search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி சாலையில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் கடும் போக்குவரத்து நெருக்கடி
    X

    தூத்துக்குடி சாலையில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் கடும் போக்குவரத்து நெருக்கடி

    • தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் இருந்து குரூஸ் பர்னாந்து சிலை வரை கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
    • எனவே நெருக்கடியான பகுதிகளில் முறையான போக்குவரத்து மாற்றங்கள் செய்து அறிவிப்பு வெளியிட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்கள் களைகட்டி வருகிறது. இதனால் மார்க்கெட் மற்றும் பஸ் நிறுத்தங்களில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.

    சென்னையில் காவல்துறை சார்பில் தீபாவளி கால நெருக்கடியை சமாளிக்கும் வகையில் பஸ் போக்குவரத்து, இருசக்கர வாகன போக்குவரத்துகள் மாற்றம் செய்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

    அதுபோல தூத்துக்குடி யிலும் ஏற்பட்டுள்ள கடுமை யான போக்குவரத்து நெருக்கடியினை கருத்தில் கொண்டு அதனை முறைப்படுத்தும் வகையில் போக்குவரத்துக்களை மாற்றம் செய்து அறிவிப்பினை வெளியிட வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அதில் தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் இருந்து குரூஸ் பர்னாந்து சிலை வரை கடுமையான போக்குவரத்து நெருக்கடி இருப்பதால் அது ஒரு வழி பாதையாக இருப்பினும் வாகனங்கள் அனைத்தும் சாலையில் நிறுத்தப்படுவதால் பொதுமக்கள் நடந்து செல்ல கூட முடியாத நிலை உள்ளது.

    எனவே இந்தப் பகுதி உட்பட நெருக்கடியான பகுதிகளில் முறையான போக்குவரத்து மாற்றங்கள் செய்து அறிவிப்பு வெளியிட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி முள்ளக்காடு பஸ் நிறுத்தத்தை மறைத்து விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளதால் தீபாவளி பண்டிகை தினத்தில் பஸ் நிலையத்திற்கு வந்த பெண்கள் பொதுமக்கள் சாலையில் விபத்து ஏற்படும் வகையில் நின்று பஸ் எதிர் பார்க்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்தும் உரிய நடவடிக்கை சம்பந்தப்பட்ட துறையினர் எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×