என் மலர்
உள்ளூர் செய்திகள்

மயிலாப்பூரில் வீடு புகுந்து கொலை: துணை கமிஷனர் அலுவலகத்தில் வாலிபர் சரண்
- கொலை சம்பவம் தொடர்பாக மயிலாப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கள்ளக் காதல் தகராறில் பிரசன்னா கொலை செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை மயிலாப்பூரில் பிரசன்னா என்ற வாலிபர் வீடு புகுந்து கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். கடந்த 24-ந் தேதி நடைபெற்ற இந்த கொலை சம்பவம் தொடர்பாக மயிலாப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கள்ளக் காதல் தகராறில் பிரசன்னா கொலை செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே பகுதியை சேர்ந்த டொமினிக் என்பவர் தனது ஆட்களை திரட்டி பிரசன்னாவை கொலை செய்திருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக சீனிவாசன் என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு உள்ளார். சாந்தோம் டிமாண்டி காலனியை சேர்ந்த அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து இந்த வழக்கில் மற்றவர்களை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் தரமணியை சேர்ந்த முருகேசன் என்ற வாலிபர் மயிலாப்பூர் துணை கமிஷனர் அலுவலகத்தில் சரணடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






