search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல் கொள்முதல் செய்ய விவசாயிகளிடம் கையூட்டு பெற்றால் நடவடிக்கை- கலெக்டர் எச்சரிக்கை
    X

    கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

    நெல் கொள்முதல் செய்ய விவசாயிகளிடம் கையூட்டு பெற்றால் நடவடிக்கை- கலெக்டர் எச்சரிக்கை

    • 2 லட்சத்து 22 ஆயிரத்து 515 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
    • விவசாயிகளை காக்க வைக்காமல் உடனுக்குடன் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூா் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சை மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் இதுவரை 1 லட்சத்து 88 ஆயிரத்து 629 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நடப்பு கொள்முதல் பருவத்தில் 41 ஆயிரத்து 390 விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட தொகை ரூ.404 கோடியாகும்.

    தற்போது 522 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பாட்டில் இருந்து வருகிறது.

    நடப்பு கே.எம்.எஸ் 2022-23 கொள்முதலானது கடந்த ஆண்டு செப்டம்பர் 1 முதல் தொடங்கப்பட்டு குறுவை பருவத்தில் 391 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 2 லட்சத்து 22 ஆயிரத்து 515 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

    இதன் மூலம் விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.475 கோடி செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 46 ஆயிரத்து 596 விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர்.

    மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் அலுவலர்கள் விவசாயிகளிடம் போது மான ஆவணங்களை மட்டும் பெற்றுக்கொண்டு நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் அவர்களிடம் கையூட்டு பெறாமலும் விவசாயிகளை காக்க வைக்காமலும் உடனுக்குடன் நெல்லினை கொள்முதல் செய்ய வேண்டும்.

    வியாபாரிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்யக்கூடாது எனவும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கியும் முறைகேட்டில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் சுமைதூக்கும் பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டும் வருகிறது.

    இது தொடர்பாக தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் நிர்வாக இயக்குநர் பிரபாகரன் தஞ்சாவூர் மண்டலத்தில் மருங்குளம், தென்னமநாடு மற்றும் அன்னப்பன்பேட்டை ஆகிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நேரடியாக ஆய்வு செய்தார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×