் சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலகத்தை தொடர்பு கொண்டு மின் நுகர்வோர்களின் தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்தமைக்காக மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் ராஜன்ராஜ் பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

  இந்நிகழ்ச்சியில் நெல்லை மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் வெங்கடேஷ் மணி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×