search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி மறைமாவட்ட நூற்றாண்டு விழா: சாதி, மதம் கடந்து மனிதநேயம் வளர வேண்டும் - கனிமொழி எம்.பி பேச்சு
    X

    நூற்றாண்டு விழாவில் கனிமொழி எம்.பி. பேசிய காட்சி. அருகில் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் உள்ளனர்.

    தூத்துக்குடி மறைமாவட்ட நூற்றாண்டு விழா: 'சாதி, மதம் கடந்து மனிதநேயம் வளர வேண்டும்' - கனிமொழி எம்.பி பேச்சு

    • கூட்டத்திற்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார்.
    • எல்லா உயிர்களையும் ஒன்றாக மதிக்க கூடிய சமூகத்தில் கருத்து வேறுபாடு இல்லை என்று கனிமொழி எம்.பி பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மறைமாவட்ட நூற்றாண்டு விழா, சமய சமூக அரசியல் நல்லிணக்க விழா சின்னக்கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

    அமைச்சர்கள்

    சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார். நூற்றாண்டு ஓருங்கிணைப்பு குழு ஜேம்ஸ்விக்டர், தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி ஆகியோர் வரவேற்று பேசினர்.

    வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும். மீனவர்நலன் மற்றும் கால்நடைத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், தமிழக சிறுபான்மையினர் நல ஆணையர் பீட்டர் அல்போன்ஸ், மேயர் ஜெகன் பெரியசாமி, அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தேசிய தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் சண்முகம், பெனோ வென்சர்ரோச், கான்ஸ்டான்டின் ரவீந்திரன், உள்பட பலர் வாழ்த்தி பேசினர்.

    கனிமொழி எம்.பி.

    விழாவில் கனிமொழி எம்.பி., கலந்து கொண்டு பேசியதாவது:-

    இன்று சமூகத்தில் இருக்க கூடிய மதநல்லிணக்கத்தை சீர்குலைக்க வேண்டும் என்று சிலர் விரும்புகிறார்கள். எல்லா உயிர்களையும் ஒன்றாக மதிக்க கூடிய சமூகத்தில் கருத்து வேறுபாடு இல்லை. தமிழக சமூக மக்களின் ஆணிவேர் அடித்தளங்களை உடைத்து நொருக்கப்பட வேண்டும் என்று சிலர் காழ்ப்புணர்ச்சி யோடு பணியாற்றுகின்றனர்.

    மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இந்த விழா நடைபெறுகிறது. நான் படித்த கல்லூரியில் தான் ஜெயலலிதாவும் படித்தார். எங்கேயும் மதம் மாற வேண்டும் என்று யாரும் கட்டாயபடுத்தியது கிடையாது. ஆனால் ஜெயலலிதா ஆட்சியில் தான் மதமாற்ற தடை சட்டம் கொண்டு வந்தார்.

    பெரியாரின் கொள்கை

    நான் கல்லூரி படிக்கும் போது பெரியாரின் கொள்கையை பின்பற்றி அவ்வழியில் சென்றேன். பெண்கள் ஒரு காலத்தில் பாதிக்கப்பட்ட சமயங்களில் அவர்களுக்கான உரிமை, உடமை போன்ற பல்வேறு முடிவுகளுக்கு கிறிஸ்தவ சபை துணை நின்றது. பெரும் மகிழ்ச்சி என்னவென்றால் கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாடும் வேலையில் இங்கு மறைமாவட்ட நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது.

    கலைஞர் கருணாநிதி சமூகநீதி ஓடுக்கப்பட்ட மக்க ளுக்காக விடிவெள்ளியாக இருந்தார். அதே வழியில் நீங்களும் பயணிக்க வேண்டும். எந்த நெருக்கடிகள் மற்றும் உழைப்பவர்களுக்குரிய பாகுபாடுகள், பிரிவினை, உரிமை பறிப்பு, சமூகநீதி, கருத்து சொல்லக்கூடாது போன்ற பிற்போக்கு சிந்தனையாளர்களுக்கு தமிழகத்தில் இடமில்லை.

    போராட்டங்கள், அடையாளங்கள், சுயமரி யாதை, இந்து, கிறிஸ்தவம், முஸ்ஸீம், அனைவரும் சாதி, மதம் கடந்து மனிதநேயத்தோடு பழகி வரும் வேளையில் அவற்றை பிரித்தாலும் சூழ்ச்சிக்கு நாம் இடமளிக்க கூடாது. கடந்து வந்த பாதையை மறக்காமல் நமது உரிமையை பாதுகாத்து அடுத்து வரும் தலைமுறைக்கு தெரியும் வகையில் நம் செயல்பாடுகள் இருக்க வேண்டும்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞர் நூற்றாண்டு விழாவின் போது அடுத்து இந்தியாவை வழிநடத்த யார் வரவேண்டும், யார் வரக்கூடாது என்று பேசிய உறுதியான முடிவை அனைவரும் பின்பற்ற வேண்டும். ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும்.

    இவ்வாறு பேசினார்.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்சியில் முன்னாள் மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ், துணை மேயர் ஜெனிட்டா, அகில இந்திய காங்கிரஸ் மீனவர் தேசிய செயலாளர் ஜோர்தான், மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன், தூத்துக்குடி மாவட்ட மீனவர் காங்கிரஸ் பி.சி.சி. உறுப்பினர் தலைவர் ஆன்றனி சுரேஷ், தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஏ.டி.எஸ். அருள், மாநகர் மாவட்ட மீனவர் காங்கிரஸ் தலைவர் ஜான்சன் தல்மெய்தா, துணைத்தலைவர் இருதயராஜ் மஸ்கர்னாஸ், செயலாளர் ஜோ பர்னாந்து, தூத்துக்குடி மாநகர் கிழக்கு மண்டல காங்கிரஸ் தலைவர் ஐசன் சில்வா, மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன். மாநில வர்த்தக அணி இணைச்செய லாளர் உமரிசங்கர், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம்,தி.மு.க. மீனவர் அணி இணை செயலாளர் புளோரன்ஸ் கலாபன்வாஸ், ஜேசையா வில்லவராயர், வக்கீல் கயஸ், கவுன்சிலர்கள் சந்திரபோஸ், பவாணி மார்ஷல், விடுதலை சிறுத்தை மாவட்ட தலைவர் அகமது இக்பால், பெரியார் திராவிட கழகம் பால்பிரபாகரன், கண்ணன் பட்டர், மாவட்ட அரசு ஹாஜி முஜீபர் ரகுமான், தூத்துக்குடி நாசரேத் திருமண்டல குருத்துவ காரியதரிசி இம்மானுவேல் வான்ஸ்டக், ஹெர்மன்கில்ட், மற்றும் செந்தில்குமார், பேச்சிமுத்து, பிரபாகர், அல்பட், லிங்கராஜா, பெல்லா, வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல், மறைமாவட்ட பொருளாளர் சகாயம், மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர்செல்வம், நூற்றாண்டு வரவேற்பு குழு எட்வர்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மைக்கேல் ஜெகதீசு நன்றி கூறினார்.

    முன்னதாக நூற்றாண்டு விழாவையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய வாழ்த்து கடிதத்தை சபாநாயகர் அப்பாவு, மறைமாவட்ட ஆயரிடம் வழங்கினார்.

    Next Story
    ×