என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கனமழை எதிரொலி; தஞ்சை பெரியகோவிலில் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்தது
    X

    இடைவிடாது பெய்த மழையால் தஞ்சை பெரியகோவிலில் வழக்கத்தை விட பக்தர்கள் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது.

    கனமழை எதிரொலி; தஞ்சை பெரியகோவிலில் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்தது

    • இன்று அதிகாலை முதல் தஞ்சை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இடைவிடாது கனமழை.
    • பக்தர்கள், சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வழக்கத்தை விட குறைவு.

    தஞ்சாவூர்:

    உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் தமிழர்களின் கட்டிட கலைக்கு சிறந்த எடுத்து காட்டாக திகழ்கிறது.

    உலக பாரம்பரிய சின்னமாக விளங்கும் பெரியகோவிலை சுற்றி பார்க்க தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளி நாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வருவது வழக்கம்.

    கடந்த சில நாட்களாக அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வந்து கொண்டிருந்தனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் தஞ்சை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.

    மதியம் 2 மணி வரை தொடர்ந்து மழை கொட்டியது. இதனால் இன்று பெரிய கோவிலில் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வழக்கத்தை விட குறைவாகவே காணப்–பட்டது. அவர்களும் குடைபிடித்தபடி பெரிய கோவிலை சுற்றி பார்த்து விட்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மாலை 4 மணி வரை பெரிய கோவிலில் பக்தர்கள் எண்ணிக்கை குறைவாக தான் இருந்தது.

    மழை ஓய்ந்த பிறகு மீண்டும் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.

    Next Story
    ×